பாக்கியலட்சுமி: ஈஸ்வரியை லெப்ட் ரைட் வாங்கிய பாக்யா.. மொத்த உண்மைகளையும் உடைத்த ராதிகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் டிசம்பர் 30ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி ராதிகாவை சமாதானம் செய்வதற்காக போயிருக்கும் நிலையில் பாக்யா மற்றும் ஈஸ்வரிக்கு இடையே வாக்குவாதம் நடக்கிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி ராதிகா வீட்டுக்கு கோபி போக கூடாது என்று தடுக்கிறார். ஆனாலும் கோபி நான் இப்ப பார்க்கலைன்னா எப்பவுமே பார்க்க முடியாது என்று ஈஸ்வரியையும் மீறி ராதிகா வீட்டிற்கு போய் விடுகிறார். அங்கு ராதிகா வீட்டில் தனியாக தரையில் உட்கார்ந்து இருக்கிறார். ஏன்
ராதிகா இப்படி ஒரு முடிவெடுத்த என்கிட்ட கூட சொல்லலையே என்று பீல் பண்ணி பேசுகிறார்.

அதற்கு ராதிகா எதற்காக உங்களிடம் சொல்லணும் நீங்க எனக்குன்னு இல்லன்னு ஆன பிறகு நான் உங்களிடம் என்ன சொல்லி ஆகப்போகுது? உங்களிடம் பேச வேண்டும் என்பதற்காக எத்தனையோ முயற்சி எடுத்தேன். ஆனால் எல்லாமே எனக்கு அவமானத்தை தான் தந்தது. ஆனாலும் நீங்கள் என்னை தேடி வருவீங்க என்று நான் உங்களை சுற்றி சுற்றி வந்தேன் நீங்களும் உங்க குடும்பத்தோடு சேர்த்து என்னை அவமானப்படுத்தினீங்க என்று கோபப்படுகிறார்.

மறுபக்கத்தில் ராதிகா வீட்டுக்கு போன கோபி இன்னும் வரலையே என்று ஈஸ்வரி பதட்டமாக இருக்கிறார். இனியாவை போய் பாத்துட்டு கோபியை கூட்டிட்டு வந்துரு என்று சொல்ல, இனியாவும் சரி என்று கிளம்புகிறார். அதற்கு பாக்யா கோபப்பட்டு இனியாவை எங்கேயும் போகக்கூடாது என்று திட்டுகிறார்.
ஈஸ்வரி கோபப்பட்டு பாக்கியாவை திட்டுகிறார். அதற்கு பாக்கியா என்னுடைய வாழ்க்கைக்கு நல்ல விஷயத்தை தான் செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் பையன் என்னை விட்டுட்டு போன பிறகுதான் நான் நல்லா இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ஈஸ்வரி நேற்று கூட என் மகன் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்று சத்தியம் பண்ணி கொடுத்தான். அதோடு நான் பாக்யாவோடு நீ மீண்டும் சேர்ந்து வாழணும்னு சொன்னேன் அதற்கு அவன் சரி என்பது போலத்தான் நடந்து கொண்டான். ஆனால் நீயே உன் வாழ்க்கையை கெடுக்கிற என்று திட்ட, பாக்கியா கோபமாகி இதுக்கு மேல இந்த மாதிரி பேசிட்டு இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் எப்பவும் என்று கோபமாக திட்டுகிறார்.
அதோடு உங்க பையன் என்னை விட்டுட்டு போக பிறகு என் பிள்ளைகளை நான் நல்லபடியா தான் வளர்த்து வரேன். யார்கிட்டயும் உதவி பண்ணுங்கன்னு நிக்கல. ஆனால் மீண்டும் அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்தால் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். எனக்கு அவர் தேவையும் இல்ல என்று சொன்னதும் ஈஸ்வரி அதிர்ச்சியில் நிற்கிறார்.

மறுபக்கத்தில் கோபி ராதிகாவிடம் எனக்கு இன்னொரு முறை மட்டும் வாய்ப்பு கொடு என்னுடைய தப்பை நான் திருத்திக்கிறேன் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று தான் அம்மா வீட்டில் இருந்தேன். இனி உனக்கு கஷ்டம் கொடுக்கிற மாதிரி நான் எதுவும் பண்ண மாட்டேன் என்று உருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது வீட்டின் உரிமையாளர் வருகிறார். அவரிடம் ராதிகா நான் தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் இந்த வீட்டை விட்டு போக வேண்டிய மாதிரி ஆகிடுச்சு நான் கிளம்புறேன் அந்த பணத்தை நீங்க கோபி அக்கவுண்டுக்கு போட்டுருங்க என்று சொல்கிறார். வீட்டு ஓனர் சரி என்று கிளம்பி போகிறார். கோபி ராதிகாவை சமாதானம் படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications