பாக்கியலட்சுமி: ஈஸ்வரிக்கு செருப்படி கொடுத்த பாக்யா.. கோபி சொன்ன சரியான விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வார எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. பாக்கியாவும் கோபியும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று ஈஸ்வரி சொன்ன வார்த்தையை கேட்டு பாக்கியா எதிர்பார்க்காத பதிலை சொல்லி இருக்கிறார்.
பாக்யலட்சுமி சீரியலில் சில வாரங்களாகவே கதையில் சுவாரசியமாகவும் அதிரடியான பல திருப்பங்களும் வந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் இந்த சீரியலில் வந்த கதையே ரிப்பீட் மோடில் வந்து கொண்டு இருந்தது. இதனால் அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் உருவாகி இருந்தது. இதனால் திடீரென்று இந்த சீரியலில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அதில் செழியன் ஜெனிக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. எழில் படவேலை முடிவடைந்து இருக்கிறது. இதுபோல பாக்யாவும் இரண்டாவது ரெஸ்டாரண்ட் திறந்திருக்கிறார். ராதிகாவுக்கும் கோபிக்கும் டைவர்ஸ் ஆகிவிட்டது. இப்படி பல மாற்றங்கள் நடந்திருந்தாலும் ஈஸ்வரி மட்டும் பாக்கியாவிற்கும் கோபிக்கும் மீண்டும் கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என்று வழக்கம்போல சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
இப்போது அதற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார். நேற்றைய எபிசோடில் கோபியிடம் பாக்யாவை மீண்டும் கல்யாணம் செய்து வாழ சம்மதமா என்று கேட்க, கோபி எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். அதனால் நீ பாக்யாவுடன் வாழ்வதற்கு சம்மதம் சொல்லிட்ட என்று ஈஸ்வரியே சொல்லி இருந்தார். அதுபோல எழில் மற்றும் செழியனிடமும் இது பற்றி பேசியிருந்தார்.

அதற்கு செழியன் அம்மா அப்பா இருவரும் சம்மதம் சொன்னால் எனக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லி இருந்தார். ஆனால் அம்மாவுக்கு ஒரு வாழ்க்கை துணை தேவை என்றால் நான் அவங்க சொல்லுறவரை கல்யாணம் பண்ணி வைப்பேன். ஆனால் இவரோடு மீண்டும் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் பாக்கியாவின் பிறந்த நாளை உறவினர்கள் முன்பு குடும்பத்தினர் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அப்போது பாக்கியா பற்றி ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கையில் உங்க எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப் போறேன் இனி பாக்யாவும் கோபியும் ஒன்றாக வாழப் போகிறார்கள் என்று சொன்னதும் இதை சற்றும் எதிர்பார்க்காத பாக்கியா நீங்க என்னதான் சொன்னாலும் உங்க முடிவுக்கு நான் கட்டுப்பட மாட்டேன்.

உங்க பையனோட என்னால மீண்டும் வாழ முடியாது. பிரிந்தது பிரிந்தது தான் என்று சொல்ல ஈஸ்வரி அங்கிருந்து கோபமாக எழுந்து போகிறார். பிறகு வீட்டிற்கு வந்ததும் கோபி பாக்யாவிடம் உன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் எல்லாரும் முன்பும் அம்மா பேசுனது தப்புதான். நான் அவங்களுக்காக உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஈஸ்வரி கடும் கோபத்தில் இருக்கிறார். ஆனால் பாக்கியா கோபி சொன்னதுக்கு சமாதானம் ஆகாமல் இருக்கிறார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications