தாலி கட்ட போன கணேசுக்கு கிடைத்த அதிர்ச்சி.. அமிர்தா நீங்க மோசம்! ஆனால் கடைசியில் நடந்தது தான் செம!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பிப்ரவரி 21ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த சீரியலில் பார்க்கலாம். அந்த வகையில் அமிர்தாவை கடத்திட்டு போன கணேஷ் தனக்கும் அமிர்தாவிற்கும் மீண்டும் திருமணம் நடத்த முயற்சி செய்கிறார். ஆனால் அமிர்தா கணேஷ் உடைய நடவடிக்கைகளை பார்த்து பயந்து இருக்கும் நிலையில் கடைசியில் கணேசுக்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
எப்போதும் இந்த சீரியலில் கடைசி நேரத்தில் பாக்யா வெற்றி பெறுவது போல இன்றைய எபிசோட்டில் கடைசியிலும் நடைபெற்றது. ஆனால் மேலும் சில சுவாரசியமான சொதப்பல்களும் நடந்தது அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் அமிர்தா கணேசனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்ய அந்த நேரத்தில் கணேஷ் அங்கு மாப்பிள்ளை கோலத்தில் வந்து நிற்க அதை பார்த்து அமிர்தா அதிர்ச்சி அடைகிறார். அப்போது கணேஷ் என்ன அமிர்தா பயந்துட்டியா? நான் பக்கத்துல இருக்குற மார்க்கெட்டுக்கு தான் போயிருந்தேன். நமக்கு கல்யாணம்லா அதனால் தான் பூ மாலை வாங்கிட்டு வரப் போயிருந்தேன் என்று சொல்லி கையோடு ஒரு ஐயரையும் கூட்டிட்டு வந்திருக்கிறார்.
அந்த ஐயரும் அங்கு நடக்கும் திருட்டு கல்யாணம் தெரிந்துதான் வந்திருக்கிறார். ஆனால் அமிர்தா அந்த ஐயரிடம் கெஞ்ச அதற்கு கணேஷ் அவரும் நமக்கு கல்யாணம் பண்ணி வைக்காமல் இங்கிருந்து போக முடியாது என்று முழு சைக்கோவாக மாறி மிரட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பழனிச்சாமி கார் நம்பரை வைத்து தேடிப் பார்க்க ஒரு முகவரி கிடைக்கிறது. அந்த முகவரியை வைத்து காரின் சொந்தக்காரர் வீட்டுக்கு போக அந்த நபர் நாங்க காரை ஏற்கனவே விற்று விட்டோம்.

எங்களிடம் வாங்கியவரும் காரை வித்துட்டாங்க அதனால இப்ப அந்த கார் யார்கிட்ட இருக்குன்னு எங்களுக்கு தெரியாது என்று சொல்ல இதனால் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்த கட்டத்தில் கணேஷ் துணிகளை கொடுத்து அமிர்தாவை மாற்றிட்டு வரச் சொல்ல, அதற்கு அமிர்தா முடியாது என்று மறுக்க அப்போது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு நீ இதை மாத்திட்டு வரலைன்னா உன்னையும் கொன்னுடுவேன் அந்த எழிலையும் கொன்னுடுவேன் என்று மிரட்டி துணியை மாத்த வைக்கிறார்.

அதோடு கல்யாணம் முடிந்ததும் இப்போது இருக்கும் இடத்திலிருந்து வெளியே போய் விட வேண்டும் என்று கணேஷ் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் அமிர்தா கண்ணீரோடு இருக்க கணேஷ் சீக்கிரம் வா என்று அவசரப்படுத்துகிறார். அடுத்ததாக அமிர்தா கழுத்தில் மாலை போட சொல்லி கொடுமைப்படுத்துகிறார்
பிறகு தாலி கட்ட போகும் சமயத்தில் கழுத்தில் எழில் கட்டிய தாலி இருப்பதை பார்த்து கோபமடைந்து அந்த தாலியை கழட்ட சொல்லி பிடித்து இழுக்கிறார். அமிர்தா அதை விடாமல் அழுதபடியே தடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எழில், பாக்யா, செழியன் ஆகியோர் அங்கு வந்துவிடுகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications