பாக்கியலட்சுமி: மயூ செய்த செயல்.. கோபியை வீட்டை விட்டு கூட்டி சென்ற ஈஸ்வரி.. பாக்யா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 24 ஆம் தேதிக்கான எபிசோடில் மயூவை பார்க்க விடாமல் ஈஸ்வரி கோபியை கோவிலுக்கு கூட்டி செல்கிறார். அதே நேரத்தில் ராதிகா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா போன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது மயூ வீட்டிற்குள் இல்லாததால் வெளியே வந்து பார்க்க கோபியின் வீட்டு வாசலில் முன்பு மயூ நின்று கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ராதிகா என்ன ஆச்சு எதுக்காக இங்க வந்து நின்னுட்டு இருக்க என்று கேட்க, டாடி வந்துருவாரு எனக்கு விஷ் பண்றதுக்காக வருவார்ல்ல மம்மி அதுக்காகத்தான் காத்துட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார்.

அதற்கு ராதிகா அவர் வரமாட்டாரு என்று வா மயூ வீட்டுக்கு போகலாம் என்று அவரை அழைத்து செல்கிறார். பிறகு வீட்டில் உட்கார வைத்து உண்மையான பாசம் இருந்தால் கண்டிப்பாக வருவாரு. அப்படி வராத போது நாம் தேடி போகணும்னு இல்ல என்று மயூவை சமாதானப்படுத்தி உனக்கு புது வீட்டுக்கு போன பிறகு அங்கு ஒரு பெரிய கிப்ட் வச்சிருக்கேன்.
புது வீட்டில் உன்னுடைய பர்த்டே ஃபங்க்ஷனை கிராண்டா செலிப்ரேஷன் பண்ணலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நீ ரொம்ப நாளா பீச் ரெசார்ட் போனேன்னு சொன்னல்ல அங்கேயும் போகலாம். ஜாலியா இருக்கலாம் என்று மயூவின் சோகத்தை மாற்றி சந்தோசமாக பேச வைக்கிறார்.
மறுபக்கத்தில் கோபி போனில் பிரேஸ்லெட் மாடல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு ஈஸ்வரி வருகிறார். இது எப்படிமா இருக்கு என்று ஈஸ்வரியிடம் காட்ட, சூப்பரா இருக்கு என்று அவரும் சொல்கிறார். பிறகு இனியாவுக்கு பிடிச்சிருக்கா என்று கேட்டுரு என்று சொல்ல, இனியா கிட்ட ஏன் கேட்கணும் என்று கோபி கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி இது இனியாவுக்கு தானே எடுக்கிற என்று கேட்க, இல்லை இது மயூ பர்த்டேக்காக வாங்கிட்டு போய் இதை கொடுத்து விஷ் பண்ண போறேன் என்று சொல்ல, உடனே ஈஸ்வரி திடீர் பிளான் போட்டு குலதெய்வ கோவிலுக்கு போகணும் என்று கோபியிடம் செண்டிமெண்டாக பேசுகிறார். அதற்கு கோபி நான் நாளைக்கு மயூக்கு பர்த்டேக்கு கிப்ட் கொடுக்கணும்னு சொன்னேன் அம்மா என்று சொல்ல,
மயூ எங்க போயிட போறா... நகைக்கடை எங்க போயிட போகுது? வந்து வாங்கி கொடுக்கலாம் என்று கோபியை குலதெய்வ கோயிலுக்கு வர சம்மதிக்க வைத்து விடுகிறார். அடுத்த நாள் காலையில் பாக்கியா ரெஸ்டாரண்ட் வேலைகள் பற்றி போனில் பேசிக் கொண்டிருக்கும் போது செல்வி அங்கு வருகிறார்.
ரெஸ்டாரண்ட் பற்றி சொல்ல வந்திருப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி வந்து உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் பாக்கியா. நாங்க எல்லாரும் கோயிலுக்கு போறோம் நீயும் வா என்று கூப்பிட பாக்கியா என்னால வர முடியாது இப்பதான் ரெஸ்டாரண்ட் பழைய நிலைமைக்கு மாறி இருக்கு. இப்ப வர முடியாது என்று சொல்லி விடுகிறார்.

அதுபோல ஜெனியும் என்னால் வர முடியாது என்று சொல்லி இருக்கிறார். கடைசியாக செழியன், ஈஸ்வரி, கோபி, இனியா என நான்கு பேரும் குலதெய்வ கோவிலுக்கு கிளம்பி போகிறார்கள்.












Click it and Unblock the Notifications