பாக்கியலட்சுமி: ரெஸ்டாரண்டை இழந்தும் புத்தி வரல.. பாக்யாவை அசிங்கப்படுத்தும் சுதாகர்! இனியா எடுத்த சூப்பர் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 10ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியாவை பற்றி சுதாகர் அவமானப்படுத்தி பேசுகிறார். அதே நேரத்தில் இனியாவிற்கு புதிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. அதுபோல பாக்கியா தன்னுடைய ரெஸ்டாரண்டில் சில புதுமைகளை செய்து பாராட்டு வாங்கி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யாவும் கோபியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா கோபியிடம் அந்த சுதாகர் நம்மளை முட்டாள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாரா? தப்பு பண்ணவங்கதான் பொறுத்துக் கொண்டு போகணும் நாம என்ன தப்பு பண்ணினோம் என்று கேட்கிறார். அதற்கு கோபி நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு நீ கொஞ்சம் ரிலாக்ஸா இரு என்று சமாதானம் படுத்துகிறார்.

கோபி கொடுத்த வாக்கு
அதற்கு பாக்கியா நாம ஒன்னும் அவங்க கிட்ட போய் பொண்ணு கேட்டு நிற்கல, அவங்க தானே இங்க வந்தாங்க என்று கோபமாக திட்டிக் கொண்டிருக்கும்போது அந்த பக்கமாக வந்த ஈஸ்வரி பாக்யாவிடம், நீ இப்போ எதற்கு கோபியை மிரட்டிக்கொண்டு இருக்கிறா என்று திட்டுகிறார். அதற்கு பாக்கியா உண்மையை சொல்லப் போகிறார். அப்பொழுது கோபி வேண்டாம் என்று கண்ணை காட்டி விடுகிறார். பிறகு ஈஸ்வரியிடம் நாங்கள் ரெஸ்டாரன்ட் விஷயத்தை பற்றி பேசிட்டு இருந்தோம் என்று கோபி சொன்னதும் ஈஸ்வரி அங்கிருந்து போகிறார்.
சுதாகரின் மன மாற்றம்
பிறகு பாக்யாவிடம் நான் பண்ணுன தப்பை நானே சரி பண்ணுறேன் என்று சொல்லிவிட்டு கோபி கிளம்புகிறார். அதை தொடர்ந்து சுதாகர் தன்னுடைய மனைவியிடம் பாக்கியா இதே போல கோபப்பட்டு ரெஸ்டாரன்ட் உட்பட வாழ்க்கையில் பலவற்றை இழந்துட்டாங்க. ஆனாலும் புத்தி வரல என்று பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு இனியாவை கூப்பிட்டு இங்கு நடக்கிற பிரச்சனைகளை எதுக்காக உங்க வீட்ல பொய் சொல்லுற, உங்க அப்பாவும் அம்மாவும் வந்து பேசினாங்க, நீ வேலைக்கு போகணும்னு ஆசைப்படறல்ல நீ போ நாளைக்கு ஜாயின் பண்ணு என்று சொல்ல இனியா சந்தோஷப்பட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
பாக்யா அட்வைஸ்
பிறகு இனியா பாக்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்கிறார். பாக்கியாவும் சந்தோஷப்பட்டு இதுக்கப்புறம் என்ன விஷயம் நடந்தாலும் என்கிட்டயும் சொல்லனும். நான் கஷ்டப்படுவேன்னு நீ நினைக்க கூடாது என்று சொல்ல, இனியா சரிமா நான் டாடிக்கு விஷயத்தை சொல்லிவிட்டு ஆபீஸ் மெயில் போடுறேன் என்று போனை வைக்கிறார். பிறகு பாக்யா ரெஸ்டாரண்டில் இருக்கும்போது ஒரு பெரியவர் சொன்ன ஸ்வீட் செய்து கொண்டிருக்கிறார்.
பாக்கியாவுக்கு பாராட்டு
அப்போது கவுன்சிலர் வந்து சாப்பிட உட்காருகிறார். அவருக்கு செல்வி பரிமாறிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு போன மூன்று பேரும் வருகின்றனர். அப்போது கவுன்சிலர் பாக்யாவை கூப்பிட்டு பரிமாற சொல்கிறார். அப்போது பாக்யா ஸ்வீட் செய்வதை பார்த்து கவுன்சிலர் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்வீட்டுக்காக வந்த பெரியவரிடம் பாக்யா ஸ்வீட்டை கொடுக்க, அவர் சாப்பிட்டு பார்த்துவிட்டு சந்தோஷத்தில் கண்கலங்கி பாக்கியாவுக்கு நன்றி சொல்கிறார்.
இன்ப அதிர்ச்சி
எங்க அம்மா செய்த மாதிரியே இருக்குமா என்று பாராட்டி பேசுகிறார் என்று சொல்கிறார். அப்போது கவுன்சிலர் தான் சாப்பிட்டதற்கு பணத்தை கொடுத்து விட்டு போக, அதை பார்த்து பாக்கியா இன்ப அதிர்ச்சி ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications