பாக்கியலட்சுமி: நிதிஷ் சைக்கோ, டார்ச்சர் பண்றான்.. இனியா உடைத்த ரகசியம்! கோபி எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 6-ம் தேதிக்கான எபிசோடில் நிதிஷ் செய்யும் டார்ச்சர் பற்றி இனியா கோபியிடம் சொல்ல, இதற்கு கோபி முக்கிய முடிவு எடுக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்கும்போது இனியா அங்கு வருகிறார். என்ன இந்த வெயிலில் வந்து இருக்க என்று பாக்கியா கேட்டதற்கு, சும்மாதான் வந்திருக்கிறேன் என்று சோகமாக பேசுகிறார். இனியாவின் முகம் சோகமாக இருப்பதை பார்த்ததும் பாக்கியா வீட்டில் எதுவும் பிரச்சனையா? என்ன ஆச்சு என்று கேட்க, இனியா அழுது விடுகிறார். அதனால் பதறிப்போன பாக்கியம் என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். அதற்கு இனியா சமாளித்து விடுகிறார்.

பாக்கியா கேட்ட கேள்வி
அதற்கு பாக்கியா நான் இப்ப எல்லாம் குழந்தைங்க சந்தோஷத்தை பார்த்து தான் சந்தோஷப்படுறேன். எழில் சூட்டிங்காக வெளிநாட்டுக்கு போய் இருக்கிறான். செழியனும் நல்லபடியா இப்போ வேலைய பாத்துட்டு இருக்கேன். நீயும் சந்தோஷமா இருந்தாதான் எனக்கு சந்தோசம் என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்க, இனிய அதற்கு சரி என்று சொல்கிறார். அடுத்ததாக நான் உனக்கு புடிச்ச சாப்பாடு செஞ்சு வெச்சிருக்கேன் சாப்பிடு என்று சொல்ல, நான் சாப்பிட்டுவிட்டு தான் வந்தேன் என்று இனியா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கோபி செய்த செயல்
அதை தொடர்ந்து கோபி இனியாவை சுதாகர் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு விட்டு வீட்டில் இருப்பவர்களிடம் பேசுகிறேன் என்று சொல்ல, அதற்கு இனியா வேண்டாம் என்று சொல்கிறார். ஆனாலும் கோபி அது நல்லா இருக்காது நான் அவங்களிடம் பேசிட்டு போறேன் என்று சுதாகர் மற்றும் அவருடைய மனைவி மகனிடம் பேசிவிட்டு போகிறார். கோபியிடம் எல்லோரும் நல்லபடியாகவே பேசுகின்றனர்.
அதிர்ச்சியில் இனியா
பிறகு கோபி போனதும் இனியாவை நிற்க வைத்து எங்க போயிட்டு வர என்று நிதிஷ் கேட்க, எங்க அம்மாவை பார்க்க போயிட்டு வரேன் என்று சொன்னதும் உங்க அம்மாவை எங்க போய் பார்க்க போனே? என்று நிதிஷ் கேட்க, அம்மா இந்த நேரத்தில் ரெஸ்டாரண்டில் தான் இருப்பாங்க, அங்கதான் போனேன் என்று சொல்ல, உங்க அம்மாவை பார்க்க போனியா இல்ல அந்த ஆகாஷ பார்க்க போனியா? என்று கேட்டதும் இனியா அதிர்ச்சியில் நிற்கிறார்.
அசிங்கப்படுத்திய நிதிஷ்
உங்க குடும்பத்துக்கே வெட்கமா இல்லையா? மகள் அவளோட எக்ஸ் காதலனை பார்க்க போயிருக்க அப்பாகாரன் கூட்டிக்கொண்டு வந்து விட்டுட்டு போறான் நல்ல குடும்பம் என்று திட்டுகிறார். அடுத்த கட்டத்தில் இனியா ரூமில் சோகமாக உட்கார்ந்து இருக்கிறார். அப்போது அங்கு நிதிஷ் வந்ததும் நிதிஷிடம் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், என் பக்கம் நியாயத்தை நான் சொல்லிட்டேன். அதற்கு பிறகு இப்படி பேசுவது எனக்கு வருத்தமா இருக்கு! என்று இனியா சொல்ல, அதற்கு அவ்வளவுதானா? வேற ஒன்னும் இல்லயா என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
ஏமாற்றிய கோபி
இதனால் இனியா கோபிக்கு போன் செய்து அடுத்த நாள் காலையில் உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார். உடனே அடுத்த நாள் காலையில் கோபி பதறி அடித்து இனியா வீட்டிற்கு வருகிறார். இனியாவை தான் கூட்டிட்டு போவதாக சுதாகரிடம் சொன்னதும் சுதாகர் அதிர்ச்சி அடைகிறார். என்ன ஆச்சு இனியா எதுவும் சொன்னாளா? என்று கேட்க, இல்லை எங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்து இருக்காங்க இனியாவை பாத்துட்டு உடனே கிளம்பனும்னு சொல்றாங்க அதனாலதான் கூட்டிட்டு போறேன் என்று சமாளித்து விட்டு இனியாவை கூட்டிக்கொண்டு வெளியே வருகிறார்.
இனியா சொன்ன விஷயம்
பிறகு காரில் போகும்போது இனியா வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி சொல்கிறார். ஆகாஷை காதலித்த விஷயம் நிதிஷுக்கு தெரிந்திருக்கிறது. அந்த விஷயத்தை அவருடைய அம்மா அப்பாவிடம் சொல்லி இருக்கிறார். வீட்டில் யாரும் என்கிட்ட பேச மாட்டேங்கிறாங்க. என்ன ஒரு அடிமை மாதிரி வச்சிருக்காங்க என்று எல்லா விஷயத்தையும் சொன்னதும் கோபி இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லையே என்று புலம்பி கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications