பாக்கியலட்சுமி: இனியா காதல் பற்றி ஈஸ்வரி சொன்ன வார்த்தை.. பரிதாப நிலையில் பாக்யா.. மனம் மாறிய கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 7ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவின் காதலை கோபி கண்டுபிடித்து இருக்கிறார். இதனால் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கிறது. அப்போது பாக்யா என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில் இனியாவும் ஆகாஷும் காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சியாகுகிறார். ஆனால் எதுவும் சத்தம் போடாமல் கிளம்பி வா என்று சொல்ல, ஆகாஷ் அங்கிள் என்று சொல்ல வர எதுவும் பேசாத தொலைச்சிடுவேன் என்று மிரட்டி விட்டு இனியாவை அங்கிருந்து இழுத்து செல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

பொய் சொல்லும் இனியா

பிறகு காருக்குள் வைத்து இவன்கூட பேசுறதுக்கு தான் வீட்ல ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன் என்று இவ்வளவு பொய் ட்ராமா போட்டியா அதுக்கு தான் 8:00 மணிக்கு எல்லாம் வந்தியா என்று கேட்க, அதற்கு இல்ல டாடி ஃப்ரெண்ட் மட்டும்தான் என்று தெரிய சொல்ல பிரண்டுனா எதுக்கு திருட்டுத்தனமா ரெஸ்டாரண்டில் மீட் பண்ணனும்? என்று கேள்வி கேட்க, இனியா பதில் சொல்ல முடியாமல் பயத்தில் நடுங்குகிறார்

போனில் இருந்த ரகசியம்

அப்போது கோபி இனியாவின் போனை கேட்க, இனியா கொடுக்க மறுக்கிறார். என்ன டென்ஷன் பண்ணாத இனியா என்று கோபமாக பேசியதும் போனை கொடுக்கிறார். ஆனால் பாஸ்வேர்ட் மாற்றி இருக்கிறார் இதனால் கோபிக்கு மேலும் கோபம் வருகிறது. ஒழுங்கா பாஸ்வேர்ட் போட்டு தா என்று கேட்க பாஸ்வேர்டை போட்டுக் கொடுக்கிறார். அப்போது அதில் ஆகாஷ் உடன் அதிக நேரம் சேட் பண்ணி இருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

மாட்டிக்கொண்ட இனியா

பிரண்டுக்கு தான் இத்தனை ஐ லவ் யூ சொல்லி இருக்கியா? என்று கோபமாக கேட்கிறார். உங்க அம்மா சொன்னது கரெக்ட் தான் உனக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் தலைமேல் ஏறி உட்கார்ந்துருவனு சொன்னா அதே போல தான் நீ செஞ்சிருக்க. உனக்கு பேசுறதுக்கு பழகுறதுக்கு வேற ஒரு பையனே தெரியாதா? அதுவும் போய் அந்த செல்வி பையன் கூட பேசிட்டு இருக்க என்று சொல்ல, இனியா பேச வருகிறார் ஆனாலும் அதை தடுத்து வீட்டுக்கு வா என்று மிரட்டி வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருகிறார்.

பதறும் குடும்பம்

வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இனியா சொல்ல அதற்கு கோபி கோபமாக அவரை மிரட்டுகிறார். பிறகு இனியா போனை கையில் இருந்து பிடுங்கி வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு வருகிறார். அப்போது வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோபியை பார்த்ததும் இப்பதானே இனியாவை டிராப் பண்ண போன? என்ன ஆச்சு உடம்புக்கு எதுவும் முடியலையா? என்ன பிரச்சனை என்று பதறிப் போய் கேட்க கோபி செழியனிடம் தண்ணி கேட்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கோபத்தில் கோபி

பிறகு அமிர்தா எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க, தண்ணீர் குடித்துவிட்டு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் உட்கார்ந்து இருக்கிறார். அப்போ எல்லாரும் என்ன ஆச்சு இப்படி இருக்க என்று கேட்டுக் கொண்டே இருக்க இனியா எதுவும் பேசாமல் அழுது கொண்டிருக்கிறார். பாக்யா வந்துட்டாளா என்று கோபி கேட்க, ஈஸ்வரி அவ ரெஸ்டாரண்டில் தானே இருப்பா? இப்போ எப்படி இங்க வருவா என்று சொல்கிறார்.

அதிர்ச்சியில் பாக்கியா

அதற்கு நான் பாக்கியாவுக்கு போன் பண்ணி வர சொல்லி இருக்கிறேன் என்று கோபி சொல்கிறார். அந்த நேரத்தில் பாக்யாவும் வந்துவிடுகிறார். அப்போது பாக்யாவிடம் கோபி இனியா போனில் ஆகாஷ் உடன் சாட்டிங் பண்ணிய மெசேஜை காட்ட பாக்யா அதைப் பார்த்து அதிர்ச்சியில் நிற்கிறார். அப்போது குடும்பத்தினர் எல்லாரும் என்ன ஆச்சு என்று கேட்க கோபி இனியா ஒரு பையன லவ் பண்றா என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

ஈஸ்வரி கேட்ட கேள்வி

ஈஸ்வரி டென்ஷன் ஆகி இனியாவை திட்டுகிறார். உன்னால எந்த பிரச்சனையும் பண்ணாம இருக்க முடியாதா? உன்ன கஷ்டப்பட்டு இஷ்டப்பட்ட படிப்பு காலேஜ்ன்னு எல்லாம் பண்றா.. ஆனா உன்னால இதுவரைக்கும் ஒரு நல்லதாவது நடந்திருக்கா? பிரச்சனையை மட்டும் தான் எடுத்துட்டு வர என்று திட்டிக் கொண்டிருக்க அப்போ எழில் லவ் பண்றது என்ன தப்பா? அவ வயசுக்கு வரது தானே என்று சொல்கிறார்?

Top 10 Serial: சன் டிவி இடத்தை பிடித்த ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல்.. தலைகீழ் மாறிய டிஆர்பி
அப்போது கோபி இனியா காதலிப்பது யார் தெரியுமா? நம்ம வீட்டில் வேலை பார்க்கிற செல்வி உடைய பையன் என்று சொன்னதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+