பாக்கியலட்சுமி: ஈஸ்வரியை வீட்டை விட்டு போக சொன்ன பாக்யா.. கோபி எடுத்த முடிவு.. இனியாவின் மனமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 28ஆம் தேதிக்கான எபிசோடில் கோபிக்காக சப்போர்ட் செய்து பேசிய ஈஸ்வரியை பாக்யா வீட்டை விட்டு போக சொல்லி இருக்கிறார். அதுபோல பாக்கியாவின் பேச்சைக் கேட்டு கோபி முக்கிய முடிவு எடுத்து இருக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டுக்கு வந்த பாக்கியா ஈஸ்வரியை பார்த்து நீங்க சொன்னது சாதாரண விஷயமா? என்னுடைய வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட விஷயம் இதை நீங்க என்கிட்ட பேசாமலேயே எல்லோரும் முன்பு நீங்க சொல்லுவீங்களா என்று கோபப்படுகிறார். அதற்கு ஈஸ்வரி நீ அங்க அப்படி இத்துடன், அதே மாதிரி தான் இங்கேயும் கத்துற. கோபமும் வீம்பும் கண்ணை மறைக்குது உனக்கு நல்லது கெட்டது எதுவுமே தெரிய மாட்டேங்குது.

Baakiyalakshmi Serial vijay TV

சப்போர்ட் செய்த கோபி

நீ பணம் சம்பாதிக்க தொடங்கியதும் உனக்கு ஆணவம் வந்துடுச்சு. இப்போ உன் கையில் நாலு காசு பார்த்ததும் நீ திமிரா பேசுற. இதுக்கு முன்னாடி நீ இப்படி கிடையாது. இப்போ மொத்தமாக மாறிட்ட. நான் என்ன சொன்னாலும் அதற்கு திரும்ப பேசணும் என்று நீ நினைச்சுக்கிட்டே இருக்க என்று கோபப்பட, அப்போது கோபி வந்து ப்ளீஸ்மா அதான் பிடிக்கலைன்னு சொல்லிட்டாளே அதை விடுங்க அதோடு இனிமே சொல்லிட்டா பேசாதீங்க என்று சொல்கிறார்.

ஈஸ்வரி சண்டை

பிறகு பாக்கியா பிடிக்காத ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொன்னா நான் இப்படித்தான் பேசுவேன். நீங்க என்னதான் சொன்னாலும் எனக்கு உங்க பையன் கூட சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கோபமாக சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சியில் நிற்கிறார். அப்போது கோபி, அம்மா தேவையில்லாம என்னை வச்சு ஒரு சண்டை வேண்டாம் என்று சொல்ல, உடனே அப்ப கூட நீ பாக்கியா பக்கம் தான் பேசுவியா? நீயும் இப்போ மாறிட்ட என்று சொல்கிறார்.

பாக்யா எடுத்த முடிவு

அப்போது பாக்கியா கோபியிடம் நீங்க ஆரம்பத்தில் உடம்பு சரியில்லாமல் இருந்ததால் தான் இந்த வீட்டில் உங்களை தங்குவதற்கு அனுமதிச்சேன் இப்போ நிலைமை மாறிட்டு. நீங்க இனி தாராளமா இங்கிருந்து போகலாம். நீங்க இந்த வீட்டில் இருந்துட்டே இருக்கும்போது உங்க அம்மா இப்படித்தான் பேசிக்கிட்டே இருப்பாங்க என்று சொல்ல அதற்கு கோபி எனக்கு கொஞ்சம் டைம் கொடு எனக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் கொஞ்சம் இருக்கு. அதை முடிச்சிட்டு கிளம்புறேன் என்று சொல்ல அதற்கு பாக்யாவும் சரி என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

ஈஸ்வரி வாக்குவாதம்

அதற்கு ஈஸ்வரி நீ எப்படி கோபியை வீட்டை விட்டு போக சொல்லலாம் என்று சண்டை போடுகிறார். ஆனால் கண்டுகொள்ளாமல் பாக்கியா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு பாக்யாவும் செல்வியும் கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அங்கே வரும் செல்வி நீ கோபியை எப்படி வெளியே போக சொல்லலாம் என்று மீண்டும் வாக்குவாதம் செய்கிறார்.

பாக்யா பதிலடி

ஒரு கட்டத்தில் கோபமான பாக்கியா உங்க மகன் போவதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நீங்களும் தாராளமாக போகலாம் என்று சொல்லிவிடுகிறார். அதனால் மேலும் கோபமாக ஈஸ்வரி முதலில் என்னுடைய மகனை போக சொன்ன இப்போ என்னையும் போக சொல்லுற நீ இப்போ ரொம்ப மாறிட்ட என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

இனியாவின் மனமாற்றம்

பிறகு அவருக்கு போனதும் இனியா அங்கு வருகிறார். அப்போது இனியாவிடம் செல்வி பாக்கியா அக்கா இப்போ ரொம்ப மாறிட்டாங்க. உங்க அப்பாவை வீட்டை விட்டு மீண்டும் போக சொல்லி இருக்காங்க. இப்போ உங்க பாட்டியையும் போக சொல்லிட்டாங்க என்று சொல்ல, அம்மா சொன்னதில் எந்த தப்பும் இல்லை. ஒருத்தவங்களுக்கு பிடிக்காத விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லி கஷ்டப்படுத்திக் கொண்டு இருப்பதை விட அவங்களுக்கு இங்கு இருக்க பிடிக்கலன்னா தனியா போறது நல்லது தான் என்று இனியா சொல்கிறார்.

செழியனிடம் பேசிய கோபி

இதை எதிர்பார்க்காத செல்வி இனியா பாப்பா இதை நீங்களா? சொல்லுறீங்க? இப்ப கொஞ்ச நாளாவே நீங்க நான் என்ன சொன்னாலும் சரின்னு சொல்லுறீங்க... நான் பேசுவதையும் காது கொடுத்து கேட்குறீங்க என்று கேட்க அதற்கு இனியா முதலில் குழந்தையா இருந்தேன். இப்போ கொஞ்சம் மெச்சூரிட்டி வந்தது. அதனால் எது சரி தப்பு என்று எனக்கு புரிகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக கோபி செழியனை சந்தித்து பேசுகிறார். அப்போது செழியனை மீண்டும் பாக்கியா வீட்டிற்கு கோபி கூப்பிடுகிறார் முன்னாடி இந்த வீடு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு ஆனா இப்போ அந்த வீடு மகிழ்ச்சி இல்லாம ரொம்ப அமைதியா இருக்கு என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+