Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்தோஷமாக மேடையில் அவார்ட் வாங்கிய ஜீவி பிரகாஷ்.. அப்போது சைந்தவி செய்த நெகிழ வைத்த செயல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று விருது வழங்கப்பட்ட போது இசை அமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷுக்கு விருது வழங்கும் போது சைந்தவி செய்த செயல் குறித்து இணையத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சென்னையில் சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழா டிசம்பர் 19ஆம் தேதி உடன் நிறைவு பெற்றது. இதில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர்கள், நடிகை, இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என்று மொத்தம் 26 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

gv prakash saindhavi

அமரன் திரைப்படம்: இந்த விருதில் அமரன் திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக இயக்குனர் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் மகேந்திரன் ஆகிய இருவருக்கும் விருது உட்பட தலா ஒரு லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அதுபோல இரண்டாவது சிறந்த படமாக லப்பர் பந்து திரைப்படம் தேர்வானது. அதற்கு இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து மற்றும் தயாரிப்பாளர் லட்சுமணன் ஆகியோருக்கு விருது மற்றும் ஐம்பதாயிரம் பரிசு வழங்கப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளர் விருது: அதுபோல அமரன் திரைப்படத்தில் இசை அமைத்ததற்காக ஜி வி பிரகாஷுக்கு சிறந்த இசை அமைப்பாளர் என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது அவருடைய முன்னாள் மனைவி யான சைந்தவி மேடையில் இருந்தார். ஜிவி பிரகாஷ் பெயரை அறிவித்ததும் ஜிவி பிரகாஷ் முகத்தையே பார்த்த சைந்தவி அவர் விருது வாங்கி முடித்து கீழே வரும் வரைக்கும் முழுமையாக கைதட்டி கொண்டு இருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு தான் திருமணம் செய்திருந்தனர். இவர்களுக்கு ஆத்வி என்ற குழந்தை இருக்கிறார். ஆனால் 11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து தாங்கள் விலகப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு இருவரும் போஸ்ட் போட்டிருந்தனர். இது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

அழகான காதல்: காரணம் ஜீவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருமே பல பேட்டிகளில் கலந்துகொள்ளும் போது இருவருக்குள் இருக்கும் காதலை அவ்வளவு இயல்பாகவும், நெகிழ்வோடும் வெளிப்படுத்துவார்கள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு காரணமாக இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோட்டிவேஷனாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

gv prakash saindhavi

விவாகரத்து செய்தி: இதனால் இவர்களெல்லாம் பிரியவே மாட்டார்கள் என்று நினைத்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இவர்களுடைய பிரிவு செய்தி வந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதோடு இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கூட பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நல்ல நண்பர்கள்: சைந்தவி மற்றும் ஜீவி பிரகாஷ் இருவருமே நாங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிகிறோம். ஆனால் நல்ல நண்பர்களாக தொடர்வோம் என்று கூறியிருந்தார்கள். அதுபோலவே இருவரும் பிரிந்து இருந்தாலும் சமீபத்தில் ஜீவி பிரகாஷ் துபாயில் நடத்திய ஒரு ஈவென்டில் சைந்தவி பாடி இருந்தார்.

பிறை தேடும் இரவிலே: அப்போது இவர்கள் இருவருக்கும் செம ஹிட் கொடுத்த "பிறை தேடும் இரவிலே" என்ற பாடல் சைந்தவி மற்றும் ஜீவி பிரகாஷ் பாடியதும் பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில் தற்போது ஜீ.வி. பிரகாஷுக்கு அமரன் திரைப்படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளர் விருது வழங்கும் போது சந்தோஷமாக சைந்தவி கை தட்டியது குறித்தும் பலர் பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+