பாக்கியலட்சுமி: ஆகாஷிடம் பேசிய இனியா.. பாக்யா கேட்ட கேள்வி.. கோபியின் மனமாற்றம்! ஈஸ்வரிக்கு விழுந்த அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 2025 மார்ச் 1ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா ஆகாஷிடம் அதிகமான நேரம் போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பாக்கியா திட்டுகிறார். அதே நேரத்தில் கோபி மனம் மாறி பாக்யாவிற்காக செய்த செயலை பார்த்து ஈஸ்வரி கோபப்படுகிறார்.
இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கோபமாக இருக்க பாக்கியா சாப்பிட கூப்பிடுகிறார். ஆனால் அவர் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா மாத்திரை போடணும் இல்லனா மயக்கம் வந்துடும் என்று சொல்ல, நான் எப்படி வேணாலும் போறேன் உனக்கென்ன? நீ தான் என்னை வீட்டை விட்டு போக சொல்லிட்டியே அப்புறம் எதுக்கு இதையெல்லாம் கேக்குற என்று சொல்ல, நீங்க என்கிட்ட கேட்டதுக்கு தான் உங்களுக்கு பதில் சொன்னேன் என்று சொல்கிறார்.

ஈஸ்வரி பிடிவாதம்
ஆனால் ஈஸ்வரி பிடிவாதமாக சாப்பிட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு வெளியே வந்த பாக்கியா இனியாவிடம் நீ சாப்பிடுறியா என்று கேட்க, இனியா எனக்கு இன்னும் கொஞ்சம் எழுத வேண்டியது இருக்கு நான் முடிச்சிட்டு சாப்பிடுகிறேன் என்று சொல்கிறார். பிறகு நீ சாப்பிடும்போது பாட்டிக்கு சாப்பாடு கொடு அவங்க சாப்பிடலைன்னா உங்க அப்பா கிட்ட சொல்லு என்று சொல்கிறார்.
ஈஸ்வரிக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள் பற்றியும் சொல்லிவிட்டு பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு கிளம்புகிறார். பாக்கியா போனதும் இனியா ஆகாஷுக்கு போன் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். பாக்யா ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி பழனிச்சாமி சார் என்ன சொல்லி இருக்காரு? நீ வேலை செய்யக்கூடாதுனு தானே சொல்லி இருக்காரு என்று கேட்க, அதற்கு பாக்கியா அதெல்லாம் இல்ல எல்லாரும் ரொம்ப பிசியா இருக்காங்க அதான் நான் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு இனியாவுக்கு போன் போடுகிறார்.

இனியாவின் போன் பிஸி
ஆனால் இனியாவின் போன் பிஸியாக வருகிறது. இந்த டைம்ல யாருகிட்ட பேசிட்டு இருக்கா என்று பாக்கியா யோசிக்கிறார். அதற்கு செல்வி இந்த காலத்து பசங்க அப்படித்தான் அக்கா இருக்காங்க. என் பையனும் எப்பவும் போன்ல தான் பேசிட்டு இருக்கான். கேட்டா பிரண்டுன்னு சொல்லுறான் என்று சொல்ல, பாக்கிய திரும்பவும் போன் பண்ணி பார்க்கும் போதும் பிஸி என்று வர டென்ஷன் ஆகி போனை வைத்து விடுகிறார்.
மறுபக்கத்தில் கோபி ஈஸ்வரியை உட்கார வைத்து சாப்பாடு கொடுக்க நீ எதுக்கு கஷ்டப்பட்டு வர கோபி... நான் உனக்கு கஷ்டம் கொடுக்கிறேனா என்று கேட்கிறார். அதற்கு இல்லம்மா நீங்க தான் எனக்கு முக்கியம் என சாப்பாடு எடுத்து வைக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா அங்கு வர, பாக்யாவை பார்த்து ஈஸ்வரி எனக்கு சாப்பாடு போதும் என்று எழுந்து விடுகிறார். பிறகு கோபி பாக்யாவிடம் அம்மா சாப்பிட்டாங்க டோன்ட்ஒரி என்று சொல்ல பாக்கியா தேங்க்ஸ் என்று சொல்கிறார்.
இனியா சொன்ன விஷயம்
பிறகு இனியா பாக்கியாவிடம் நீ வரும் முன்னாடி வரைக்கும் பாட்டி நல்லா சாப்பிட்டு இருந்தாங்க. உன்ன பார்த்ததும் தான் சாப்பிடாம எழுந்து போயிட்டாங்க. நீ எத்தனையோ முறை பாட்டியை பார்க்கிறதுக்காக ரெஸ்டாரண்டில் இருந்து ஓடி வந்து இருக்கே. ஆனா அதெல்லாம் பாட்டிக்கு பெருசா தெரியல. இன்னைக்கு ஒரு நாள் அப்பா வந்துட்டாருன்னு உனக்கு கஷ்டம் கொடுக்கிறேனான்னு கேக்குறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
Top 10 Tamil Serials: மீண்டும் முதலிடத்திற்கு வந்த ஹிட் சீரியல்.. சிறகடிக்க ஆசை பிடித்த இடம்!
அப்போது பாக்கியா இனியாவிடம் நீ யாரு கிட்ட போனில் பேசிக்கொண்டே இருக்க? எப்போதும் பிஸினு தான் வருது. நான் இங்கிருந்து வேலைக்காக வெளியே போனாலும் இங்க என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும். நீ போனில் ரொம்ப பேசிட்டு இருக்க என்று கேட்க, அதற்கு பாக்கியா நான் எந்த தப்பும் பண்ணலமா என்று சொல்ல, தப்பு பண்ணலன்னா சந்தோஷம் ஆனால் கவனமா இருக்கணும் என்று வார்னிங் கொடுக்கிறார்.
பாக்கியா கேட்ட கேள்வி
அதை தொடர்ந்து இரவு பாக்கியா கணக்கு பார்த்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி தண்ணி எடுப்பதற்காக கிச்சனுக்கு வருகிறார். இப்போவே லேட்டாகிட்டு இன்னும் பாக்கியா தூங்கல. காலையில் சீக்கிரமா முழிக்கிறா. உடம்பு சரி இல்லாமல் போயிடப் போகுது என்று சொல்லி கோபி ஒரு கப்பில் காபி எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார்.

பிறகு அடுத்த நாள் காலையில் கிச்சனில் செல்வி வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது பாக்கியா சோர்வாக இருப்பதை கவனித்து பாக்கியாவிடம் உடம்பு சரியில்லையா அக்கா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா இல்ல இரவு கணக்கு பார்த்துட்டு தூங்க லேட் ஆகிடுச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இனி நடக்கப்போவது இதுதானா? வீட்டை விட்டு வெளியேறும் கோபி! அப்போ அந்த லெட்டர்?
அந்த நேரத்தில் ஹாலுக்கு வந்த ஈஸ்வரி அங்கு ஒரு கப்பில் காபி மூடி வைத்திருப்பதை பார்த்து இது யாரு போட்டு இங்கே மூடி வைத்தது என்று கேட்கிறார். அப்போது கோபிக்கு தான் போட்டுக் கொடுத்த காபியை பாக்கியா குடிக்கவில்லை என்று தெரிய வருகிறது. உடனே பாக்யா விருவிருவென வந்து அந்த காபியை எடுத்து வாஷ்பேஷனில் ஊற்றி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications