பாக்கியலட்சுமி: திருமணம் முடிந்ததும் இனியா சொன்ன வார்த்தை, கதறி அழுத பாக்யா.. பரிதாப நிலையில் கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 16ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவின் திருமணத்திற்கு பிறகு இனியா அவருடைய கணவருடன் பாக்கியா வீட்டிற்கு வருகிறார்கள். அங்கு பல சென்டிமென்ட் காட்சிகள் நடைபெறுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியாவிற்கு கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை மெட்டி போட்டு விடுகிறார். பிறகு எல்லோரும் போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக பாக்யாவின் வீட்டிற்கு குடும்பத்தினர் வருகிறார்கள். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க பிறகு இனியா வீட்டில் விளக்கு ஏற்றிவிட்டு ராமமூர்த்தியின் போட்டோவிற்கு மலர் தூவி மரியாதை செய்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

குழப்பத்தில் இனியா

இனியாவுடன் சேர்ந்து நித்திஷ் மரியாதை செய்ய எல்லோரும் உட்காருகின்றனர். மாப்பிள்ளையின் அம்மா பாலும் பழமும் கொடுக்கணும் என்று சொல்ல ,அமிர்தா எடுத்துக்கொண்டு வந்து இனியாவிற்கு முதலில் கொடுக்க, மாப்பிள்ளை அம்மா என்னதான் உங்க வீட்டு பொண்ணா இருந்தாலும் என் பையனுக்கு தானே முதலில் கொடுக்கணும் என்று கிண்டலாக குத்தி காட்டுகிறார்.

மாமியார் சொன்ன வார்த்தை

உடனே அமிர்தா மாப்பிள்ளைக்கு கொடுக்க போக அவர் இனியாவுக்கே கொடுங்கள் என்று சொல்ல மாப்பிள்ளை அம்மா இப்பவே இவ்வளவு சப்போர்ட்டா வந்த உடனே பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்றான் பாருங்க என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். பிறகு பாலும் பழமும் ஊட்டி விடுகிறார்கள். அடுத்ததாக பாக்கியா இனியாவுடன் ரூமில் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கதறி அழுத பாக்யா

அப்போது உன்ன நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் இனியா குட்டி, நீ இங்கே இருந்து போறதுனால இது உன்னுடைய வீடு இல்லை என்று ஆகிவிடாது. நீ எப்பவும் இங்க வரலாம் அதே மாதிரி இங்க எல்லாரும் உனக்கு பாசம் கொடுத்த மாதிரி அங்கேயும் எல்லாமே கிடைக்கும்னு நினைக்க கூடாது. அங்கு மருமகளா உன்னுடைய கடமைகளை நீ செய்யணும். அது மட்டும் இல்லாம உனக்குன்னு ஒருத்தர் இருக்காரு அவரை புரிஞ்சுகிட்டு லைப் ஸ்டார்ட் பண்ணு கொஞ்ச நேரம் ஆகும் ஆனா சண்டை எதுவும் போடக்கூடாது என்று அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

பாக்யா அட்வைஸ்

அதோடு நீ நிறைய படிக்கணும். எதுக்காகவும் உன்னுடைய படிப்பை விட்டுடாத நீ புதுசா தேடிக்கிட்டே இரு என்று சொல்ல இனியா நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா. உன்ன நான் இதுவரைக்கும் சரியா புரிஞ்சிக்காம பல இடங்களில் கஷ்டப்படுத்தி இருக்கிறேன் என்று ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி வருகிறார். கோபி இனியாவிடம் பேச வேண்டும் என்றதும் பாக்கியா சென்று விடுகிறார்.

கோபி வருத்தம்

உன்னை இப்பதான் பிறந்து கையில வாங்கின மாதிரி இருக்கு இனியா, எப்பவுமே பெத்தவங்க கண்ணுக்கு பசங்க வளர மாட்டாங்கன்னு சொல்லுவாங்க அதை இப்பதான் உணர்கிறேன். உன்னை இப்பதான் ஸ்கூல்ல எடுத்துட்டு போய் விட்ட மாதிரி இருந்து அதுக்குள் உனக்கு கல்யாணமா முடிஞ்சிடுச்சு. நீ அப்பா மேல கோபமா இருக்கியா? நமக்குள்ள ஒரு சின்ன முரண்பாடுகள் நடந்தது அது எல்லாமே நல்லதுக்காக தான்.

Baakiyalakshmi Serial vijay TV

மன்னிப்பு கேட்ட கோபி

என்னை மன்னித்துவிடு ஒரு அப்பாவா என் கடமைகளை தான் நான் செய்தேன். அது உனக்கு இப்போ புரியாது ஆனால் பிறகு கண்டிப்பாக அது சரின்னு தோணும். மாப்பிள்ளை உன்னை நல்லா பாத்துக்குவாரு. எதுவா இருந்தாலும் அப்பாவுக்கு போன் பண்ணு என்று அட்வைஸ் கொடுத்து இனியாவை அழைத்து செல்கிறார். பிறகு கிளம்பலாமா என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்க இனியா செழியன் மற்றும் எழிலிடம் கிளம்புவதாக சொல்ல அவர்களும் கண்ணீருடன் இனியாவிற்கு ஆறுதல் சொல்கின்றனர்.

ஈஸ்வரி எமோஷனல்

பிறகு அமிர்தா, ஈஸ்வரி என எல்லோரிடமும் இனியா கண்கலங்கி பேச ஈஸ்வரி இனியாவுக்கு கல்யாணம் ஆகும்னு நெனச்சேன் தானே. ஆனால் அவள் இல்லாமல் நான் எப்படி இருக்க போறேன்னு தெரியல என்று சொல்ல, சுதாகர் நீங்கதான் ஆறுதல் சொல்லணும் நீங்களே இப்படி அழுதா எப்படி என்று கேட்கிறார். பிறகு ஒரு வழியாக எல்லோரும் இனியாவை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். பிறகு இனியா சுதாகர் வீட்டிலும் விளக்கு ஏற்றி வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+