எனக்கு நம்பிக்கை இல்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய விஜே விஷால் திடீர் பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வந்த விஜே விஷால் இன்றைய எபிசோடில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் விலகியது குறித்து விளக்கம் அளிப்பது போன்று ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல கேரக்டர்கள் இவருக்கு பதில் இவர் என்று மாறிவிட்டார்கள். ஆனால் எழில் கேரக்டரில் விஜே விஷால் தான் இதுவரைக்கும் நடித்து வந்தார். ஆனால் இன்று எந்த அறிவிப்பும் வெளியிடாமல் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக சீரியல் நடிகர் நவீன் நடித்த காட்சிகள் இன்றைய எபிசோடில் இருந்து ஒளிபரப்பாகி இருக்கிறது. இது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே விஷால் விஜய் டிவியில் "ரெடி ஸ்டடி கோ" என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மாறி இருந்தார்.
அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் புது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஷால் விலகி இருக்கிறாரா? அல்லது சீரியல் தரப்போடு ஏதேனும் பிரச்சனையா? என்ற கேள்விகள் எழும்பி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளிப்பது போன்று விஜே விஷால் இப்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் "சரியான முடிவுகளை எடுப்பது எனக்கு நம்பிக்கை இல்லை... நான் முடிவுகளை எடுக்கிறேன் பிறகுதான் அவற்றை சரி செய்கிறேன்" என்று அந்த வீடியோவிற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை பாக்கியலட்சுமி சீரியலில் எழிலின் சகோதரியாக இனியா கேரக்டரில் நடித்துவரும் நேஹா உட்பட சீரியல் நடிக்கும் பல நடிகர்களும் லைக் செய்து இருக்கின்றனர்.
ஆனால் தான் எதற்காக சீரியலில் இருந்து விலகினேன் என்பது குறித்து எந்த தெளிவான விளக்கத்தையும் விஜே விஷால் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் சமீப காலமாகவே பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதும் அவருடைய ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலில் பாக்கியாவிற்கு துணையாக எழில்தான் இருந்து வந்தார். ஆனால் இப்போது அவருக்கு பெரிய அளவில் காட்சிகள் இருப்பதில்லை. சீரியலின் கதையும் அரைத்த மாவையே அரைப்பது போன்று வந்தது கொண்டிருப்பதால் இதைவிட பெட்டராக வேற வாய்ப்பு கிடைத்ததும் விஷால் இதிலிருந்து விலகி விட்டாரா என்று கேள்விகள் குவிந்து வருகிறது.
அதுபோல விஷால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவருடைய போஸ்ட்க்கு வந்த கமெண்டை ஷேர் செய்து இருக்கிறார். அதில் நீங்கள்தான் எங்களுடைய எழில் ஆவீர்கள் உங்களுடைய சிறந்த பெஸ்ட்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று ஒரு ரசிகர் கொடுத்த கமெண்டை அதில் பகிர்ந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications