பாக்கியலட்சுமி சீரியலுக்கு முடிவு இல்லை.. இனி நடக்கப்போவது இதுதான்! கதையில் மாற்றம் பற்றி கம்பம் மீனா ஓபன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கம்பம் மீனா செல்வி கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு இந்த சீரியலில் இனி கதை எப்படி பயணிக்கும் என்பது பற்றியும் அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சோசியல் மீடியாவில் பாக்கியலட்சுமி சீரியல் எப்படா முடியும் என்பது பலருடைய கேள்விகளாகவும் கதறலாகவும் இருந்து வருகிறது. ஆனால் இந்த சீரியலுக்கு இப்போதைக்கு முடிவே இல்லையாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்று சொல்லி இருந்தாரு. அவரைப்போலவே ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவும் சொல்லியிருந்தார்.

கோபி வெளியிட்ட வீடியோ
ஆனால் கடைசியில் நாங்க முடிவுக்கு வருதுன்னு சொன்னோம் ஆனா எப்ப முடிவுக்கு வருதுன்னு சொல்லலங்க. ஆரம்பம்னு ஒன்னு இருந்துச்சுன்னா முடிவுன்னு ஒன்னு உண்டு. பாக்கியலட்சுமி சீரியல் முடிவு வரப்போகுதுன்னு சொன்னாங்களே தவிர எப்ப முடிய போகுதுன்னு சொல்லலங்க என்று ஒரு வீடியோ வெளியிட்டார். இதனால் இந்த சீரியல் முடிவுக்கு வருதா? இல்லையா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.
கதையில் மாற்றம்
சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் கதைக்களமும் வேகமாக பயணித்தது. இதனால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கதையில் புது திருப்பமும் வந்துவிட்டது. இப்போது இனியாவுக்கு திருமணம் முடிந்து அவருடைய குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை சுற்றி கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் செல்வியாக பாக்யாவுக்கு பக்க துணையாக இருக்கும் கம்பம் மீனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் இந்த சீரியல் முடிவு குறித்து பேசி இருக்கிறார்.
கம்பம் மீனா பேட்டி
கம்பம் மீனாவிடம் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகுதுன்னு சொல்றாங்களே உண்மையா என்று கேட்க இப்போதைக்கு சீரியல் முடியற மாதிரி இல்ல, சில திருப்பங்கள் கொண்டு வந்து கதையை தொடர்ந்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு சில பேச்சுக்கள் அடிபட்டது ஆனால் இப்போது கதை மாற்றம் செஞ்சு தொடர்ந்து கொண்டு வராங்க என்று சொல்லி இருக்கிறார். அதோடு இனி தான் இந்த சீரியலில் எதிர்பார்க்காத பல சம்பவங்களும் நடக்கப் போகிறது என்று சொல்லி இருக்கிறார்.

கோபி எடுத்த முடிவு
ஏற்கனவே இனியா செல்வியின் மகன் ஆகாஷை காதலிக்கிறார் என்ற உண்மை தெரிந்ததும் பாக்யாவின் எதிரியான சுதாகர் மகன் நிதிஷுக்கு கோபி இனியவை அவசரமாக திருமணம் செய்து வைத்தார். ஆனால் நிதிஷ் ஏற்கனவே போதை பழக்கத்திற்கு அடிமையானவர், ஜெயிலுக்கு போயிட்டு வந்தவர் என்று உண்மை எல்லாம் இப்போது இனியா மூலமாக கோபிக்கு பெரிய வந்திருக்கிறது. ஆனால் இந்த உண்மைகள் இன்னும் பாக்யாவுக்கு தெரியவில்லை.
உங்கள் கருத்து
தற்போது வெளியான ப்ரோமோவில் நிதிஷை கைது செய்வதை பார்த்து அதிர்ச்சியாகி இருந்தார். அதே நேரத்தில் சுதாகர் பாக்யா ரெஸ்டாரண்டை வாங்குவதற்காக தான் இனியாவை சுதாகர் வீட்டு மருமகளாக மாற்றினாரு என்ற உண்மையும் இப்போது இனியாவிற்க்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் இனி இந்த சீரியலில் அடுத்தடுத்து பஞ்சாயத்து வரப்போகிறது என்று தெரிகிறது. பாக்கியலட்சுமி சீரியல் 5 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் உங்களுக்கு பிடிச்ச கேரக்டர் யாரு பாஸ்?
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications