பாக்கியலட்சுமி: செத்து போங்க, ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த பாக்கியா.. இனியா எடுத்த சூப்பர் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 20ம் தேதிக்கான எபிசோடில் தன்னுடைய நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்காக இனியா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் பாக்கியா சொன்ன வார்த்தையை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சியில் இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி ஹாலில் இருக்கும் போது கிச்சனில் பாக்யா சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஈஸ்வரி கோபி இடம் மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஏழு பேர் வராங்க நம்ம வீட்டுல 14 பேர் இருக்காங்க எல்லாருக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வந்துரு. வீட்டுல யாரும் இதை தடுக்கக்கூடாது. நிச்சயம் நடந்தே ஆகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பாக்கியா வாக்குவாதம்
பாக்கியா கிச்சனிலிருந்து கோபமாக வந்து உங்களுக்கு எத்தனை வாட்டி சொல்றது? நான் அவ்வளவு தூரம் சொல்லி நீங்க இந்த முடிவு எடுத்திருக்கீங்க என்றால் என்ன அர்த்தம் ? என்று கோபப்படுகிறார். அதற்கு ஈஸ்வரி இனியாவுக்கு எது நல்லதோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று சொல்ல, உங்களை விட இனியா மேல எனக்கு நிறைய அக்கறை இருக்கு. அவளை பெத்தவளா எனக்கு தெரியும்.
கோபியின் சமாளிப்பு
இந்த விஷயத்தில் நீங்க தலையிடாதீங்க என்று பாக்கியா சொன்னதும், கோபி நான் மாப்பிள்ளை பற்றி விசாரிச்சிட்டேன். சொந்தக்காரங்க கிட்ட கேட்டேன் நல்ல பையன் என்று சொல்கிறார்கள். நம்ம இப்போவேவா கல்யாணத்தை பண்ண போறோம்? நிச்சயம் மட்டும்தான் இப்போ நடக்கும், கல்யாணம் இனியாவோட சம்மதத்தோட பிறகு நடக்கும் என்று சொல்ல, பாக்கியா இதைவிட நல்ல பையன் எல்லாம் கிடைப்பான் இப்போதைக்கு படிக்கட்டும் என்று சொல்கிறார்.
ஈஸ்வரிக்கு பதிலடி
அதற்கு ஈஸ்வரி நான் சொன்னது மட்டும் நடக்கலைனா நான் செத்துருவேன் என்று மிரட்ட, அதற்கு பாக்கியா அப்படின்னா நீங்க செத்துப் போங்க என்று சொன்னதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி என்ன சொன்ன... என்ன சொன்ன.. நான் சாகனுமா? நான் செத்துப்போனா கூட உனக்கு பிரச்சனை இல்லையா? என்று கேட்க, அதற்கு பாக்கியா நீங்க சும்மா சும்மா எத்தனை நாளைக்கு இதை வச்சி பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கீங்க?
சவால் விட்ட பாக்கியா
நீங்க சொன்னதெல்லாம் கேட்டுகிட்டு இருக்க நான் பழைய பாக்கியா இல்லை. உங்களுக்காக இந்த மிரட்டலுக்கு பயந்து என்னுடைய வாழ்க்கையை நான் தியாகம் பண்ணி இருக்கிறேன். ஆனால் என்னுடைய பிள்ளைகள் வாழ்க்கையை நான் கெடுக்க முடியாது. அவங்க வந்தாங்கன்னா அவங்களை கண்டிப்பா நான் வீட்டை விட்டு வெளியே போக சொல்ல போறேன். இதுதான் கண்டிப்பா நடக்கும் என்று சொல்ல அது எப்படி நடக்குதுன்னு நானும் பாத்துகிறேன் என்று ஈஸ்வரி சவால் விடுகிறார்.
அமிர்தா ஆறுதல்
கோபி இந்த நிச்சயம் கண்டிப்பாக நடக்கும் என்று சொல்ல, பாக்கியா நடக்காது என்று சொல்கிறார். மறுபக்கத்தில் இனியா கிச்சனில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க, அமிர்தா அங்கு வருகிறார். அமிர்தா இனியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். அதற்கு இனியா, அம்மா எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று நினைக்கும் போது எனக்கு வருத்தமா இருக்கு. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?
இனியா கொடுத்த கம்ப்ளைன்ட்
உங்க போன் மட்டும் தரீங்களா ஒரு பிரண்டுக்கு பேசணும் என்று சொன்னதும் ஆகாஷுக்கா என்று அமிர்தா கேட்க, இல்லை என்னுடைய பிரண்டுக்கு தான் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி அங்கு வந்து நீ போய் ரெடியா இரு என்று அனுப்புகிறார். பிறகு இனியா ரூமில் தனியாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு ஒரு மொபைல் சார்ஜர் போட்டு இருப்பதை பார்த்து அதை எடுத்து போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து எனக்கு விருப்பம் இல்லாமல் எனக்கு நிச்சயதார்த்தம் செய்யறாங்க என்று வீட்டு அட்ரஸ் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறார்.

இனியா செய்த செயல்
பிறகு இனியா புடவை கட்டிக்கொண்டு ரெடியாகி வர அதை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி ஆகின்றனர். பாக்யா நான் இந்த நிச்சயதார்த்தத்தை எப்படியும் நடத்த விட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, எழிலும் நானும் அப்பாவோடும் பாட்டி இடமும் பேசுறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு இனியா நீங்க யாரும் எனக்காக பேச வேண்டாம் நான் இதற்கு மனப்பூர்வமாகத்தான் கிளம்பி இருக்கிறேன்.
மாப்பிள்ளை வந்தாச்சு
இந்த விஷயத்தில் என்ன பண்ணனும் என்பதை நானே முடிவெடுத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி கீழே வருகிறார். அந்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் வருகிறார்கள். அவர்களிடம் கோபி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கல்யாணத்தை இப்பவே வைக்க வேண்டாம் மூணு வருஷம் போகட்டும் என்று கோபி சொல்ல, அதான் நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்களே என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

போலீஸ் என்ட்ரி
அப்போது ஈஸ்வரி என் பேத்திக்கு படிப்பு ரொம்ப இஷ்டம். அவள் எப்படியாவது படிச்சு டிகிரி வாங்கணும் என்று சொல்லுறா.. அதனால அது முடியட்டும் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு தட்டு மாத்திக்கலாம் என்று ரெடியாகும் போது, போலீஸ் வந்து நிச்சயத்தை நிறுத்துகிறார்கள். நீங்க இந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை நடத்தி வைக்கிறீங்க என்று சொல்லிக் கொண்டு இருக்க, அதற்கு ஈஸ்வரி பாக்கியா தான் போன் பண்ணி வர சொல்லி இருப்பா என்று பாக்கியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications