பாக்கியலட்சுமி: ஆகாஷ் வீட்டுக்கு போன இனியா- கோபி! செல்வி சொன்ன வார்த்தை.. கண்கலங்கிய பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 8ம் தேதிக்கான எபிசோடில் செல்வியின் வீட்டிற்கு சென்று கோபி சொன்ன வார்த்தையை கேட்டு ஆகாஷ் இனியாவிடம் முக்கிய விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டு இனியா அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவும் அமிர்தாவும் ரெஸ்டாரண்டில் சோகமாக உட்கார்ந்து இருக்கிறார்கள். அப்போது செல்வி புது டிஷ் பற்றி கேட்க வர பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். என்ன ஆச்சு அமிர்தா என்று செல்வி கேட்டதும் வீட்டில் ஒரே பிரச்சனை என்று அமிர்தா சொல்ல, என்ன பிரச்சனை என்று செல்வி கேட்கிறார்.

செல்வி சொன்ன ஆறுதல்
அதற்கு ரொம்ப பயமா இருக்கு, இனியா கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுறா, ஆனா வீட்ல இருக்கவங்க அவளுடைய மனசை மாத்துறதில் தான் எல்லோரும் குறியா இருக்குறாங்க. ரெஸ்டாரண்ட் வேண்டும் என்று கேட்டுட்டு போன ரெண்டு மூணு நாளில் அந்த நபர் பொண்ணு கேட்டு வராங்க. எனக்கு ஏதோ உறுத்தலா இருக்கு என்று பாக்கியா சொல்ல, அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா அப்படியெல்லாம் உங்க வீட்ல விசாரிக்காம இனியாவை கொடுக்க மாட்டாங்க. அவர் பொண்ணு கேட்ட உடனே பையன் எப்படி எதுன்னு விசாரிச்சு இருப்பாங்க என்று செல்வி ஆறுதல் சொல்கிறார்.
மன்னிப்பு கேட்ட பாக்கியா
அதோடு நீ என் பையனை பற்றி யோசிக்கிறியா என்று செல்வி கேட்க, அதற்கு பாக்கியா நான் எப்படி செல்வி யோசிக்காமல் இருக்க முடியும்? என்று கண்கலங்கி அழுகிறார். அதற்கு செல்வி நீயும் இனியாவும் என் பையனை பற்றி யோசிக்க வேண்டாம். இனியா பாப்பாவுக்கு நல்ல வாழ்க்கை வந்திருக்கு. நீ அவனுக்காக நிறைய யோசிச்சுட்ட, அவனுக்காக வாழ்க்கையில் பல விஷயங்களை செஞ்சிருக்க. அவன் தலையில் என்ன எழுதி இருக்கோ அது கிடைக்கும் என்று செல்வியும் எமோஷனலாகி கண்கலங்க பாக்யா செல்வியிடம் மன்னிப்பு கேட்டு அழுகிறார்.

ஆகாஷ் சொன்ன வார்த்தை
அதற்கு அழாத அக்கா நீ அழுதா ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ இனியா பாப்பாவோட கல்யாண வேலையை பாரு என்று செல்வி ஆறுதல் சொல்கிறார். மறுபக்கத்தில் கோபி இனியாவை கூட்டிக்கொண்டு ஆகாஷ் வீட்டிற்கு போகிறார். அப்போது ஆகாஷ் வீட்டை பார்த்ததும் இனியா என்னாச்சு அப்பா எதுக்கு இங்க வந்து இருக்கீங்க. மீண்டும் ஆகாஷை அடிக்க போறீங்களா என்று இனியா பயப்பட அதற்கு நான் கோபி இல்ல, அது ஏதோ தெரியாம அன்னைக்கு கோபத்தில் நடந்து விட்டது இனி அப்படி நடக்காது.

இனியாவுக்கு அதிர்ச்சி
ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்கு தான் என்று ஆகாஷ் வீட்டுக்கு கூட்டிட்டு வருகிறார். அங்கு ஆகாஷ் கோபி மற்றும் இனியாவை பார்த்ததும் முதலில் பயப்படுகிறார். அப்போது கோபி பயப்படாத நான் உன்னை அடிக்க வரல உன்கிட்ட சில விஷயங்களை பேசணும் என்று சொல்ல, ஆகாஷ் வீட்டிற்குள் கூப்பிடுகிறார். அங்கு வைத்து இனியாவிற்கு நல்ல வரன் கிடைத்திருக்கிறது. பணக்கார வீட்டு சம்பந்தம் ஆனால் அவ கல்யாணத்துக்கு சம்மதிக்காமல் இன்னும் உன்னை நெனச்சிட்டு இருக்கா என்று சொல்ல அதற்கு ஆகாஷ் என்னுடைய வாழ்க்கையில் நிறைய சாதிக்கணும். அதில் உன்னால் வரும் பிரச்சினை என்னால் சமாளிக்க முடியாது, உங்க அப்பா சொல்ற மாதிரி அந்த பையனையே நீ கல்யாணம் பண்ணிக்க என்று ஆகாஷ் சொல்ல இனியா அழுது கொண்டு வெளியே வருகிறார்.
இனியா சொன்ன விஷயம்
இனியா போவதை பார்த்து ஆகாஷ் அழுது கொண்டிருக்கிறார். அதோடு இனியாவை நிறுத்தி ஆல் த பெஸ்ட் இனியா என்று சொல்ல இனியா அங்கிருந்து வந்து விடுகிறார். அடுத்ததாக வீட்டிற்கு வந்த பிறகு இனியா அழுது கொண்டே இருக்க, பாக்கியா என்ன விஷயம் என்று விசாரிக்கிறார். அப்போது கோபி ஆகாஷ் வீட்டிற்கு கூட்டிட்டு போனது பற்றி இனியா சொல்கிறார்.

பாக்கியா பட்ட வேதனை
நீ என்ன முடிவு எடுத்திருக்க என்று பாக்கியா கேட்க, எனக்கு குழப்பமா இருக்கு என்று இனியா சொல்கிறார். அதற்கு பாக்கியா எங்க அப்பா இறந்து போன டைம்ல எங்க அம்மா என்னை யார் கையிலயாவது புடிச்சு கொடுத்துடனும்னு இருந்தாங்க. அந்த நேரத்தில் உங்க தாத்தா வந்து பெண் கேட்டதால் என்னை கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அதற்குப் பிறகு என்னை நான் நிரூபிப்பதற்கு 40 வருஷம் ஆகிடுச்சு.
பாக்கியா அட்வைஸ்
அடுத்தவங்க அவமானப்படுத்துவது, அசிங்கப்படுத்துவதையும் தாங்கிக் கொண்டுதான் இருந்தேன். இந்த நிலைமை உனக்கும் வரணுமா? நீ யோசித்து ஒரு முடிவு எடு என்று அட்வைஸ் செய்கிறார். மறுநாள் காலையில் இனியா சுதாகர் குடும்பத்துடன் கல்யாணத்திற்கு டிரஸ் எடுக்க போயிருக்கிறார்.
பெருமையாக பேசிய சுதாகர்
அப்போது லேட் ஆகிவிட்டதால் என்ன ஆச்சுன்னு தெரியலையே என்று ஈஸ்வரி பதட்டத்தோடு இருக்கிறார். அப்போது சுதாகர் குடும்பத்தினர் எல்லோரும் வீட்டிற்கு வருகின்றனர். நாங்க கல்யாணத்திற்கு நகை புடவை எடுப்பதற்கு ரொம்ப நேரம் ஆகும்னு நினைச்சோம். ஆனா இனியா சீக்கிரமா செலக்ட் பண்ணிட்டா என்று இனியாவை பற்றி சுதாகர் பேசி கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications