ஹோட்டலில் பாக்கியா வைத்த டுவிஸ்ட்.. குடும்பத்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெனி... ராதிகா தான் பாவம்
சென்னை:விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பிப்ரவரி 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதே நேரத்தில் இந்த சீரியலில் செல்வியாக நடிக்கும் கம்பம் மீனா சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த சீரியலில் இனி நடக்கப் போற நிகழ்வுகள் அம்பலமாகி இருக்கிறது. அதாவது பாக்கியாவின் ஹோட்டல் திறப்பு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. அதற்கு ஜெனி வந்து இருக்கிறார்.
ஜெனி மீண்டும் வந்ததால் குடும்பத்தோடு ஒற்றுமையாக எல்லோரும் இருக்கும் நேரத்தில் கோபி கம்பெனியை இழுத்து மூடிய ரகசியம் ராதிகாவுக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் செல்வி கையில் கட்டோடு பாக்கியா வீட்டிற்கு வர எல்லோரும் என்னாச்சு என்று விசாரிக்கின்றனர். அப்போது செல்வி தான் கீழே விழுந்து விட்டதால் தனக்கு அடிபட்டுவிட்டது என்று சொல்ல எல்லாரும் அப்போ வீட்டில் இருக்க வேண்டியதுதானே என்று சொல்கின்றனர். அதற்கு செல்வி அக்கா ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க போறாங்க அவங்களுக்கு ஹெல்ப் பண்ண தான் வந்தேன். என்னால வேலை பார்க்காமல் வீட்டில் இருக்க முடியாது என்று சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து ஈஸ்வரி கிச்சனுக்கு வந்து தண்ணீர் எடுத்து குடிக்க போக அப்போது பாக்கியா நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கேட்க அதற்கு ஈஸ்வரி அதான் நீ ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க போறியே நீ அங்க போயிட்டா நான் தானே எல்லா வேலையும் பாத்துக்கணும் அதை இப்பொழுதே செஞ்சிகிறேன் என்று வேண்டா வெறுப்பாக பேசுகிறார். அதற்கு பாக்கியா அப்படி இல்ல அத்தை என்று சமாளிக்கிறார். ஆனாலும் பாக்கியா மீது கோபத்தை காட்டும் ஈஸ்வரியை பார்த்ததும் கோபமான ராமமூர்த்தி உனக்கு என்ன பிரச்சினை என்று திட்டுகிறார்.
அதற்கு ஈஸ்வரி அவா குடும்பத்தை பற்றி கொஞ்சமாவது யோசிக்காலா? செழியனுடைய வாழ்க்கை பற்றி என்ன முடிவு எடுத்தா? அன்னைக்கே அவ குழந்தையை பிடுங்கி அவங்க கிட்ட கொடுத்து அனுப்பாமல் இருந்திருந்தால் அவங்க இப்ப வாயிலேயே நுழையாத ஒரு பேர வச்சிருக்க மாட்டாங்க என்று சொல்ல அதற்கு பாக்கியா குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கல. அந்த பங்க்ஷன் நின்னு போச்சு என்று சொல்ல அதைக் கேட்டு செழியனும் சந்தோஷப்படுகிறார்.
அதோடு பாக்கியா நான் ஜெனி பக்கம் என்ன நடக்குதுன்னு கவனிச்சிட்டு தான் இருக்கேன். அவங்களே ஜெனியை சீக்கிரமாக வீட்டில் கொண்டு வந்து விடுவா என்று சொல்கிறார். அதை தொடர்ந்து கோபி ரெஸ்டாரண்டில் இருக்க ராதிகா போன் போட்டு மீட்டிங் எல்லாம் முடிஞ்சிடுச்சு நான் உங்க ஆபிஸ்க்கு வரேன் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகின்றார். அதோடு ராதிகாவை தடுக்க முயற்சி செய்ய ராதிகா ஃபோனை கட் பண்ணி விடுகிறார்.
அதனால் ராதிகா ஆபீசுக்கு வருவதற்கு முன்பு கோபி எதிரே ஓடி வந்து தடுத்து நிறுத்தி ஓட்டலுக்கு கூட்டிட்டு போகிறார். ஹோட்டலில் எங்களுடைய ரெகுலர் கஸ்டமர் பாதி நேரம் இங்கதான் இருப்பாரு என்று சொல்ல அதைக் கேட்டு ராதிகாவுக்கு சந்தேகம் அதிகமாகிறது. அப்போதும் கோபி சமாளித்து விடுகிறார். பிறகு அவர் ராதிகாவை ஆபீசுக்கு நீ போ என்று சொல்லி அனுப்பி வைக்க ராதிகா சந்தேகபட்டு கோபியின் ஆபீசுக்கு வர அங்கு பூட்டு போடப்பட்டிருக்கிறது.
அதை பார்த்து ராதிகா அதிர்ச்சி ஆகிறார். பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரிக்க அதற்கு அவர்கள் இந்த கம்பெனியை இழுத்து மூடிட்டாங்க இந்த வேலை செஞ்சவங்களுக்கு ஒரு வருஷமா சம்பளம் போடல நஷ்டத்தில் போகுதுன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல, அந்த நேரம் ராதிகாவுக்கு ஆபீஸிலிருந்து போன் வந்ததால் அவர் ஆபீசுக்கு கிளம்பி போகிறார்.
அப்போது கோபி போன் போட்டு ஆபீஸ்க்கு போயிட்டியா என்று விசாரிக்க ராதிகா தனக்கு தெரிந்த உண்மையை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஆபீஸ் கிட்ட போயிட்டு என்று சொல்கிறார். அதோடு நீங்க எங்க இருக்கீங்க என்று ராதிகா கேட்க நான் ஆபீஸ்ல தான் கேபினில் உட்கார்ந்து வேலை பார்த்துட்டு இருக்கேன் என்று கோபி அளந்துவிட அதைக்கேட்டு ராதிகா பயங்கரமாக கோபம் அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications