பாக்கியலட்சுமி: ஈஸ்வரியோடு இனியா போட்ட மோசமான பிளான்.. கலங்கி நிற்கும் ராதிகா.. பாக்யா செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகா பற்றிய உண்மைகள் தெரிந்து ஈஸ்வரியும் இனியாவும் புது பிளான் போடுகின்றனர்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா, செல்வி, ஜெனி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலை செய்த பெண் வேலை கேட்டு வருகிறார். ஆனால் பாக்கியா இப்போதான் சிலரை வேலைக்கு எடுத்துருக்கோம் கண்டிப்பா வேலை வரும் போது உனக்கு சொல்றேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு அவர் கிளம்பும் போது ராதிகா வீட்டை விட்டு காலி பண்ணி போறாங்கலாமே என்றும் நீங்களும் கோபி சாரும் மீண்டும் சேர்ந்து வாழ போறீங்கன்னு சொல்றாங்க. அதுவும் நல்ல விஷயம்தான் என்று சொன்னதும் செல்வி உன் வீட்டிலேயே அவ்வளவு பிரச்சனை இருக்கு, நீ அடுத்த வீட்டில் என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டு அலையுறீங்க என்று திட்டுகிறார்.
அதற்கு அந்த பெண் ஆம்பளைங்க தப்பு பண்ண தான் செய்வாங்க, நம்ம தான் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல, அப்போ நாம தப்பு பண்ணுனா ஆம்பளைங்க பொறுத்துக்குவாங்களா? என்று செல்வி கோபப்படுகிறார். பிறகு அவர் போனதும் செல்வி பாக்யாவிடம் ஏக்கா எதுவுமே பேசல என்று கேட்க, இவங்க கிட்ட எல்லாம் பேசி என்ன ஆகப்போகுது இப்போ? பேசுறவர்கள் கிட்ட பேசணும் சரி கோவிலுக்கு போனவங்க திரும்பி வரட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் கோவிலில் ஈஸ்வரி, கோபி, செழியன் மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா கோவிலை சுற்றி வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா கால் பண்ண சொன்னது ஞாபகம் வந்ததும் வீடியோ கால் பண்ணி பாக்கியாவிடம் இனிமையாக பேசுகிறார்.

அப்போது பாக்கியா நலம் விசாரித்துவிட்டு உங்க அப்பா கிட்ட போனை குடு நான் பேசணும் என்று சொல்ல, நீ நேரிலேயே பேசமாட்டியே இப்ப எதுக்கு போன்ல பேசணும்னு சொல்லுற என்று இனியா கேட்கிறார். அதற்கு முக்கியமான விஷயம் அவர் கிட்ட பேசணும் முதல்ல போனை குடு என்று சொல்ல அவர் கொடுக்காமல் என்னிடம் சொல்லு நான் சொல்லுறேன் என்று சொல்கிறார்.
அதற்கு பாக்கியா, ராதிகா வீட்டை காலி பண்ணி போறாங்க அது அவர்கிட்ட சொல்லனும் என்று சொல்ல, அதற்கு இனியா டாடி இங்கே இல்ல அவர் ரூமில் இருக்கிறார். நானும் பாட்டி மட்டும்தான் இருக்கிறோம் என்று பொய் சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார். அந்த நேரத்தில் கோபியை அங்கிருக்கும் ஒரு நபர் வந்து கூட்டிக்கொண்டு போக ஈஸ்வரி மற்றும் செழியன் மட்டும் உட்கார்ந்திருக்கின்றனர்.
அவர்களிடம் இனியா போன் செய்து ராதிகா பற்றி சொன்ன விஷயத்தை சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் கோபிக்கு தெரியவே கூடாது. உங்க அம்மா உங்க அப்பா கிட்ட பேச விடாமல் பார்த்துக்க என்று சொல்லிவிடுகிறார்.
அடுத்ததாக ராதிகா வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது மயூ மற்றும் ராதிகாவின் அம்மாவிடம் நீங்க ரெண்டு பேரும் புது வீட்டுக்கு போங்க இன்னும் கொஞ்சம் திங்ஸ் அனுப்பிட்டு ஹவுஸ் ஓனர் கிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டு நான் வாரேன் என்று அவர்களை அனுப்புகிறார்.
ஆனால் மயூ எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்கு மம்மி, நம்ம இந்த வீட்டில் எவ்வளவு சந்தோசமா இருந்தோம் என்று பீல் பண்ணி பேச அதற்கு ராதிகா நீ போ மயூ நான் வந்துட்டேன் உனக்கு புட் ஆர்டர் பண்ணிருக்கிறேன் போய் சாப்பிடுங்க என்று அனுப்பி வைக்கிறார். அதற்கு ராதிகாவின் அம்மா நீ சந்தோஷமா இருக்கிறதை என்னால் பார்க்க முடியாதா? மாப்பிள்ளை வந்தவுடன் போகலாம் என்று மீண்டும் சொல்ல இதுக்கு மேல அவர் கிட்ட சொல்லி எந்த முடிவெடுக்க போறது இல்ல என்று ராதிகா அம்மாவையும் மயூவையும் அனுப்பி வைக்கிறார்.
பிறகு கல்யாண போட்டோவை எடுத்து பார்த்து கல்யாணம் நடந்ததை நினைத்துப் பார்க்கிறார். அப்போது போட்டோவை கீழே போட்டு உடைப்பது போன்று போகிறார். பிறகு மனம் வராமல் அங்கே வைத்து விடுகிறார். அடுத்ததாக பாக்கியாவிடம் செல்வி பேசிக் கொண்டிருக்கிறார். ராதிகா எல்லா பொருள்களும் அனுப்பிட்டாங்களாம் அவங்க மட்டும் தனியா இருக்காங்க என்று சொன்னதும் பாக்கியா சாப்பாடு எடுத்துக்கொண்டு ராதிகாவை பார்க்கப் போகிறார்.
அங்கு ராதிகா தரையில் படுத்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்ததும் பாக்கியா சாப்டிங்களா? என்று சாப்பாடு கொடுக்கிறார். முதலில் சாப்பாடை வேண்டாம் என்று மறுக்கிறார். பிறகு ஆரம்பத்தில் இருவரும் எவ்வளவு நட்பாக இருந்தோம் என்று பழைய விஷயங்களை பற்றி பாக்கியா பேசுகிறார். அப்போது ராதிகா நீங்கள் எதுவுமே பேசாமல் என்கூட கொஞ்ச நேரம் உட்காருங்க என்று சொல்லி பாக்கியா கொண்டு வந்த சாப்பாடு சாப்பிடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications