பாக்கியலட்சுமி: இனியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த சுதாகர்.. அடிதடியில் செழியன்..பாக்யாவிற்கு புது பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 21ஆம் தேதிக்கான எபிசோடில், பாக்கியாவிற்காக செழியன் கவுன்சிலரை அடித்திருக்கிறார். அதே நேரத்தில் இனியாவிற்கு சுதாகர் தன்னுடைய சுய ரூபத்தை காட்டுகிறார். இந்த நிலையில் பாக்கியாவிற்கு மீண்டும் பிரச்சனை வருகிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியா பாக்யாவின் ரெஸ்டாரண்டை தான் இனி கவனிக்க போவதாக சொல்ல, அதற்கு சுதாகர் நீ வீட்டில் மட்டும் இருந்தால் போதும் எங்க வீட்டில் பொண்ணுங்க யாரும் வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லிவிடுகிறார். அதுபோல சுதாகரின் மனைவியும் உனக்கு நேரம் போகவில்லை என்றால் உன் பிரண்ட்ஸை வர வைத்து அவங்களோடு பேசிட்டு இரு. அதை விட்டுட்டு பிசினஸ் பக்கம் இந்த வீட்டில் யாரும் போகக்கூடாது என்று சொல்ல, அதற்கு இனியா மறுப்பு தெரிவிக்கும் போது நித்திஷ் இனியாவை அதட்டி பேச இனியா அதிர்ச்சியில் இருக்கிறார்.

அடித்த செழியன்
மறுபக்கத்தில் பாக்யா ரெஸ்டாரண்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது செழியன் ரெஸ்டாரெண்ட்டுக்கு வருகிறார். செழியனை பார்த்ததும் பாக்கியா அவரை உட்கார வைத்துவிட்டு காபி போட்டு கொடுக்கிறார். பிறகு அங்கு பாக்யாவிடம் பிரச்சனை செய்யும் கவுன்சிலர் வருகிறார். அவர் தனக்கு சாப்பாடு வேண்டும் என்றதும் பாக்கியா எடுப்பதற்காக உள்ளே சென்று இருக்கிறார். அந்த நேரத்தில் பாக்யாவை பற்றி அதை கவுன்சிலர் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்.
கவுன்சிலர் சபதம்
இந்த ஆண்ட்டிக்காக தான் இந்த ஹோட்டலுக்கு வரேன், இவங்களுக்கு புருஷன் இல்லையாம், இப்போது தனியா பிரிஞ்சு தான் இருக்காங்க அதனால கரெக்ட் பண்ணனும் என்றெல்லாம் பேச அதனால் கோபமான செழியன் அந்த கவுன்சிலரை போட்டு அடிக்கிறார். கடைசியில் அந்த கவுன்சிலர் என் மேல கை வச்சுட்டல நான் யாருன்னு காட்டுறேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து போகிறார்.
கோபத்தில் செழியன்
மறுபக்கத்தில் செழியனுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்யா வந்து என்னாச்சுடா எதுக்காக நீ அந்த கவுன்சிலரை அடிச்ச என்று கேட்க, பாக்கியாவிடம் செழியன் கோபப்படுகிறார். உன்னால தான் இவ்வளவு நடந்தது. அந்த கவுன்சிலர் என்னெல்லாம் பேசினார் தெரியுமா? உன்னை ஆண்டின்னு சொல்லுறார், அசிங்க அசிங்கமா பேசிட்டு இருக்கிறான் என்று சொன்னதும் எழில் கோபப்பட்டு கவுன்சிலரை அடிக்க கிளம்புகிறார்.
கோபி கேட்ட கேள்வி
அப்போது கோபி நிறுத்தி ஏற்கனவே அந்த கவுன்சிலர் என்ன பண்றான்னு தெரியல அதனால நீ அமைதியா இரு என்று தடுத்து நிறுத்துகிறார். பிறகு பாக்யாவிடம் நம்ம இடத்தை விட்டு இறங்கி போனால் என்ன நிலைமை ஆகும்னு உனக்கு இப்ப புரியுதா பாக்கியா என்று கேட்கிறார். பாக்கியா எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கும் போது வழக்கம் போல ஈஸ்வரி எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான் எங்களை நிம்மதியாக இருக்கவே விடமாட்டியா என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
பாக்யாவுக்கு மீண்டும் பிரச்சனை
அடுத்ததாக அடுத்த நாள் காலையில் பாக்யா ரெஸ்டாரண்டை திறப்பதற்காக போயிருக்கும் போது ரெஸ்டாரண்டில் ஓனர் வந்து நேற்று தான் கவுன்சிலருடன் பிரச்சனை ஆகியிருக்கு இந்த நேரத்தில் நீங்கள் மீண்டும் கடையை உடனே திறந்தா சரிப்பட்டு வராது. அதனால் ரெண்டு மூணு நாள் கழிச்சு கடையை திறங்க என்று சொல்லிவிட்டு போகிறார். அப்போது செல்வியும் இவர் சொல்றது தான் சரி இப்போதைக்கு கடையை திறக்க வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் பாக்கியா பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications