பாக்கியலட்சுமி: உயிருக்கு போராடும் ஆகாஷ்.. செழியனை அடித்த பாக்யா.. கோபி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 13ஆம் தேதிக்கான எபிசோடில் ஆகாஷ் வீட்டிற்கு சென்று செழியன் அவரை அடித்து இருக்கிறார். ஆகாஷ் மருத்துவமனையில் இருப்பதை பார்த்து பாக்கியா செழியனை அடித்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபியும் செழியனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆகாஷ் போன் போடுவதை பார்த்து கோபி டென்ஷன் ஆகிறார். அதனால் செழியன் அவனை நேரில் பார்த்து பேசிவிடலாம் இல்லனா அவன் இனியா கிட்ட பேசிகிட்டு தான் இருப்பான். எப்பவுமே நம்ம இனியா கூட இருக்கவே முடியாது.

செழியன் ப்ளான்
அதனால அவனை நேரில் பார்த்து பேசி விட்டு வரலாம் என்று இருவரும் செல்வி வீட்டிற்கு செல்கின்றனர். செழியன் வாசலில் இருந்து ஆகாஷை கூப்பிட ஆகாஷ் வெளியே வந்ததும் செழியன் கோபப்பட்டு உனக்கு என் தங்கச்சி கேட்குதா என்று சொல்லி அடித்து கையை உடைக்கிறார். அப்போது கோபி எதுக்குடா இப்போ போன் பண்ணுன என்று கேட்க, நான் இனியாவை உண்மையாக காதலித்தேன். ஆனால் இனிமேல் பேச வேணாம்னு சொல்றதுக்குதான் போன் பண்ணுனேன் வேற எதுக்காகவும் இல்லை என்று சொல்ல, செழியன் இதை நம்பாமல் ஆகாஷை போட்டு அடித்து விடுகிறார்.
பாவம் ஆகாஷ்
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து ஆகாஷை காப்பாற்றுகிறார்கள். செழியன் மற்றும் கோபியை திட்டி அனுப்புகிறார்கள். மறுபக்கத்தில் பாக்யா ரெஸ்டாரண்டில் இருக்கும்போது செல்வி அங்கு தயங்கி தயங்கி வருகிறார். செல்வியை பார்த்ததும் அங்கு வேலை செய்பவர்கள் எல்லோரும் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள்.

அப்போது செல்வி பாக்யாவிடம் கண்டிப்பாக நான் வேலைக்கு வரணுமா அக்கா? முன்னாடி இருந்த மாதிரி இனி இங்கே என்னால வேலை பார்க்க முடியாது. என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ போய் வேலையை கவனி என்று பாக்யா சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செல்விக்கு போன் வருகிறது.
ஆகாஷுக்கு அடி
அப்போது ஆகாஷை ரெண்டு பேரு வீட்டுக்கு வந்து அடிச்சு போட்டுட்டாங்க ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறோம் என்று சொன்னதும் செல்வி அழுது கொண்டு ஹாஸ்பிடலுக்கு போகிறார். பாக்யா நானும் வரேன் என்று செல்வியுடன் ஹாஸ்பிடலுக்கு வருகிறார். ஆகாஷை அடித்தது கோபியும் செழியனும் தான் என்று அங்கிருந்தவர்கள் எல்லோரும் சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

மருத்துவமனையில் ஆகாஷ்
அப்போது செல்வி நான்தான் சொன்னேனே அக்கா நாங்க இந்த ஊரை விட்டு வேற எங்கேயாவது போயிடுவோம் என்று எதுக்காக இவங்க இப்படி பண்ணுறாங்க அதான் என் பையன் இனியா கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டானே? அதுக்கு பிறகு இப்படி அடிச்சு போட்டு இருக்காங்களே! எங்களுக்குன்னு யாரும் இல்லனு இப்படி பண்ணுகிறார்கள் என்று அழுது கொண்டிருக்க பாக்கியா மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வருகிறார்.
கோபி வார்னிங்
அடுத்த கட்டத்தில் இனியா சோகமாக டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது எழில் நான் ஒரு ஸ்கிரிப்ட் எழுதி இருக்கிறேன் அதை படிச்சு பாரு அமிர்தா உனக்கு பிடிக்கும் என்று சொன்னாள், என்று சொல்ல இனியா நான் பிறகு படிக்கிறேன் இப்போது படிக்கல என்று சொல்லிவிட்டு வீட்டு வாசலுக்கு போக போகிறார். அப்போது கோபி இனியாவிடம் எங்க போற என்று கேட்க போர்டிகோவில் உட்கார போறேன் என்று இனியா சொல்ல, இனி நீ வாசலில் கூட உட்கார கூடாது வீட்டுக்குள்ளே போ என்று திட்டுகிறார்.
செழியன் திமிர் பேச்சு
அப்போது எழில் நம் வீட்டுக்குள்ள அவ எங்க இருந்தா என்ன என்று கேட்க, அதற்கு உன் வேலைபார்த்துட்டு இரு என்று ஈஸ்வரி திட்டுகிறார். அந்த நேரத்தில் பாக்யா வீட்டிற்கு கோபமாக வந்து செழியனிடம் நீ எங்க போயிட்டு வந்த என்று கேட்க, எல்லோரும் என்ன ஆச்சு என்று பாக்கியாவிடம் கேள்வி கேட்கிறார்கள். அப்போது பாக்கியா, செழியனும் கோபியும் ஆகாஷை அடித்து விட்டு வந்திருக்காங்க. அவன் இப்போ ஹாஸ்பிடலில் இருக்கிறான் என்று சொல்கிறார்.

செழியனை அடித்த பாக்கியா
செழியன் அவனை விட்டுட்டு வந்ததே பெருசுனு நினைச்சுக்க. அவனுக்கு நம்ம வீட்டு பொண்ணு கேட்குதா? அந்த வீட்டில் பத்து நிமிஷம் கூட நம்மால் இருக்க முடியல அந்த தெருவே அவ்வளவு மோசமா இருக்கு. அந்த இடத்தில் இருந்துட்டு அவனுக்கு நம்ம வீட்டு பொண்ணு வேணுமா? அவனை எல்லாம் கொன்னு போட்டு இருக்கணும் என்று சொன்னதும் பாக்கியா செழியனை அடித்து விடுகிறார். அதை பார்த்து ஜெனி, கோபி, ஈஸ்வரி என எல்லோரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications