பாக்கியலட்சுமி: ஆகாஷால் இனியாவை சந்தேகப்படும் நிதிஷ்.. சுதாகரிடம் கோபி கேட்ட கேள்வி.. அதிர்ச்சி கொடுத்த பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா பாக்கியலட்சுமி ஹோட்டலில் வேலை செய்யும் ஆகாஷிடம் பேசுகிறார். இதை நிதிஷ் பார்த்து இனியாவை சந்தேகப்படுகிறார். அதே நேரத்தில் பாக்கியாவிற்காக கோபி சுதாகரிடம் கேள்வி கேட்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் சுதாகரை சந்தித்து கோபி பேசுகிறார். அப்போது பாக்யா ரெஸ்டாரண்ட்டை மூட சொல்லி இருக்கீங்க, அது முடியாது. ஏற்கனவே அவ ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த ரெஸ்டாரன்ட்டை ஓபன் பண்ணி இருக்கா. ஏற்கனவே அவளுடைய முதல் ரெஸ்டாரண்டையும் ஏமாற்றி வாங்கிட்டாங்க.. என்று கோபி சொன்னதும் சுதாகருடைய முகம் மாறுகிறது. ஆனால் சுதாகர் அதை பற்றி பேசாமல் உள்ளங்கை அளவு இருக்கிற அந்த ஹோட்டலில் எவ்வளவு பிரச்சனை? என்னுடைய சம்பந்தி இந்த சின்ன ரெஸ்டாரண்ட்டை நடத்துவது எனக்கு கௌரவ பிரச்சனையா இருக்கு என்று சொல்கிறார்.

கோபி சொன்ன வார்த்தை
அதற்கு கோபி உங்களுக்கு தெரியாது, பாக்கியா ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கா. இது அவளோட கஷ்ட காலம். இப்போ கொஞ்சம் கஷ்டப்படுறா.. ஆனா அதுல இருந்து எப்படியாவது மேல வந்துருவா என்று கோபி சப்போர்ட் பண்ணி பேச, உங்களுடைய முன்னாள் மனைவி மீது இன்னும் உங்களுக்கு மரியாதை இருக்கு போல, இவ்வளவு சப்போர்ட் பண்றீங்களே என்று சுதாகர் கேட்க அவளுடைய இந்த நிலைமைக்கு நானும் ஒரு விதத்தில் காரணம் என்று கோபி சொன்னதும் சுதாகர் நான் அவசரமா போகணும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
நிதிஷுக்கு சந்தேகம்
மறுபக்கத்தில் இனியா போர் அடிக்குது என்று ரெஸ்டாரண்டுக்கு போயிருக்கிறார். பாக்கியா ஏன் இங்க எல்லாம் வந்து கஷ்டப்படுற வீட்டுக்கு போ என்று சொல்ல, அதைக் கேட்ட இனியா, நிதிஷ் பக்கத்துல தான் இருக்காரு கொஞ்ச நேரத்தில் வந்துடுவார் பிறகு போறேன் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் ஆகாஷ் அங்கு வந்து நிற்க, இனியா ஆகாஷுடன் பேசிக் கொண்டிருக்கிறார். ஆகாஷ் படிப்பு, கோச்சிங் கிளாஸ் எப்படி போகிறது என்று விசாரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நிதிஷ் அங்கு வந்து நிற்கிறார்.
நிதிஷ் கேட்ட கேள்வி
ஆகாஷுடன் இனியா பேசுவதை பார்த்து நிதிஷ் கோபப்படுகிறார். பாக்கியா நிதிஷை டீ குடிக்க சொல்ல, இல்ல எனக்கு மீட்டிங் இருக்குது அவசரமா கிளம்பனும் என்று சொல்லிவிட்டு இனியாவை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார். இனியா மீது கோபம் இருந்தாலும் வீட்டிற்கு வந்ததும் இனியாவிடம் அதை காட்டிக் கொள்ளாமல் ஆன்ட்டி ஓட ரெஸ்டாரண்டுக்கு நிறைய ஆட்கள் வர்றாங்க என்று கேட்கிறார்கள். மேலும் நீ ரெஸ்டாரண்டுக்கு அம்மாவ பார்க்க போறதா தானே சொன்னே? என்று சந்தேகமாக கேட்க, இனியா நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் என்கிறார். பிறகு நிதிஷ் ரெஸ்டாரண்டில் நின்ற பையன் யாரு என்று கேட்கிறார். அதற்கு இனியா அது செல்வி ஆன்ட்டியோட பையன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications