பாக்கியலட்சுமி: மீண்டும் வந்த ராதிகா.. ஈஸ்வரி செய்த செயல்! எழில் பங்க்ஷனில் நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 12ஆம் தேதிக்கான எபிசோடில் எழில் இயக்கிய படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அதில் ராதிகாவும் கலந்து கொள்கிறார். அப்போது ஈஸ்வரி பாக்யா மீது கோபப்படுகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா ஆடியோ ரிலீஸ் நடக்கும் இடத்திற்கு காரில் வந்து இறங்குகிறார். அப்போது பத்திரிகையாளர் சூழ்ந்து கொண்டு நீங்க தானே பாக்கியலட்சுமி... டைரக்டரோட அம்மா.. உங்க பேர்ல தான் படம் ஆரம்பிச்சிருக்காரு என்று கேட்க, ஆமாம் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள் உங்களிடம் பேட்டி எடுக்கலாமா? என்று கேட்க, அதற்கு பாக்கியா முதலில் பங்க்ஷன் முடியட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறார்.

அப்போது எழில் உனக்கு போன் பண்ணனும்னு நெனச்சேன் என்று சொல்ல, அதற்கு பாக்யா எழிலுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். அப்போது எழில் படபூஜை அன்று பாக்யாவை வர வேண்டாம் என்று சொல்லியதை நினைத்து வருந்துகிறார். அதை பார்த்து பாக்யா என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு எழில் அன்னைக்கு பட பூஜையின் போது நான் உன்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாதுமா.
எந்த இடத்தில் உன்னை வரக்கூடாதுன்னு சொன்னேனோ அதே இடத்தில் உன்னை கூட்டிட்டு போறேன் வாமா என்று அழைத்து செல்கிறார். பிறகு பாக்கியா உள்ளே எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியாவிற்க்கு போன் வர, வந்துட்டீங்களா நான் வரேன் என்று பாக்கியா வெளியே கிளம்பி வருகிறார்.
அங்கு ராதிகா காத்துக் கொண்டிருக்கிறார். பிறகு அவரை உள்ளே பாக்கியா கூட்டிக்கொண்டு வர ராதிகா எழிலுக்கு பொக்கே கொடுத்து வாழ்த்துக்கள் சொல்கிறார். பிறகு இனியா கட்டிப்பிடித்து நலம் விசாரிக்கிறார். ஈஸ்வரி இந்த பாக்யாவுக்கு எதுக்கு இந்த வேலை என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

பிறகு பங்க்ஷன் தொடங்குகிறது. முதலில் ப்ரொடியூசரை பேச சொல்ல, அவர் படம் நன்றாக வந்திருப்பதாகவும் எழில் சூப்பராக பண்ணியிருக்கிறார். பாட்டு எல்லாம் அருமையா இருக்கு என்று பேசுகிறார். அடுத்ததாக எழில் பேசுகிறார். அப்போது முதலில் பாக்கியாவை பற்றி பெருமையாக பேசுகிறார்.
எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை வந்த போதும் முதலில் என் அம்மாகிட்ட தான் சொன்னேன். ஆனா அவங்க ஒரு வார்த்தை கூட வேணாம்னு சொல்லல. நீ பண்ணு நான் கூட இருக்கேன்னு சொன்னாங்க. என் குடும்பத்தோட சப்போர்ட் இல்லன்னா என்னால இவ்வளவு தூரம் வர முடியாது. என்னுடைய வெற்றிக்கு காரணம் என்னுடைய அம்மா தான் என்று சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து தன்னுடைய மனைவி அமிர்தா பற்றி பெருமையாக பேசுகிறார். அடுத்ததாக ராமமூர்த்தி குறித்து பேசுகிறார். முக்கியமான ஒருத்தர்னா அது என்னுடைய தாத்தா தான். அவர் எப்பவுமே நான் நல்ல வருவேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. நீ படம் பண்ணனும்னு பேசிக்கிட்டே இருப்பாரு. ஆனா இப்ப அவர் இல்ல.
ஆனாலும் இங்கே எங்கேயாவது ஒரு இடத்தில் நின்று சந்தோஷமா பார்த்துட்டு இருப்பாரு. லவ் யூ மிஸ் யூ தாத்தா என்று சொல்கிறார். பிறகு அதைத்தொடர்ந்து பாட்டி, கோபி, ஈஸ்வரி, இனியா, செழியன் என எல்லார் பற்றியும் பேசிவிட்டு ப்ரொடியூசர் டெக்னீசியன் என எல்லாருக்கும் நன்றி தெரிவிக்கிறார். கொஞ்ச நேரத்தில் ஆடியோ ரிலீஸ் செய்து விட எழில் எல்லோருக்கும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ராதிகாவும் பாக்கியாவும் ஐஸ் குடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராதிகா பாக்கியாவிடம் எழிலுக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக இருக்கும். உங்களுக்கு நல்ல மகன் கிடைச்சிருக்கிறான் என்று பாராட்டுகிறார். அதைத் தொடர்ந்து கோபி அங்கு வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications