பாக்கியலட்சுமி: சுதாகர் வீட்டை விட்டு வந்த இனியா.. கோபிக்கு தெரிந்த உண்மை! பாக்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 12-ம் தேதிக்கான எபிசோடில் சுதாகர் வீட்டை விட்டு இனியா பாக்யா வீட்டிற்கு வந்திருக்கிறார். இந்த விஷயம் கோபி மற்றும் ஈஸ்வரிக்கு தெரிய வருகிறது. ஆனால் இனியா தன்னைப் பற்றிய உண்மைகளை குடும்பத்திடம் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியா வேலைக்கு போயிட்டு வீட்டிற்கு வந்து ஹாலிங் பெல் அடிக்கிறார். ஆனால் நிதிஷ் இனியா தான் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் கதவை திறக்காமல் இருக்கிறார். இனியா போன் செய்து பார்க்க போனையும் கட் பண்ணி விடுகிறார். இதனால் வேறு வழி இல்லாமல் இனியா கிளம்பி விடுகிறார் கொஞ்ச நேரம் கழித்து சத்தமில்லாததால் ஆகாஷ் வெளியே வந்து பார்க்க ஆள் இல்லாததை கண்டதும் அவ எங்க வேணா போகட்டும் என்று சொல்லி வீட்டிற்குள் சென்று விடுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

ஏமாற்றிய நிதிஷ்

அப்போது நிதிஷ் அம்மா வந்து ஹாலின் பெல் ரொம்ப நேரம் அடிச்சிட்டு இருந்தது யார் என்று கேட்க, அதற்கு ஆகாஷ் ஏதோ புட் டெலிவரி அட்ரஸ் மாறி வந்துட்டாங்க. நான் அவங்களை அனுப்பிட்டேன் என்று ஆகாஷ் பொய் சொன்னதும் இனியா இன்னும் வரலையா என்று சந்திரிகா கேட்கிறார். அதற்கு டாடி தான வேலைக்கு அனுப்பினார், அவர் கிட்டயே போய் கேளுங்க என்று நிதிஷ் சொல்லி விடுகிறார்.

இனியா மறைக்கும் உண்மை

மறு பக்கத்தில் இனியா பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு வந்து ரெஸ்டாரண்ட் எப்படி மா போகுது டெவலப்மெண்ட் இருக்கா? இந்த ரெஸ்டாரன்ட்டை டெவலப் பண்ண என்னவெல்லாம் பண்ணலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா வேலைக்கு போயிட்டு வந்தியா? வேலை எப்படி போச்சு? வீட்டில் என்ன சொன்னாங்க என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்க நீ என்னை பத்தி பயப்படாத நான் சந்தோஷமா இருக்கிறேன், இன்னைக்கு நாம எல்லாரும் வீட்ல ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்னு ஆசையா இருக்குன்னு இனியா சொல்ல சரி நீ வீட்டுக்கு போ நான் சீக்கிரமா வரேன் என்று இனியாவை அனுப்பி வைக்கிறார்.

ஈஸ்வரி கேட்ட கேள்வி

மறுபக்கத்தில் இனியா செழியன் குழந்தைகளை வைத்து கொஞ்சி கொண்டிருக்கும்போது ஈஸ்வரி நீ எத்தனை நாளைக்கு தான் இப்படி அடுத்தவங்க குழந்தையை எடுத்து கொஞ்சிக்கிட்டு இருப்ப, சீக்கிரமா நீயும் குழந்தை பெத்துக்க வழியை பாரு என்று அட்வைஸ் செய்கிறார். அதற்கு பாக்கியா இப்ப தானே கல்யாணம் முடிஞ்சு இருக்கு, அதற்குள் அவசரப்படுத்தனுமா? அவங்களுக்கு எப்ப விருப்பப்படுறாங்களோ அப்போ குழந்தை பெத்துக்கட்டும் என்று சொல்கிறார்.

திட்டிய ஈஸ்வரி

அதற்கு வழக்கம் போல ஈஸ்வரி பாக்கியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக கோபியும் பாக்கியா வீட்டிற்கு வருகிறார். அவரும் இனியாவை பார்த்ததும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு பாக்யா எல்லாரையும் சாப்பிட கூப்பிட, கோபி நான் சாப்பிட வரலை என்று தனியாக உட்கார்ந்து இருக்கிறார். ஈஸ்வரி கோபி சாப்பிட்டு இருக்க மாட்டான், நீ அவனை வர சொன்னால் தான் அவன் வந்து சாப்பிடுவான் என்று பாக்யாவிடம் சொல்கிறார். பாக்யாவும் இனியாவிற்காக சரி என்று சொல்ல, கோபியும் அவர்களோடு சேர்ந்து சாப்பிடுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கோபிக்கு தெரிந்த உண்மை

பிறகு இனியா பாக்கியாவுடன் தூங்கப்போய்விடுகிறார். அந்த நேரத்தில் கோபி ஈஸ்வரியை வீட்டிற்கு கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது சுதாகர் போன் செய்து இனியா எதுவும் போன் செய்தாளா? என்று விசாரிக்க, இனியா இங்கே தான் இருக்கிறா என்று கோபி சொல்கிறார். அதற்கு சுதாகர் இனியா அங்க வரதை பற்றி எதுவும் சொல்லல, நாங்க போன் பண்ணினாலும் எடுக்கல என்று சொல்ல கோபி அதிர்ச்சியாகி நான் இனியாவிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.

ஈஸ்வரியின் விசாரணை

பிறகு இனியாவிடம் பேசுவதற்காக கோபி போகிறார். அங்கு இனியா பாக்ககயாவுடன் தூங்கிக் கொண்டிருக்கிறார். உடனே சரி நாளைக்கு காலையில் நாம பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு கோபி கிளம்புகிறார். அடுத்த நாள் காலையில் பாக்கியாவிடம் ஈஸ்வரி இனியா பற்றி விசாரிக்கிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+