இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது..இந்த மாதிரி முடியல, மன்னிச்சிடுங்க..கோபி கொடுத்த விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடிக்கிறார்.
சமீபத்தில் தான் இந்த சீரியலில் இருந்து விலக போகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் இந்த சீரியலில் நடித்த ஒரு காட்சியை குறித்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி, அதில் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் படி அப்படியே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் எப்போதும் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் அது உண்மையை இல்லை என்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த மாதிரிதான் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபியும் நிரூபித்திருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரை அதிகமான ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இரண்டு மனைவி கட்டிக்கொண்டு இவர் தன்னுடைய குழந்தைகள் சந்தோஷத்தை விட தன்னுடைய சந்தோஷம் முக்கியம் என்று போய்விட்டார் என்று பலர் திட்டுகின்றனர். அது மட்டும் அல்லாமல் பாக்யாவை இவர் அவமானப்படுத்தும் விதத்தையும் பலரும் திட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது தான் நடித்த ஒரு எபிசோடு குறித்து உருக்கமாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த எபிசோட்டில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவிடம் நான் துடித்த பிறகு தான் உன்னை பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் இனி கொஞ்சம் கொஞ்சமாக குடியை விட்டு விடுகிறேன் என்று கூறிக்கொண்டு ராதிகாவை சமாதானப்படுத்துவதற்காக பேசியப்படியே அவருடைய தலையில் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பார். அப்போது பாக்கியா அந்த இடத்திற்கு வந்து விடுகிறார்.
அதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இந்த வேதனை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. எந்த ஆணுக்கும் வரக்கூடாது. கோபிக்கு மன்னிப்பே இல்லை. இருப்பினும் மன்னிக்க முயலுங்க. இந்த காட்சியில் நடிக்கும் போது நடிகர்கள் நாங்களும் மிகவும் வருத்தத்திலும் சோகத்திலும் தான் இருந்தோம். ஆனால் என்ன செய்வது? வேஷம் போட்டாச்சு, மேடை ஏறியாச்சு, காசு வாங்கியாச்சு, ஆட்டம் தொடங்கியாச்சு, நடித்து தானே ஆக வேண்டும். நெருடலான காட்சி மன்னித்து விடுங்கள் என் ரசிகர்கள் நண்பர்களே என்று கூறியிருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications