இனி இது தான் கதை.. எனக்கு வயசு ஆயிடுச்சு..ட்விஸ்ட் வைத்த கோபி.. இனி எல்லாமே இவங்கதானாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் இப்போ இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ தான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு நான் இந்த சீரியலை விட்டு விலகப் போகிறேன் என்று கூறி பிறகு நான் மீண்டும் தொடர்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் எனக்கு இனி சீரியலில் கதை இல்லை என்பது போல பேசி இருக்கிறார்.

Baakiyalakshmi serial Gobi gave a hint about the upcoming story

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வந்த சதீஷை அதிகமான ரசிகர்கள் திட்டி வந்தனர். பாக்யாவை ஏமாற்றிக்கொண்டு ராதிகாவோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார். என்றெல்லாம் இவரை வசை பாடிய ரசிகர்கள் ஏராளம்.

ஆனால் இப்போதும் கோபி அதே தான் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய நடிப்பை பார்த்து ரசிகர்கள் வியந்து போய், "சின்னத்திரை சிவாஜி கணேசன்" என்றால் நம்ம கோபி தான் என்று இவருக்கு சப்போர்ட் கூடிக் கொண்டே வருகிறது. அதுவும் சில மாதங்களுக்கு முன்பு நான் இந்த சீரியலை விட்டு விலகப் போகிறேன் பலருக்கு நம்ம அருமை புரியவில்லை என்றெல்லாம் ஃபீல் பண்ணி பேசிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி விட்டார்கள்.

தொடர்ச்சியாக instagram மூலமாக சதீஷிடம் ரசிகர்கள் மீண்டும் இந்த சீரியலில் நீங்க நடித்தே ஆகணும் உங்களைத் தவிர வேறு யாராலும் இப்படி நடிக்கவே முடியாது என்று கூறி வந்தனர். இதைத்தொடர்ந்து சீரியல் அணியினரும் சதிஷிடம் பேசி நீங்க தான் கோபி இனி வேற யாரும் அந்த இடத்திற்கு வர முடியாது என்றெல்லாம் கூறி, மீண்டும் இவர் நான் இந்த சீரியலில் தொடர்கிறேன் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏறுன மாதிரி இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். எப்போதும் இவர் வீடியோவில் வெயிலின் கொடுமை, சாப்பாடு அருமை, பெரியோர்களை மதிக்க வேண்டும் என்பது போன்று பல தத்துவங்கள் கூறி வீடியோ வெளியிட்டு இருந்தாலும் இப்போது சீரியல் பற்றி பேசியிருக்கிறார்.

அதில் எப்போதும் போல ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபடியே அதே பனியனோடு வந்து, என்னுடைய வயசு என்னுடைய ஸ்கின்னு எல்லாத்தையும் பாத்திங்களா? நான் கிழவன், டம்மி பீசு, ஏதோ இந்த பாக்கியலட்சுமி சீரியலால தான் சாப்பாட்டுக்கு வண்டி ஓடிக்கிட்டு இருக்கு ஆனா இனி இனியா பாப்பா, எழில் சிங்க குட்டி இருக்கான்ல அவங்களா வச்சு தான் இனி கதை நகரப் போகுது. இதுவரைக்கும் நான் அப்பாவா இருந்தேன். இனி தாத்தா வா ஆகிட்டேன்.

நீங்க என்னுடைய வயச பத்தி கவலைப் படாதீங்க. உங்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் பிடிச்சிருக்கா கண்டிப்பா பாருங்க. இனி பாக்கியலட்சுமி சீரியல் பெரிய அளவில் வரும் ஆனால் கதை தான் எப்படியோ..!? என்று பேசி முடித்திருக்கிறார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கோபி வயதான தோற்றத்தில் இருப்பது போல ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டு இனி இவர்தான் கோபி என்று சதீஷ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இப்போ சதீஷ் இப்படி கூறி இருப்பதால், அப்போ சீக்கிரமா இந்த சீரியல் முதல் பாகம் முடிவுக்கு வந்து இரண்டாவது பாகம் தொடங்கலாம். அதில் கோபி வயசான கேரக்டரில் தாத்தாவாக நடிக்கப் போகிறாரா இருக்கலாம். அதனால் தான் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+