Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் சொதப்பல்.. இப்படியா பண்ணுவாங்க..? இதை மாற்றி இருக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபி சொன்னது போலவே 18 லட்சம் ரூபாயை கொடுத்து சவாலில் ஜெயித்திருக்கிறார்.

ஆனாலும் கடைசி நேரத்தில் நடந்த வாக்குவாதங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்று கருத்து குவிந்து வருகிறது.

அதே நேரத்தில் இந்த முக்கியமான தருணத்தில் கதையில் அழுத்தம் மற்றும் வசனத்தில் பஞ்ச் அதிகமாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Baakiyalakshmi Serial Flaws in Baakiya 18 Lakhs to Gopi

பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்வதற்கு காரணமே பாக்யாவின் கேரக்டர் தான். சாதாரண ஒரு குடும்ப பெண்மணியாக இருக்கும் பாக்கியா தன்னுடைய கணவர் தன்னை விட்டு விட்டு போன பிறகு தன்னுடைய மாமனார் மாமியார் மற்றும் குழந்தைகள் குறித்து அதிகமான அக்கறையில் இருக்கும் நிலையில் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் பெரும் போராட்டங்களை எல்லாம் தாண்டிக் கொண்டிருக்கிறார்.

இதனாலே இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அடுத்தடுத்து பாக்கியா வெற்றி பெறுவதை பார்த்து பல ரசிகர்கள் தாங்களே வெற்றி பெற்றது போல தொடர்ச்சியாக இணையதளத்தில் கமெண்ட் வெளியிட்டு வருவதை காண முடிகிறது. அதிலும் அதிகமாக பிரமோக்களில் கூட பாக்கியலட்சுமி அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல வாரங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த எபிசோடு இன்றைய நிகழ்ச்சியில் வந்திருக்கிறது. அதாவது இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கோபி கேட்டிருந்தார். அதனால் 20 லட்சம் பணத்தையும் பாக்கியா கொடுத்து இந்த வீட்டை வாங்கி விட வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் ஆசைப்பட்டு இருந்தனர். அந்த வகையில் ஆரம்பத்தில் இரண்டு லட்சம் ரூபாய் மட்டும் பாக்கியா கோபியிடம் கொடுத்து இருந்தார். அதை தொடர்ந்து வீடு பற்றி எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கோபி மீண்டும் பிரச்சனை செய்ய அதற்கு பாக்கியா நான் உங்களுக்கு மீதம் தர வேண்டிய 18 லட்சம் ரூபாயை இன்னும் ஒரு வாரத்திற்குள் தந்து விடுகிறேன் என்று சவால் விட்டிருந்தார். அதுபோல பாக்கியாவிற்கு பழனிச்சாமியின் உதவியால் சமையல் ஆர்டர் கிடைத்தது. அதுவும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக 5000 பேருக்கு சமையல் செய்து இவர் 8 லட்சம் ரூபாய் சம்பாத்தியம் செய்து இருக்கிறார்.

அதே நேரத்தில் மீதம் 10 லட்சம் ரூபாய்க்கு என்ன பண்ண என்று பாக்கியா தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் எழில் ஐந்து லட்சமும் செழியன் 5 லட்சம் என பத்து லட்சம் ரூபாயை கொடுத்திருக்கின்றனர். அதை இன்றைய எபிசோட்டில் தன்னை அவமானப்படுத்திய ராதிகா மற்றும் கோபியின் முகத்தில் தூக்கி வீசியது போன்று பணத்தை கையில் கொடுத்திருக்கிறார். கொடுத்தது மட்டுமல்லாமல் வீட்டை விட்டு எப்போ கிளம்பப் போகிறீங்க என்று பேசி இருக்கிறார்.

இந்த ஒரு மூமண்டுக்காக அதிகமான ரசிகர்கள் காத்திருந்தனர். அதுவும் பாக்கியா பணத்தை கொடுப்பது போன்ற ப்ரோமோ வெளியானதும் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் எபிசோடில் அந்த அளவிற்கு சுவாரசியம் இல்லை என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கருத்து கூறி வருகிறார்கள். இதற்கு முன்புதான் தைரியமாக எதிர்த்து பேச வேண்டிய இடங்களில் எல்லாம் அமைதியாக இருந்து கொண்டு, நீங்க சொல்லுங்க மாமா..., நீங்க சொல்லுங்க அத்தை என்று அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருப்பார்.

ஆனா இப்போது இவ்வளவு கஷ்டப்பட்டு தான் பணத்தை கோபியிடம் கொடுக்கும் போது இன்னும் அதிகமான அழுத்தம் கொடுக்கிற வகையில் பேசி இருக்கலாம் என்று சிலர் கூறி வந்தாலும் உண்மையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியாவின் வார்த்தைகள் கோபிக்கு மட்டுமல்ல இந்த மாதிரி பெண்களை மட்டமாக நினைப்பவர்களுக்கும் பெண்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்பவர்களுக்கும் செருப்படி ஆகத்தான் இருந்தது.

ஆனால் அதிகமாக ஸ்லோமோஷன் லைட்டிங் எஃபெக்ட் என்று கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்து விட்டனர். இந்த சில சொதப்பல்களை மட்டும் தவிர்த்து இருந்தால் இன்றைய எபிசோடு பட்டையை கிளப்பி இருக்கும். அதே நேரத்தில் இன்று பாக்கியாவின் மாமியார் ஈஸ்வரி அமைதியும் சொரூபமாக இருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. எப்படியோ பாக்கியா மூன்று நாட்களுக்கு ஐயாயிரம் பேருக்கு சமையல் செய்வதற்கு வெறும் எட்டு பேரை வைத்து சமையல் செஞ்சு 8 லட்சம் சம்பாதித்து விட்டார். இதுவே பெரிய அதிசயம் தான்.

ஆனால் கோபியிடம் கையில் பணத்தை கொடுக்கும் பாக்யாவை கோபி இன்னொரு முறை ஏமாற்ற மாட்டார் என்று என்ன நிச்சயம்? இதை இயக்குனர் மறந்து விட்டாரா? அதே நேரத்தில் வீட்டிற்கு பணத்தை மட்டும் கொடுத்தால் எப்படி வீடு பாக்கியா பெயருக்கு மாறிவிடும்? வீட்டை ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டாமா? அதையும் முறைப்படி செய்தால் தானே பாக்கியாவிற்காக வீடு வரும். இல்லை என்றால் நாளைக்கே வந்து கோபி மீண்டும் பிரச்சனை செய்வார். இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

அதுபோல இவ்வளவு பெரிய தொகையை கையில் கொடுக்காமல் பேங்க் டிரான்ஸ்லேஷன் செய்திருந்தால் பாக்யாவிற்கு நாளைக்கு ஒரு ஆதாரமாக இருக்கும். அதையும் இயக்குனர் சொதப்பி வைத்திருக்கிறார். இதனால் இதை உண்மை என்று நம்பி யாரும் இதுபோல அசட்டு தைரியத்தில் யாரிடமும் பணத்தை தூக்கி கொடுத்து விடாதீர்கள் என்று அறிவுரை கூற வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+