கோபிக்கு உதவி செய்த பாக்கியா.. வில்லியாக மாறும் ராதிகா.. ஈஸ்வரி, ராமமூர்த்தியின் திடீர் மனமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பிப்ரவரி 29ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபிக்கு வேலை இல்லை என்பதால் பாக்கியா தன்னுடைய கம்பெனியில் வேலை தருகிறேன் என்று சொல்ல அதனால் கோபி மட்டுமல்லாமல் ராதிகாவும் கோபப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து கோபி பிசினஸில் லாஸ் ஆனதால் தன்னுடைய நகைகளை கொடுத்து பாக்கியா உதவி செய்ய அதனால் ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் மனம் மாறுகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி வேலை தேடிக் கொண்டிருப்பதை பார்த்து பாக்கியா தன்னுடைய ரெஸ்டாரண்டில் மேனேஜர் வேலைக்கு கூப்பிட அதனால் கோபமான கோபி உன்கிட்ட நான் வேலை பார்க்கணுமா? உன்கிட்ட பணம் இருக்குற திமிரில் இப்படி பேசுறியா? நான் ஒன்னும் அந்த அளவுக்கு அதள பாதாளத்துக்கு போகல என்று கோபப்பட்டு திட்டிவிட்டு போகிறார்.
அதைத் தொடர்ந்து ராதிகா அவருடைய நிலைமை இப்படி இருக்கு என்று குத்தி காட்டாதீங்க, அவரை பாத்துக்க மனைவி நான் இருக்கேன் என்று தீட்டிக்கொண்டு போகிறார். அதைத் தொடர்ந்து மாடியில் கோபி பாக்கியா சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு நடந்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ராதிகா இப்போ உங்களுக்கு சந்தோஷமா? நீங்களும் அவமானப்பட்டு என்னையும் அவமானப்பட வச்சிட்டீங்களே என்று கோவப்பட அதற்கு கோபி ராதிகா பக்கத்தில் அமர்ந்து நான் ஆபீஸ்சை க்ளோஸ் பண்ணும் போது எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா?
இந்த கஷ்டத்தை வெளியே யார்கிட்டயும் சொல்ல முடியாம உள்ளுக்குள்ளேயே போட்டு மறைச்சு தினம் தினம் நரக வேதனையை அனுபவிச்சிட்டு இருந்தேன் என்று சொல்லி, நான் இப்படியே இருப்பேன் என்று இல்லை... கண்டிப்பா சீக்கிரமா ஒரு நல்ல வேலைக்கு போய் பழையபடி ஒரு பிசினஸ் தொடங்கி மீண்டும் நான் ஜெயிச்சு காட்டுவேன். நான் வேலை இல்லனாலும் இதுவரைக்கும் உன்னை எப்படி பார்த்துக்கிட்டானோ அது மாதிரி சந்தோஷமா பார்த்துபன் என்று சொல்லுகிறார்.
அதற்கு ராதிகா எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. ஆனா உங்களுக்கு தான் என் மேல நம்பிக்கை இல்ல. உங்களுக்கு கிரெடிட் கார்டு பிரச்சனை வரும்போதும் என்கிட்ட சொல்லல, ஆபீஸ் மூடுற அளவுக்கு பெரிய பிரச்சனை வரும்போதும் என்கிட்ட சொல்லல என்று வருத்தப்பட அதற்கு கோபி இனிமே சின்ன விஷயத்தையும் உன்கிட்ட சொல்லிருதேன் என்று கடவுள் மீது சத்தியம் செய்து கொடுக்கிறார். அதைத் தொடர்ந்து இரவு ஈஸ்வரி தூங்காமல் அழுது கொண்டிருக்கிறார்.

ராமமூர்த்தி நம்மால் முடிஞ்சா ஏதாவது செய்யலாம் என்று ஆறுதல் சொல்கிறார். அடுத்த நாள் காலையில் பாக்கியா காபி கொண்டு கொடுக்க இருவரும் டல்லாக இருப்பதை பார்த்ததும் ஈஸ்வரி தனக்கு தந்த நகைகளை மீண்டும் ஈஸ்வரியிடம் கொடுத்து இதை உங்க புள்ள பிசினஸ் காக பயன்படுத்திக்க சொல்லுங்க. நான் அவர் என்னை விட்டுட்டு போன பிறகு நான் ஜெயிக்கணும் என்று தான் நினைத்தேனே தவிர அவர் தோற்கனும் என்று எப்போதும் நினைக்கல.

அவர் என்னை விட்டுட்டு போனாலும் அவர் இன்று தோற்று நிற்பதை பார்க்கும்போது எனக்கு மனசு கஷ்டமா இருக்கு என்று சொல்லிவிட்டு போக அதை பார்த்து ஈஸ்வரியும், ராமமூர்த்தியும் பாக்யாவை பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் கோபி வருத்தமாக இருக்கும் போது இனியா வந்து ஆறுதல் சொல்கிறார். அடுத்த செழியன் வந்து நீங்க ஜாக்கிங் போகலையா இன்னைக்கு கண்டிப்பா ஜாக்கிங் போகணும் வாங்க என்று கூட்டிட்டு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications