பாக்கியலட்சுமி: சுதாகரிடம் கோபி கேட்ட கேள்வி.. பாக்கியாவிற்கு செருப்படி பதில் கொடுத்த செல்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 21ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியாவிடம் செல்வி தன்னுடைய மகன் வாழ்க்கைக்கு சரியான கேள்விகளை கேட்டிருக்கிறார். அதே நேரத்தில் கோபி இடம் சுதாகர் ரெஸ்டாரண்ட் பற்றி முக்கிய விஷயத்தை சொல்கிறார். இதனால் கோபிக்கு சந்தேகம் வருகிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபியும் செழியனும் சுதாகரை சந்தித்து பாக்யா சொன்ன ரெஸ்டாரண்ட் விஷயத்தை பற்றி கேட்கிறார்கள். அதற்கு சுதாகர் அவர்கள் இருவரையும் ஏமாற்றி பேசுகிறார். ஆனால் இதை புரிந்து கொள்ளாத கோபியும் செழியனும் சுதாகர் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கோபிக்கு சின்ன சந்தேகம் இருக்கிறது.

Baakiyalakshmi Serial vijay TV

நடிக்கும் சுதாகர்

இதை பார்த்ததும் சுதாகர் சம்மந்தி அம்மா நான் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லி இருந்தேன் ஆனா என்னுடைய லிகல் டீம்ல விசாரிச்ச போது அவங்க பெயர் மட்டும் மாற்றினால் போதாதுனு சொல்லிட்டாங்க. அதனாலதான் வேற வழி இல்லாம இனியா பெயருக்கு மாற்றிவிட்டேன். அது போல டைமும் இல்ல அதனால தான் உங்ககிட்ட கூட சொல்லல நீங்க என்ன புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்.

குழப்பத்தில் கோபி

உங்க குடும்பத்துக்கு மேல எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு, மரியாதை இருக்கிறது என்று அளந்து விட அதையெல்லாம் நம்பும் செழியன் ஓகே சார் என்று தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். ஆனால் கோபி எனக்கு இவர் பேசுறது சரியா இல்லையா என்று குழப்பமாக இருக்கு என்று புலம்பி கொண்டிருக்கிறார். பிறகு வீட்டிற்கு வந்த கோபி பாக்கியாவிடம் முதலில் ரெஸ்டாரண்ட்டை அவங்களோட ரெஸ்டாரண்ட் கூட தான் ஆட் பண்ண தான் இருந்தாங்களாம் ஆனா அங்க ரூல்ஸ் சரியில்லாததால் தான் இனியா பேருக்கு மாத்திருக்காங்க என்று சுதாகர் சொன்னதை அப்படியே ஒப்பிக்கிறார்.

செழியன் சொன்ன வார்த்தை

அதற்கு பாக்கியா கோபப்பட்டு நீங்க இன்னும் அவர் சொல்றதெல்லாம் நம்பிகிட்டே இருங்க‌ நான் ஒன்னும் முட்டாள் கிடையாது என்னோட ரெஸ்டாரண்ட் கைவிட்டு போனது எனக்கு தெரியும். நானே கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன் என்று என்னை நான் ஆறுதல் படுத்திக்க தான் பாக்குறேன். எனக்காக நீங்க முட்டாளா பேச வேண்டாம் என்று திட்டி விடுகிறார். ஆனால் ஈஸ்வரி இப்போதும் பாக்கியா மீதுதான் தப்பு அந்த சுதாகர் நல்லவர் என்று சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

செல்வி கேட்ட கேள்வி

அதனால் கோபமான பாக்கியா அங்கிருந்து ரெஸ்டாரண்டுக்கு கிளம்பி வர, செல்வி பாக்யாவிடம் முகம் கொடுத்தே பேசாமல் அங்கே இங்கே போய்க் கொண்டிருக்கிறார். அப்போது செல்வியிடம் சென்று நீ ஏன் கல்யாணத்துக்கு வரல செல்வி என்று பாக்கியா கேட்க, அதற்கு செல்வி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். நான் எப்படிக்கா அந்த கல்யாண மண்டபத்துக்கு வர முடியும்? வந்தா உன் வீட்டுக்காரங்க எல்லாரும் நான் கல்யாணத்தை நிறுத்த வந்துட்டேன் என்கிற மாதிரி என்ன அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்புவாங்க, அது எனக்கு தேவையில்லை.

அசிங்கப்பட்ட பாக்யா

அதனாலதான் நான் வரல என்று சொல்ல, அதற்கு பாக்கியா இன்னைக்கு தான் நம்ம குடும்பத்துக்குள் பிரச்சனை ஆனால் நீ அப்போ இருந்தே நம்ம குடும்பத்தில் ஒரு ஆளாதான இருந்த என்று கேட்க, அதற்கு செல்வி நான் என்னைக்கு உங்க குடும்பத்துல ஒரு ஆளா இருந்தேன்? நான் வேலை பார்த்தேன் அதற்கு நீங்கள் சம்பளம் தந்தீங்க அவ்வளவுதான் என்று சொல்ல, அதற்கு பாக்கியா நீ எனக்காக வந்திருக்கணும் செல்வி என்று சொல்ல, அதற்கு நான் யாருக்காகவும் மீண்டும் மீண்டும் அசிங்கப்பட விரும்பல எல்லோரும் அவங்க குடும்பம் அவங்களோட நிம்மதியை தான பாக்குறாங்க.

பாக்கியா கேட்ட கேள்வி

நீயும் உன்னுடைய பொண்ணு நல்லா இருக்கணும்னு யோசிக்கும்போது நானும் என் பையன் நல்லா இருக்கணும்னு யோசிக்கிறது தப்பு இல்ல. என் பையன் இப்போ ஒரு இடத்தில் விழுந்துட்டான். ஆனா இனி எந்திரிச்சு அவன் தைரியமா நடப்பான். இனியா பாப்பா நல்லா இருக்கணும் என்பது என்னோட ஆசை அவ்வளவுதான். ஆனால் அதுக்காக என்னால் மீண்டும் மீண்டும் அசிங்கப்பட முடியாது எங்களுடைய வாழ்க்கை இப்படியே இருந்து விடாது.

செல்வியின் சரியான பதிலடி

இனியா பாப்பா கல்யாணம் பண்ணிட்டு அதோட வாழ்க்கையை பார்த்தது போல என்னுடைய பையனும் அவனுடைய கனவை நோக்கி ஓடுவான் என்று பதிலடி கொடுக்கிறார். அதற்கு பாக்கியா சென்டிமெண்டாக பேசுகிறார். வீட்டில் எல்லா பொறுப்பு என்கிட்ட வந்த மாதிரி என்னுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் முடிவெடுக்கிற பொறுப்பு என்கிட்ட வந்துடுச்சுனு நெனச்சேன் ஆனா அப்படி நடக்கவே இல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எழில் கொடுத்த ஐடியா

பிறகு ரெஸ்டாரண்ட் விஷயத்தை பற்றி செல்வி கேள்வி கேட்க அதற்கு பாக்கியா நான் ஏமாந்து போகல இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சி தான் கையெழுத்து போட்டு கொடுத்தேன் என்று பேசிக் கொண்டிருக்கும் போது எழில் அங்கு வருகிறார். வீட்டுக்கு வாமா போகலாம் என்று கூப்பிடுகிறார். பாக்யாவும் சரி என்று கிளம்புகிறார். அப்போது சுதாகர் மீது கேஸ் போடலாம் என்று எழில் சொல்கிறார். அதற்கு பாக்கியா நாம நம்முடைய பொண்ணை அந்த வீட்டில் கட்டி கொடுத்துட்டு பின்னாடி கேஸ் போட்டா சரியா இருக்காது என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+