பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இப்போ முடிவு இல்லையாமே! இனி நடக்கப்போவது இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கேரக்டர் இறப்பது போன்ற காட்சிகள் வந்திருக்கும் நிலையில் அதைத்தொடர்ந்து சீரியல் விரைவில் முடிவுக்கு வருவதாக இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் ரோசரி கூறியிருந்த நிலையில் இந்த சீரியல் இப்போதைக்கு முடிவுவில்லை என்றும் அடுத்த வருடம் தான் முடிய போகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் இதுவரைக்கும் இந்த சீரியலில் பில்லர் போல முக்கிய கேரக்டரில் இருந்து வந்த ராமமூர்த்தி கேரக்டர் நேற்று இறந்து போயிருக்கிறார். இனி கதை எப்படி போகும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

அதே நேரத்தில் ராமமூர்த்தி கேரக்டரில் நடித்த நடிகர் ரோசரி தன்னிடம் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்று கூறியதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது நேற்றிலிருந்து இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பாக்யாவுக்கு பக்கபலமாக இருந்து வந்த ராமமூர்த்தி தான் பாக்யாவின் பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தவர் என்பது யாராலும் மறுக்க முடியாது.
பாக்யாவை பிடிக்கவில்லை என்ற போது அவரை வலுக்கட்டாயமாக கோபிக்கு ராமமூர்த்தி தான் கல்யாணம் செய்து வைத்திருந்தார். அதோடு தன்னுடைய மனைவியான ஈஸ்வரி பாக்யாவை ஆரம்பத்தில் அதிகமாக அவமானப்படுத்தினாலும் தன்னுடைய மனைவியை எதிர்த்து பெரியதாக தன்னுடைய மருமகளுக்காக ராமமூர்த்தி எந்த முடிவும் எடுத்ததில்லை. இவ இப்படிதான் பேசிக்கிட்டு இருப்பா என்று உப்புக்கு சப்பாகத் தான் பாக்யாவுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் தற்போது கோபியின் சுயநலத்தை பற்றி தெரிந்து கொண்ட ஈஸ்வரியும் பாக்யாவை புரிந்து கொண்டு அவர் மீது பாசமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் ராமமூர்த்தியின் இறப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே இது போலத்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் பாண்டியனின் அம்மாவின் இறப்பு வந்தது. அப்போது கூட சீரியல் சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லி இருந்த நிலையில் அதற்கு பிறகு ஒரு வருடங்களுக்கு மேலாக அந்த சீரியல் ஓடிவிட்டது.
அதுபோல இந்த சீரியலில் இதுவரைக்கும் பாக்கியாவிற்க்கு பக்கபலமாக இருந்த எழில் இப்போது வீட்டை விட்டு போயிருக்கிறார். இனி எழில் பல பிரச்சனைகளை தாண்டி ஒரு இயக்குனராக சாதித்து மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும். அதுபோல பாக்கியா தன்னுடைய பிசினஸில் சாதிக்க வேண்டும். ஏற்கனவே கோபி பாக்கியா மீது கோபி கொலவெறியில் இருக்கிறார். இப்போது அப்பாவின் இறப்பிற்கு காரணமும் பாக்கியா தான் என்று கூறி பாக்யாவை பழி வாங்குவதற்காக அடுத்த பிரச்சனையை தொடங்குவார்.
ஏற்கனவே பாக்கியா ரெஸ்டாரண்ட் நடத்தும் கடையின் ஓனரிடம் கோபி இந்த ரெஸ்டாரண்டை நீங்களே எடுத்து நடத்தலாம் என்று முதல் நாளே மனதை மாற்றி இருக்கிறார். அதோடு அவருடைய போன் நம்பரையும் வைத்து வாங்கி வைத்திருப்பதால் கோபியால் இனி பாக்யாவிற்கு பிரச்சனை வரும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இப்போதைக்கு இந்த சீரியலில் முடிவு இல்லை என்று கூறப்படுகிறது.
அதிலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரைக்கும் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வாரம் முழுக்க ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் கோபி வந்து பிரச்சனை செய்வது போன்ற பரபரப்பான காட்சிகள் தான் இருக்கப் போகிறது. அதற்கு பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications