பாக்கியலட்சுமி: வசமாக சிக்கிய கோபி.. செம கேள்வி கேட்ட பாக்கியா.. ஈஸ்வரிக்கு விழுந்த அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 31ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி, ஈஸ்வரி மற்றும் ராதிகா இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு முழிக்கிறார். கடைசியில் கோபி எடுத்த முடிவால் ஈஸ்வரி அதிர்ச்சியில் இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி ராதிகாவிடம் வீட்டை விட்டு போக வேண்டாம் என்று சொன்னாலும் ராதிகா வீட்டை கிளம்புவதில் உறுதியாக இருக்கிறார். அப்போது எந்த இடத்தில் இருக்க போற என்று கோபி கேட்க, என்னுடைய ஆபீஸ் பக்கத்துல தான் போகப் போறேன் என்று சொல்லிவிட்டு ராதிகா கிளம்பி விடுகிறார்.

அடுத்ததாக கோபி மீண்டும் பாக்யா வீட்டிற்கு வருகிறார். அப்போது ஈஸ்வரி, ராதிகா சின்ன பொண்ணு வச்சிருக்கா. வேலைக்கு போறா.. உன்னை அவ எப்படி பார்த்துக்க முடியும்? 24 மணி நேரமும் ஒரு ஆளு உன் கூட இருக்கணும். அதனால தான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். அவ போனா போகட்டும் விடு.. என்று சொல்ல, இனியா ஆமா டாடி நாங்க எல்லாரும் உங்களுக்கு இருக்கிறோம் நீங்க கவலைப்படாதீங்க என்று ஆறுதல் சொல்கிறார்.
அப்போது பாக்கியா அவங்க போறேன்னு சொன்ன உடனே நீங்களும் போகட்டும்னு வந்துட்டீங்களா? அவங்க மனசு உடைஞ்சிருக்கு. இந்த நேரத்துல நீங்க அவங்களுக்கு ஆறுதலா இருந்திருக்கணும். இங்க வந்திருக்கக் கூடாது என்று கோபியிடம் சொல்கிறார்.

அதோடு இந்த மாதிரி உங்க பசங்க பண்ணுனா உங்களால பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? என்று கோபியிடம் கேட்க, கோபி பதில் எதுவும் சொல்ல முடியாமல் நிற்கிறார். மேலும் பேசிய பாக்கியா செழியன் ஜெனியையும் எழில் அமிர்தாவையும் சரியா பாத்துக்கலன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்? இனியாவை கல்யாணம் பண்ணிக்க போறவர் இது மாதிரி பண்ணா நீங்க பாத்துட்டு சும்மா இருப்பீங்களா? என்று கேட்க கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார்.

பாக்கியா பேசிக் கொண்டே இருப்பதை பார்த்ததும் ஈஸ்வரி அவா ஏதாவது பேசிட்டே இருப்பா நீ உள்ள வா என்று கோபியை கூப்பிடுகிறார். ஆனால் கோபி பாக்கியா பேசியதெல்லாம் நினைத்து பார்த்த நான் ராதிகாவை பார்க்க போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மறுபக்கத்தில் ராதிகாவும் மயூவும் சோகமாக புது வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கோபி வருகிறார். கோபியை பார்த்ததும் ஓடி சென்று அவரைக் கட்டி அணைத்து ஏன் என்ன பாக்க வரல நான் உங்களை ரொம்ப மிஸ் பண்னேன் டாடி என்று மயூ கேட்கிறார்.

கோபி மயூக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி போன் செய்கிறார். நீ அந்த வீட்டுக்கு போயிட்டா அம்மாவை மறந்துவிடு.. என்று ஈஸ்வரி கோபமாக பேசுகிறார். இதைக் கேட்டு கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications