தப்பிக்க முயற்சி செய்த அமிர்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எதிர் அணியில் சேர்ந்த ராதிகா.. எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பிப்ரவரி 20ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கணேஷ் அமிர்தாவை கடத்தி வைத்திருக்கும் நிலையில் முழு சைக்கோவாக மாறி இருக்கும் கணேசிடமிருந்து தப்பிக்க முயற்சி எடுத்த அமிர்தாவுக்கு அதிர்ச்சி கிடைக்கிறது.
மறுபக்கத்தில் இதுவரைக்கும் பல இடங்களில் பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்த ராதிகா இப்போது அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மேலும் பல சுவாரசியமான காட்சிகள் நடைபெற்றது அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் எழிலும் செழியனும் பைக்கில் ஒன்றாக சேர்ந்து அமிர்தாவையும் நிலாவையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கத்தில் கணேசிடம் அமிர்தா குழந்தைக்கு பசிக்கிறது ஏதாவது சாப்பாடு கொடுக்கணும் என்று
கேட்க அதற்கு கணேஷ் நான் சாப்பாடு வாங்கிட்டு வருவதற்குள் நீ இங்க இருந்து தப்பிச்சு போயிரலாம்னு பார்த்தியா? அப்படி போக முடியாது.
இனி நாம மூன்று பேரும்தான் தனியா வாழ போறோம். நீ நிலாவை என்கிட்ட கொடு என்று அமிர்தா கூட வாக்குவாதம் செய்கிறார். அதோடு நிலாவை அப்பானு சொல்லு என்று கணேஷ் கேட்க அதற்கு நிலா நான் எழில் அப்பாட்ட போகணும் என்று சொல்கிறார். இதனால் கடுப்பான கணேஷ் நான் தான் உன்ன பெத்த அப்பா என்னை அப்பான்னு சொல்லு என்று குழந்தையை மிரட்ட அமிர்தா நிலாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.
அதற்கு கணேஷ் நீங்க எல்லாரும் சேர்ந்து குழந்தையை கெடுத்து வச்சிருக்கீங்க. என் குழந்தை மனசை மாத்தி இருக்கீங்க நான் தாண்டா உன் அப்பா என்று சைக்கோவாக கணேஷ் பேசிக்கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பாக்யா வாசலில் நின்று எழிலுக்காகவும் செழியனுக்காகவும் காத்துக் கொண்டிருக்க வீட்டிற்குள் இருக்கும் ஈஸ்வரி உன்னால இந்த வீட்டு ஆம்பளைங்க எல்லாரும் தெருத்தெருவாக அலைஞ்சிட்டு இருக்காங்க என்று திட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து ஈஸ்வரி உள்ளே போனதும் ராதிகா உங்களால் ஐம்பது பேர் இல்ல 500 பேருக்கு கூட அசால்டா சமைக்க முடியும். அதுல எந்த பிரச்சனை வந்தாலும் நீங்க சமாளிப்பீங்க. ஆனா இது மாதிரி எல்லாத்துலயும் சமாளிக்கலாம் என்று நினைக்கிறது தப்பு என்று சொல்லிக் கொண்டிருக்க அதை கேட்ட ஈஸ்வரி நான் மனசுல நினைச்சதை நீ அப்படியே சொல்லிட்ட... 50 பேருக்கு சமைச்சுட்டா உன்னால எல்லாம் செய்ய முடியும் கிடையாது.

ஆனால் நீ உலக மகா அறிவாளி கிடையாது என்று திட்டுகிறார். அதோடு இவனும் தான் இருக்கா, நிறைய படிச்சிருக்கா ஆனா எவ்வளவு அமைதியா இருக்கா என்று ராதிகாவை பெருமையாக பேச ராதிகா இன்ப அதிர்ச்சி அடைகிறார். அதைத் தொடர்ந்து எழிலும் செழியனும் பழனிச்சாமியை சந்தித்து விஷயத்தை சொல்ல அவர் எப்படியாவது விடியறதுக்குள்ள கண்டுபிடிக்கலாம் என்று நம்பிக்கை கொடுத்து ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் பாக்யாவுக்கு கணேஷ் கடத்திக்கொண்டு சென்ற கார் நம்பர் நினைவுக்கு வருகிறது. உடனே செழியனுக்கு போன் போட்டு கார் நம்பரை சொல்ல செழியன் பழனிச்சாமிக்கு அனுப்பி அந்த காரை ட்ரேஸ் செய்ய முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் கணேஷ் அமிர்தாவிடம் விடிஞ்சா உனக்கும் எனக்கும் கல்யாணம் நாம வேற எங்கேயாவது போய் இருப்போம். நிலா பாப்பா நீ நாம் மூன்று பேரும் சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்ல அமிர்தா எனக்கு உங்க கூட வாழ விருப்பம் இல்லை என்று சொல்ல அதற்கு கணேஷ் நான் உன்னோட விருப்பத்தை கேட்கல நான் கட்டளை இடுகிறேன் என்று மிரட்டுகிறார்.

பிறகு விடிந்ததும் அங்கு கணேஷ் இல்லாததை பார்த்து அமிர்தா அங்கிருந்து தப்பித்து போய்விடலாம் என்று முயற்சி செய்து அங்கு இருக்கும் ஒரு கதவை திறக்க அது திறந்து விடுகிறது. அதை பார்த்து சந்தோஷப்பட்டு அமிர்தா நிற்கும்போது அங்கு மாப்பிள்ளை கோலத்தில் கணேஷ் கல்யாணத்துக்கு தேவையான பூ போன்ற பொருள்கள் வாங்கிக் கொண்டு வந்து நிற்கிறார். இதை பார்த்து அமிர்தா அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications