இதை எதிர்பார்க்கலையே ராதிகா..!? மாஸாக கலக்கும் பாக்யா.. ஆனால் அந்த பஞ்ச் டயலாக் தான் வேற லெவல்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 23 முதல் 25ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்யாவை எப்படியாவது தன்னுடைய ஆபீஸில் இருந்து துரத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் ராதிகாவிற்கு பாக்கியா பதிலடி கொடுத்திருக்கிறார்.
ராதிகா கொடுத்த டாஸ்கை நிறைவேற்றிய பாக்யா அடுத்து என்ன டாஸ்க் கொடுக்கலாம் என்று யோசிக்க ராதிகா என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார்.

கோபிக்கு மோசமான நிலைமை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடியான பல திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றது. இதில் கோபி ராதிகா விடம் மாட்டிக்கொண்டு தற்போது திணறிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் கடனே வாங்காத கோபி இப்போது ராதிகாவின் செலவினால் கடன் வாங்க தொடங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் குடிக்காமல் இருந்த கோபி தற்போது தொடர்ந்து குடிக்கவும் தொடங்கியிருக்கிறார்.

வெற்றிப்பாதையில் பாக்கியா
கோபி பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்து வந்த பிறகு பாக்யா ரொம்பவே கஷ்டப்படுவார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் எனக்கு இதுவெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்று சொல்கின்ற மாதிரி பாக்கியா தன்னுடைய ஒவ்வொரு முயற்சியினாலும் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து தற்போது ராதிகாவும் கோபியும் பொறாமையில் வெந்து கொண்டிருக்கின்றனர். அடுத்தடுத்து பாக்யாவை எப்படி வீழ்த்துவது என்று ராதிகாவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

மிரட்டிய ராதிகா
பாக்கியா அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியாக ராதிகாவின் ஆபீஸிற்கே வந்து இருக்கிறார் ராதிகாவின் ஆபீஸில் கேண்டீன் ஆர்டர் எடுத்து அங்கு அனைவரின் மனதையும் கவர்ந்திருக்கும் பாக்கியாவை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று அங்கு அனைவரும் ஒரே மாதிரி யூனிபார்மா சல்வாரில் தான் இங்கே வரவேண்டும் என்று ராதிகா பாக்யாவை மிரட்டுகிறார். இல்லை என்றால் நான் உங்களுடைய ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு டெண்டர் விட்டு விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். அவர் அதுபோல இன்று பாக்கியா சல்வார் அணிந்து ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

ராதிகாவின் கேள்வி
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் கேண்டின்க்கு வரும் ராதிகா அங்க யாரும் இல்லாததை பார்த்து எல்லாரையும் சுடிதாரோடு வரச் சொன்னேன். இன்று தான் கடைசி நாள் என்று சொன்னேன். இங்கு யாருமே காணவில்லையே என்று பார்த்துக் கொண்டிருக்க அங்கு எல்லோரும் சுடிதாரில் வருகிறார்கள். அவர்களைப் பார்த்த ராதிகா நீங்க எல்லாருமே சுடிதாரில் வந்திருக்கிறீங்க உங்க பாக்கியலட்சுமி எங்கே என்று கேட்கிறார்.

எரியுதா ராதிகா
அப்போது பாக்யாவும் சுடிதாரில் ஸ்டைலாக என்ட்ரி கொடுக்க ராதிகா பாக்கியாவை பார்த்து ஆச்சரியப்படுகிறார். அதற்கு செல்வி இப்போ தக தகனு எரியுதா என கேட்கிறார். மேலும் பாக்கியலட்சுமி, சுடிதார் போட்டுட்டு வர சொன்னா வேலையை விட்டுட்டு போயிருவோம் என்று நினைத்தீர்களா மேடம்? என கிண்டலாக கேட்கிறார். அது மட்டுமல்லாமல் அடுத்து என்ன டாஸ்க் கொடுக்கணும் என்று யோசிங்க மேடம் என்று கூறுகின்றார். தற்போது இந்த பிரமோ பலர் உடைய பாராட்டைப் பெற்று வருகின்றது. அது மட்டும் அல்லாமல் பாக்யா சுடிதார் அணிந்து இருப்பதை பார்த்து கோபி என்ன மாதிரி ரியாக்சன் கொடுக்கப் போகிறார் என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications