பாக்கியலட்சுமி: சுதாகருக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியா.. செல்வி கேட்ட கேள்வி, அதிர்ச்சியில் ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி 2025 ஏப்ரல் 23ஆம் தேதிக்கான எபிசோட் சுதாகர் பாக்யாவை ரெஸ்டாரண்டை விட்டு விரட்ட அதற்கு பாக்கியா சுதாகருக்கு சரியான பதிலடி கொடுக்கிறார் அதே நேரத்தில் குடும்பத்தினர் எல்லோரும் பாக்யா செய்த செயலை பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத திருப்பம் வந்திருக்கிறது. அதாவது நேற்றைய எபிசோடில் ரெஸ்டாரண்டுக்கு வந்த சுதாகர் இன்று மதியத்தோடு ரெஸ்டாரண்டை மூடிவிடுங்கள் நாங்கள் ரெஸ்டாரண்ட் பெயரை மாற்ற வேண்டும் இனி என்னுடைய செஃப் உட்பட என் ரெஸ்டாரன்ட் ஊழியர்கள் தான் இங்கே வேலை பார்ப்பார்கள் என்று சொல்லி இருந்தார். இதனால் பாக்கியா கோபத்தில் இருந்தார்.

சுதாகர் திமிர் பேச்சு
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா நீங்க இங்கே புது ஆட்களை கொண்டு வந்துட்டீங்கன்னா இங்கு உள்ளவங்க நிலைமை என்ன ஆகும்? இங்க இருக்கிறவங்களுக்கு வேலை இல்லாமல் போயிடுமே என்று கேட்கிறார். அதற்கு சுதாகர் அதை பற்றி எனக்கு கவலை கிடையாது நான் ரெஸ்டாரண்டை கேட்டபோது நீங்க தந்து இருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது என்று சொன்னதும், பாக்யா இப்போதும் என்னால் உங்களிடம் பணம் கேட்க முடியும் என்று சொல்ல அதற்கு சுதாகர் நீங்க இப்போ பணம் கேட்கிறதா இருந்தா உங்க பொண்ணு கிட்ட தான் கேட்கணும்.
அசிங்கப்பட்ட சுதாகர்
உங்க பொண்ணு பேருக்கு தானே ரெஸ்டாரண்டும் மாறி இருக்கிறது. பொண்ணுக்கிட்ட பணம் கேட்கிற அளவுக்கு நீங்க தரம் தாழ்ந்து இருக்க மாட்டீங்க என்று நினைக்கிறேன் என்று பேச, அதற்கு பாக்கியா தரம் தாழ்ந்தவா நான் கிடையாது, ஆனால் நீங்கள் தான் தரம் தாழ்ந்து போயிட்டீங்க. ஒரு ரெஸ்டாரண்டுக்காக சொந்த பையனுக்கே கல்யாணத்தை முடிச்சு வச்சிருக்கீங்க. நீங்க இவ்வளவு கேவலமா யோசிப்பீங்கன்னு நான் ஏற்கனவே யோசித்தது தான்.
பாக்கியா பதிலடி
நீங்க பல ரெஸ்டாரண்ட் வச்சிருக்கீங்கன்னு சொன்னிங்களே அப்போ அது எல்லாம் இப்படித்தான் எல்லாரையும் ஏமாற்றி வாங்கினீங்களா என்று பதிலடி கொடுக்கிறார். இதனால் கோபமான சுதாகர் நான் சம்பந்தி என்று நினைத்துதான் தான் உங்ககிட்ட மரியாதையா பேசிட்டு இருந்தேன் ஆனால் இனி அப்படி பேச மாட்டேன். இப்பவே உங்க ஆள்களை கூட்டிட்டு இந்த ரெஸ்டாரண்டை விட்டு வெளியே போங்க.
பாக்யாவை விரட்டிய சுதாகர்
இனி இந்த ரெஸ்டாரன்ட் எனக்கு. உங்களுக்கும் இந்த ரெஸ்டாரண்டுக்கு இனி எந்த சம்பந்தமும் கிடையாது என்று திமிராக பேசியதும் பாக்கியா இப்ப கூட நான் போவேன் ஆனா இதுக்கு எல்லாம் நீங்க ஒரு நாள் கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும். என்னைக்குமே அடுத்தவங்களை ஏமாற்றினவங்க நல்லா இருக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
சுதாகர் சொன்ன வார்த்தை
இதனால் சுதாகர் தன்னுடைய ஆட்களிடம் சொல்லி இவங்க எல்லாரையும் வெளியே அனுப்பிடுங்க. சம்மந்தினு கூட யாருக்கும் பாவம் பார்க்க வேண்டாம் எல்லாரிடமும் கடுமையாக நடந்துக்கோங்க என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பியதும், பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் இந்த ரெஸ்டாரண்ட் வேலை இல்லன்னா எங்களுடைய நிலைமை அவ்வளவுதான், பிள்ளைகளின் படிப்பு செலவுக்காகத்தான் நாங்கள் வேலைக்கு வந்தோம் என்று எல்லாரும் அவங்கவங்க கஷ்டத்தை சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

வேலை ஆட்களின் வருத்தம்
பாக்கியா எல்லாரையும் தன்னுடைய பழைய ரெஸ்டாரண்டுக்கு வர சொல்லிவிட்டு ரெஸ்டாரண்டை விட்டு கிளம்புகிறார். உடனே சுதாகர் ஆட்கள் பூட்டு போட்டு பூட்டி விடுகிறார்கள். பிறகு பாக்யாவும் செல்வியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்கியாவிடம் செல்வி இந்த உலகத்தில் நம்மை எல்லாம் முன்னேறவே விட மாட்டாங்களா? பணக்காரங்க தான் எப்போதும் மேல மேல பணக்காரங்களா இருப்பாங்களா?
பாக்யாவின் தன்னம்பிக்கை
இந்த உலகத்தில் நம்மளால வாழவே முடியாதா என்று கேட்க, அதற்கு பாக்கியா என்னதான் இவங்க எத்தனை சூழ்ச்சிகளும் தடைகளும் போட்டாலும் நாம அதையெல்லாம் தாண்டி வரனும். ஏற்கனவே வாழ்க்கையில் பல பிரச்சனைகளை பார்த்தாச்சு. இப்போ இந்த சூழ்நிலையில் இருந்து நம்ம வந்துரலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் வீட்டிற்கு கிளம்புகிறார்கள்.

அதிர்ச்சி கொடுத்த பாக்யா
வீட்டில் ஈஸ்வரி போனில் பேசிக் கொண்டிருக்கிறார். பாக்யாவை பார்த்ததும் இனியாவிற்க்கு போன் பண்ணுனியா? குரூப்பில் எத்தனை போட்டோ போட்டு இருக்கா நீ எதுக்குமே ரெஸ்பான்ஸ் பண்ணல என்று கேட்டுக் கொண்டே இருக்க பாக்கியா அதற்கு எந்த பதில் சொல்லாமல் இட்லி வைத்து சட்னி வைத்து சாப்பிட வந்து உட்காருகிறார். செழியன், ஜெனி, எழில் என்று எல்லோரும் எதுக்காக இப்படி இருக்க என்று கேட்டுக் கொண்டே இருக்க எதுவும் சொல்லாமல் எனக்கு பசிக்குது சாப்பிடணும் என்று சொல்கிறார். பிறகு சாப்பிட்டு விட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் தன்னுடைய ரூமுக்கு போகிறார். இதனால் குடும்பத்தினர் குழப்பத்தில் இருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications