கணேஷ் கேள்விக்கு அமிர்தா எடுத்த முடிவு..கலங்கி நிற்கும் எழில்..கோபி சொன்ன வார்த்தை எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 30ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா வீட்டிற்கு வந்த கணேஷ் அமிர்தா தன்னோடு வரவேண்டும் என்று சொல்ல அதற்கு அமிர்தா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் கணேஷிடம் கோபி சொன்ன வார்த்தையை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் கணேஷ் வீட்டிற்கு வந்து அமிர்தாவையும் நிலாவையும் என் கூட வாங்க நான் உங்கள நல்லா பார்த்துக்குவேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு அமிர்தா நான் எங்கேயும் வரமாட்டேன் இங்கேதான் இருப்பேன் என்று பாக்யாவை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் எழிலும் தலையில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார். பிறகு கோபி எழிலுக்கு ஆறுதல் சொல்லுகிறார். ஆனால் கணேஷ் பிடிவாதமாக அமிர்தா என்கூட வா என்று கூப்பிட்டுக்கொண்டே இருக்க, பார்க்க உன்னை பார்த்தாலே பயப்படுறாளே போ என்று சொல்கிறார். பிறகு கணேஷ் எழிலிடம் இருக்கும் நிலாவை தூக்க வரும்போது கோபி நிலா எங்க வீட்டு பொண்ணு அமிர்தாவும் எங்க மருமகள் இரண்டு பேரும் இங்கேதான் இருப்பாங்க.

நீ செத்து போனதுக்கு அப்புறம் உன்னை மறந்துட்டு எழிலை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு வருஷமா இவங்க சந்தோஷமா இருக்காங்க. திடீர்னு நீ உயிரோடு வந்துட்டா எப்படி உன் கூட வருவா? அதெல்லாம் அமிர்தாவையும், நிலாவையும் உன் கூட அனுப்பி வைக்க முடியாது என்று சொல்ல அதற்கு கணேஷ் என் பொண்டாட்டி பிள்ளை என் கூட அனுப்பி வைக்கலைன்னா நான் போலீசை கூப்பிடவேன் என்று சொல்கிறார்.

உடனே போய் கோபி போலீசை கூப்பிடு நான் பேசுகிறேன் என்று அதிரடியாக பேச அனைவரும் அதிர்ச்சியாக இருக்கின்றனர். பிறகு கணேஷின் அப்பா அம்மா என்னுடைய பையன் இடத்திலிருந்து பாருங்க மனசாட்சியே இல்லாமல் பேசுறீங்க என்று கேட்க, கோபி மனசாட்சி இருப்பதால் தான் இவ்வளவு பொறுமையாக பேசிட்டு இருக்கோம்.

உங்க பையனுக்கு புத்திமதி சொல்லி அவனை அழைச்சிட்டு போங்க என்று சொல்கிறார். கடைசியாக ராமமூர்த்தி கணேஷிடம் நீ வா என்று கூப்பிட்டு, நீ வந்த அதிர்ச்சியில் அவள் இருக்கா அதிலிருந்து மீண்டு வரவே எவ்வளவு நாள் ஆகும்னு தெரியல என்று கேட்க, அதற்கு கணேசன் கரெக்ட் நான் வந்து அதிர்ச்சியில் தான் அமிர்தா இருக்கா...

கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் சரியாயிடும். அப்புறம் என்கூட வருவா. அதனால நான் இப்போ போறேன். ஒரு வாரம் கழிச்சு வந்து அமிர்தாவையும், நிலாவையும் நான் கூட்டிட்டு போவேன். அதுக்குள்ள அவ மனசு மாறி இருப்பா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications