தலையில் அடித்து, நொந்து கொண்ட கோபி.. இதற்கு எல்லாம் காரணம் இவங்க தான்.! கோபி சொன்ன உண்மை

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து தான் வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை குறித்து கோபி புது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சதீஷ் கோபி கேரக்டரில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சதீஷ் பாக்கியலட்சுமி சீரியலில் புதியதாக அறிமுகம் ஆகியிருக்கும் நடிகர் பசுபதிக்கு ஆதரவு தரும்படி ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அந்த வீடியோவை தவறாக புரிந்து கொண்ட பலர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து சதீஷ் விலகப் போவதாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்களை பரப்பி வந்தனர்.

இந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்து சதீஷ் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

பெண்ணின் போராட்டம்

பெண்ணின் போராட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் ஒரு குடும்ப தலைவி தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடும் போராட்டத்தைப் பற்றியதாகவும் அதில் அனுபவிக்கும் அவமானங்கள், வெற்றிகள் பற்றியதாகவும் இருந்து வருகிறது. இந்த சீரியலில் குடும்ப தலைவி கேரக்டரில் பாக்யா நடித்த வருகிறார். அவரை திருமணம் செய்து குழந்தைகள் பிறந்த பிறகு விட்டு சென்ற கணவராக கோபி கேரக்டரில் சதீஷ் நடிக்கிறார்.

என்னம்மா நடிப்பு கோபி

என்னம்மா நடிப்பு கோபி

கோபி பாக்கியாவை விட்டு பிரிந்து விவகாரத்து வாங்கிவிட்டு தான் ஆரம்ப காலகட்டத்தில் காதலித்து வந்த ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் பாக்கியா தன்னுடைய வாழ்க்கையில் சோர்ந்து போகாமல் அடுத்தடுத்து ஒவ்வொரு முயற்சிகளாக எடுத்து அதில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து தற்போது மனதிற்குள் புலுங்கி கொண்டிருக்கும் கேரக்டராக கோபி நடித்துக் கொண்டிருக்கிறார். கோபி கேரக்டர் ஆரம்பத்திலிருந்து பாக்கியலட்சுமி சீரியலின் விறுவிறுப்புக்கு முக்கியமான அச்சாணியாக இருந்து வருகிறார். இவரை திட்டி தீர்க்காத ரசிகர்கள் இருக்க முடியாது. ஆனாலும் இவர் கடைசி நேரத்தில் பாவமாக செய்யும் அலப்பறைகளும் பலர் ரசிக்க தான் செய்கிறார்கள்.

கோபி வெளியிட்ட வீடியோ

கோபி வெளியிட்ட வீடியோ

இரண்டு பொண்டாட்டி வைத்துக் கொண்டு படும் பாட்டை இவர் கண் முன் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இதனால் இவர் நடிப்பை பலரும் பாராட்டிவரும் நிலையில் சமீபத்தில் இவர் ஒரு வீடியோவோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் புதியதாக நடிகர் பசுபதி பழனிச்சாமி கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அவருக்கும் எனக்கு தந்த ஆதரவை தர வேண்டும். அந்த கேரக்டரையும் அனைவரும் பாராட்ட வேண்டும் என்றும் இனி அவருடைய டிராக் அதிகமாக இருக்கப் போகிறது. எங்களுடைய டிராக் கொஞ்சம் குறையப்போகிறது என்று கூறியிருந்தார்.

காரணம் இவர்கள்தானாம்

காரணம் இவர்கள்தானாம்

இந்த நிலையில் கோபி வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் அப்போ இந்த சீரியலில் இருந்து கோபி வெளியேறப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். சில சேனல்களிலும் இதை பற்றி பல்வேறு தலைப்புகளில் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் நான் அந்த மாதிரி ஒரு அர்த்தத்தில் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டர் இனி கொஞ்சம் குறையப்போகிறது என்று தான் நான் சொல்லி இருந்தேன். என்று விளக்கம் கொடுத்துவிட்டு பலரும் என்னுடைய நடிப்பை பாராட்டுகிறார்கள். ஆனால் அதற்கு எல்லாம் காரணம் இந்த சீரியலில் டைரக்டர் மற்றும் கதை ஆசிரியர் தான். அவர்களுடைய கையில் தான் எங்களுடைய நடிப்பு இருக்கிறது. அவர்கள் எங்களுக்கு முழு சுதந்திரம் தந்திருக்கிறார்கள். நீங்கள் இந்த இடத்தில் எப்படி வேண்டும் என்றாலும் நடித்துக் கொள்ளுங்கள். இது தான் கதை என்று மட்டும் சொல்லிவிடுவார்கள். நாங்கள் எங்களுடைய ஸ்டைலை அங்கே காட்டுகிறோம். என்றால் அதற்கு காரணம் டைரக்டர் மற்றும் கதை ஆசிரியர் தான். அதனால் உங்களுடைய பாராட்டு அவர்களுக்கும் சேர வேண்டும் என்று கோபி கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+