பாக்கியலட்சுமி: ஆகாஷிடம் சத்தியம் வாங்கிய பாக்கியா.. செல்வி சொன்ன அதிர்ச்சி வார்த்தை.. கோபத்தில் ஈஸ்வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 12ம் தேதிக்கான எபிசோடில் பாக்கியா செல்வி வீட்டிற்கு சென்று சத்தியம் வாங்குகிறார். அதே நேரத்தில் பாக்கியாவிடம் ஈஸ்வரி முக்கிய விஷயம் ஒன்றை சொல்லி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு கிளம்ப அப்போது அங்கு வரும் ஈஸ்வரி நீ இனி ரெஸ்டாரண்டுக்கு போக வேண்டாம். உன் வீட்டிலேயே இருந்து இனி உன் பிள்ளைகளை பொறுப்பான அம்மாவா இருந்து கவனி என்று சொல்ல, அதற்கு கோபி அம்மா என்னம்மா பேசிட்டு இருக்கீங்க நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க என்று சொல்ல, அதற்கு பாக்கியா வெளியில் வேலைக்கு போக வேண்டாம் இனியாவை வீட்டிலேயே இருந்து பார்க்கட்டும் என்று முடிவாக சொல்கிறார்.

baakiyalakshmi serial

ஈஸ்வரி சொன்ன வார்த்தை

அதற்கு பாக்கியா பேசி முடிச்சிட்டீங்களா? எனக்கு என்னுடைய பிள்ளைகளை எப்படி பார்த்துக்கணும் என்று தெரியும். ஒரு பிள்ளை ஏதாவது சாதிச்சிட்டா மட்டும் என்னுடைய பிள்ளை என்று எல்லோரும் உரிமை கொண்டாடிட்டு வரீங்க. அதே நேரத்தில் ஒரு புள்ள தப்பு செஞ்சா மட்டும் அம்மா தான் காரணமா? என்று கோபமாக திட்டி விட்டு அங்கிருந்து போகிறார்.

ஈஸ்வரியின் கோபம்

பாக்யா போனதும் ஈஸ்வரி என்ன சொல்லிட்டு போறா பாத்தியா என்று கோபியிடம் சொல்ல, அதற்கு கோபி அவ சொன்னதுல என்னம்மா தப்பு இருக்கு அவ சரியா தான் பேசிட்டு போறா. அவ ரெஸ்டாரெண்ட் போய் வேலையை பார்க்கட்டும் என்று சொல்கிறார். பிறகு வீட்டு வாசலில் பாக்கியா எழிலிடம் நான் வேலைக்கு போயிட்டு வரேன் நீ கொஞ்சம் இனியாவை வீட்டில் இருக்கும் போது பாத்துக்கோ என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

baakiyalakshmi serial

பாக்கியா வருத்தம்

அதைத்தொடர்ந்து பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு போய் அங்கு வேலைகளில் கவனம் செலுத்துகிறார். அப்போது அங்கிருந்த எல்லோரும் செல்வி மற்றும் பாக்யா பற்றி ரகசியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்கியா செல்வியை கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் செல்வி இன்னைக்கு வேலைக்கு வரல என்று அங்கிருந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஆகாஷ் கேட்ட கேள்வி

மறுபக்கத்தில் ஆகாஷ் செல்வி கிட்ட அம்மா ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரவா என்று கேட்கிறார். அதற்கு செல்வி விஷம் இருந்தா வாங்கிட்டு வா என்று சொல்லிவிட்டு அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்யா செல்வி வீட்டிற்கு வந்து நிற்கிறார்‌ அதை பார்த்ததும் செல்வி ரொம்பவும் சந்தோஷப்படுகிறார்.

செல்வி சொன்ன வார்த்தை

செல்வியிடம் சாப்டியா என்று நலம் விசாரித்துக் கொண்டிருக்க செல்வி, அக்கா என்னை மன்னிச்சிருக்கா இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்‌ அப்போது ஆகாஷ் பாக்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு செல்வி நான் என்னுடைய மகனை கூட்டிக்கொண்டு வேற ஊருக்கு போகிறேன் என்று சொல்கிறார்.

baakiyalakshmi serial

பாக்யா அட்வைஸ்

அதற்கு பாக்கியா ஆகாஷிடம் நீ தான் இந்த குடும்பத்தை தூக்கி நிறுத்தணும். இந்த குடும்பத்திற்கு உன்னால் தான் முன்னேற்றம் வரணும் என்று உங்க அம்மா இத்தனை நாளா உனக்காக கஷ்டப்பட்டு இருக்கா. நீ அந்த கஷ்டத்தை புரிஞ்சுக்காம உன் மனசை அலைபாய விடுறதா. உன் வயசு அப்படி யோசிச்சலும் நீ புரிஞ்சுக்கணும்.

கதறி அழுத செல்வி

நீ பணக்கார வீட்டு பொண்ணை காதலிச்சது தப்புன்னு நான் சொல்லல. அதற்கு தகுந்த வகையில் உன் தகுதியை நீ உயர்த்திக்கணும். நீ இப்படியே இருந்தா எல்லாரும் தப்பா தான் பேசுவாங்க. இனியா இனி உன் கிட்ட பேச மாட்டா. நீயும் இனியா கிட்ட பேச முயற்சி செய்யாத. உன்னுடைய படிப்பில் கவனத்தை செலுத்து. நீ வாழ்க்கையில் முன்னேறிய பிறகு உன்னுடைய காதல் கல்யாணத்தைப் பற்றி எல்லாம் யோசி என்று அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்.

baakiyalakshmi serial

சத்தியம் செய்த ஆகாஷ்

இனியா நான் சொன்னதற்கெல்லாம் சரி என்று சத்தியம் செஞ்சு கொடுத்துட்டா நீயும் சத்தியம் செய் என்று சொல்ல முதலில் ஆகாஷ் யோசிக்கிறார். அதற்கு செல்வி அக்காவே இவ்வளவு இறங்கி வந்து உன்கிட்ட பேசுறா.. சத்தியம் செஞ்சு கொடுடா என்று சொன்னதும் சரி என்று ஆகாஷ் சத்தியம் செய்து கொடுக்கிறார். பிறகு பாக்கியா செல்வியிடம் இனி நீ வீட்டுக்கு வேலைக்கு வர வேண்டாம் நான் உனக்காக சின்னதா ஒரு பிசினஸ் தொடங்கி தரேன் நீ அதை கவனிச்சிக்கோ என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் அக்கா என்று செல்வி சொல்கிறார். ஆனால் பாக்கியா எனக்கு ஆரம்பத்தில் இருந்து உதவி செஞ்சது நீதான் உனக்கு ஏதாவது நான் செய்யணும்னு நினைக்கிறேன் இதை கண்டிப்பா ஏற்றுக்கொள்ளனும் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+