பாக்கியலட்சுமியில் இன்று: பாக்யாவை ரெஸ்டாரண்டை விட்டு துரத்திய சுதாகர்.. வீட்டிற்கு வந்து இனியா சொன்ன செய்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதிக்கான எபிசோட் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் இருந்து மொத்த ஆட்களையும் சுதாகர் விரட்டி விடுகிறார். அதே நேரத்தில் பாக்யா வீட்டிற்கு வந்து மகிழ்ச்சி செய்தி சொல்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி, செழியன், ஜெனி மூன்று பேரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியா வெளிநாட்டிற்கு ஹனிமூன் போவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் வீட்டிற்கு எழில் மற்றும் பாக்கியா இருவரும் வருகின்றனர். அப்போது எழில் அந்த ரெஸ்டாரண்ட் உன்னுடையதுமா அதை லீகலா நாம என்ன பண்ணனுமோ அதை பண்ணலாம் என்று சொல்கிறார்.

கோபத்தில் பாக்கியா
ஆனால் பாக்கியா எதுவுமே பேசாமல் வீட்டிற்குள் வரும்போது ஈஸ்வரி பாக்கியாவை பார்த்து வம்பு இழுப்பது போல பேசுகிறார். நாமெல்லாம் பக்கத்துல இருக்க பாரிஸ்க்கே போனதில்ல. ஆனா இனியா இப்போ வெளிநாட்டுக்கு பாரிஸ்க்கு போக போறா, எல்லா இடத்தையும் சுற்றி பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது பாக்கியா அமைதியாகவே இருக்க, வீட்டிலிருந்து அவ்வளவு ஆக்ரோஷமா கிளம்பி போன இப்ப எங்க போயிட்டு வர என்று கேட்க பாக்யா அப்போதும் எதுவும் சொல்லாமல் இருக்கும்போது எழிலிடம் இவளை எங்கிருந்து கூட்டிட்டு வர என்று கேட்க, ரெஸ்டாரண்டில் இருந்து வரோம் என்று எழில் சொல்கிறார்.
ஈஸ்வரியின் கேள்வி
அதற்கு ஈஸ்வரி ரெஸ்டாரன்ட்டை என்கிட்ட இருந்து பிடுங்கிட்டாங்கன்னு அவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுன இப்போ அதே ரெஸ்டாரண்டுக்கு தான போயிட்டுவர? எப்படி இருந்தாலும் அந்த மேனேஜ்மென்ட் நீதான கவனிக்க போற எதுக்காக இவ்வளவு எல்லாம் பேசின என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்க, என்னுடைய ரெஸ்டாரன்ட் விஷயத்தை பற்றி நான் யாரிடமும் பேசப்போவதில்லை என்று பாக்கியா சொல்கிறார்.
பிரச்சனை செய்த ஈஸ்வரி
பிறகு ஜெனி பாக்யாவிடம் இனியா வெளிநாட்டுக்கு ஹனிமூன் போவது பற்றி சொல்கிறார் அதற்கு பாக்யா அப்படியா சரி சந்தோஷம் போயிட்டு வரட்டும் என்று சொல்லிவிட்டு கிளம்ப, அதை பார்த்து ஈஸ்வரி பாக்கியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது எழில் அப்பா பிசினஸில் உடைந்து போய் இருந்தபோது நீங்க அவருக்கு சப்போர்ட் பண்ணுனீங்க.
எழில் சப்போர்ட்
அவருடைய தப்பால தான் அவருடைய பிசினஸ் லாஸ் ஆச்சு? ஆனால் இப்போ அம்மா நிலைமை அப்படி கிடையாது, அவரோட அனுமதி இல்லாமலே அவருடைய பிசினஸை மாற்றி இருக்கிறார்கள். ஆனால் இப்போ நீங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணாம இப்படி பேசிட்டு இருக்கீங்க என்று திட்ட, அதற்கு வழக்கம் போல ஈஸ்வரி ஏழிலை திட்டுகிறார். பிறகு அடுத்த நாள் காலையில் பாக்கியா வீட்டிற்கு இனியாவும் அவருடைய கணவர் நித்திஷும் வருகிறார்கள்.
இனியாவுக்கு சந்தேகம்
அவர்கள் இருவரும் ஹனிமூன் போவது பற்றி சொன்னதும் பாக்யா சரி போயிட்டு வாங்க என்று சொல்கிறார்கள். இனியாவிடம் நீ சந்தோஷமாக இருக்கியா? உன்னை அங்க எல்லாரும் கவனிக்கிறாங்களா? என்று கேட்க, அதற்கு இனியா எப்போ பார்த்தாலும் இதையேதான் கேட்டுட்டு இருக்க எதும் பிரச்சனையா என்று கேட்க, ஒன்றும் இல்லை என்று பாக்கியா சமாளித்து விடுகிறார்.
வீட்டுக்கு வந்த இனியா
பிறகு இனியா கிளம்பியதும் பாக்கியா அங்கிருந்து ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அங்கு சுதாகர் ஏற்கனவே வந்து அமர்ந்திருக்கிறார். பாக்யாவை பார்த்ததும் இன்று மதியத்தோடு ரெஸ்டாரன்ட் க்ளோஸ் பண்ணிடலாம் இங்கு நிறைய வேலை நடக்க வேண்டியது இருக்கு, இனி என்னுடைய கம்பெனியின் ஆட்கள் இங்கே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாங்க என்று சொன்னதும் பாக்யா அதிர்ச்சியில் இருக்கிறார்.
பாக்கியாவுக்கு அதிர்ச்சி
நீங்க கம்பெனியின் பெயர் மட்டும் தானே மாறும் என்று சொன்னீர்கள் என்று கேட்க, இல்லை நிர்வாகத்தையும் மாற்ற வேண்டும் என்று சொல்லிட்டாங்க. அதில் சில சிக்கல் இருக்கு அதனால் நீங்க வேணும்னா இங்க மேனேஜரா வேலைக்கு சேர்ந்துக்கோங்க உங்களுக்கு சம்பளம் தரேன். நீங்க நான் ரெஸ்டாரன்ட் கேட்டு வந்திருந்த போது தந்திருந்தா உங்களுக்கு இவ்வளவு பெரிய நஷ்டம் வந்திருக்காது. இப்போ உங்களுக்கு பணமும் இல்ல ரெஸ்டாரெண்டும் இல்ல என்று சுதாகர் திமிராக பேச நான் இப்போ நினைச்சாலும் நீங்க பணம் தந்து தான் ஆகணும் எனக்கு பணம் வேணும்னு நான் கேட்பதற்கு உரிமை இருக்கு என்று பாக்கியா சொல்கிறார்.
மிரட்டல்
பணம் வேணும்னு நீங்க என்கிட்ட கேட்க முடியாது உங்க பொண்ணு கிட்ட தான் கேக்கணும். உங்க பொண்ணு கிட்ட பணத்தை கேட்கிற அளவுக்கு நீங்க தரம் தாழ்ந்தவர்கள் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று சுதாகர் பேசியதும் பாக்கியா அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications