பாக்கியலட்சுமி: பாக்யா மீது விழுந்த பழி.. செல்வி எடுத்த விபரீத முடிவு.. ஈஸ்வரியால் உடைந்த குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் எட்டாம் தேதிக்கான எபிசோடில் இனியாவின் காதல் விவகாரம் தெரிந்து மொத்த பழியையும் பாக்கியா மீது ஈஸ்வரி போடுகிறார். அதுபோல செல்வியை வீட்டை விட்டு துரத்தியதால் செல்வி விபரீத முடிவு எடுக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று மேல் தட்டு வர்க்கத்தினரின் மனநிலை அப்படியே பிரதிபலித்திருக்கிறது. எங்க வீட்டில் வேலை பார்ப்பவர்களை குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறோம் என்று சொன்னாலும் உண்மை அதுவே அல்ல அது வெளி பேச்சுக்கு மட்டும் தான் என்று இந்த சீரியலில் இன்று காட்டப்பட்டிருக்கிறது.

பிரதிபலிக்கும் உண்மை
அதாவது இனியா காதலிப்பது செல்வியின் மகன் ஆகாஷ் என்று தெரிந்ததும் ஈஸ்வரி இனியாவை போட்டு அடிக்கிறார் உனக்கு காதலிக்க வேறு ஆளே கிடைக்கலையா நம்ம தகுதிக்கு தகுதியான ஆள் உனக்கு காதலிக்க கிடைக்கலையா? நம்ம வீட்டில் கூட்டி பெருக்குகிற வேலைக்காரியின் மகன்தான் உனக்கு கேக்குதா என்று திட்டி அடிக்கிறார்.
பழிபோடும் ஈஸ்வரி
அப்போது ஈஸ்வரியை எல்லோரும் பிடித்துக் கொள்கின்றனர். பிறகு ஈஸ்வரி பாக்கியாவிடம் இத்தனைக்கும் காரணம் இவ தான். குடும்பம் குழந்தைகள் பார்க்காமல் எப்போதும் வேலை ரெஸ்டாரண்ட் என்று ஓடிக்கிட்டே இருக்கா அதனாலதான் அவ பிள்ளைகள் இப்படி திரியறாங்க. வீட்டில் பெரியவர்கள் என்ன செய்கிறார்களோ அதே போல தானே குழந்தைகளும் செய்யும்.
எழிலை அசிங்கப்படுத்தும் ஈஸ்வரி
தராதரம் இல்லாம அவளுடைய குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணி வச்ச.. எழில் இன்னைக்கு எவ்வளவு பெரிய இயக்குனராய் இருக்கிறார். அவன் தகுதிக்கு தகுந்த மாதிரி ஒரு பணக்கார வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இன்னைக்கு இனியாவும் அதேபோல யோசிச்சிருக்க மாட்டா. ஒண்ணுமே இல்லாம எழிலுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத அமிர்தாவை குடும்பத்தை எதிர்த்து கல்யாணம் பண்ணி வச்சா. அதை பாத்து தான் இனியா மனசும் கெட்டுப் போயிடுச்சு என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

சப்போர்ட் செய்யும் கோபி
அப்போது கோபி இதை விடுங்கம்மா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது செழியன் இனியாவிடம் உனக்கு காதலிக்க வேண்டும் என்று தோணுச்சுன்னா வேற ஆளே கிடைக்கலையா? போயும் போயும் நம்ம வீட்ல வேலை பாக்குற செல்வி மகனை காதலிச்சு இருக்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

செல்வி பாவம்
அப்போது ஜெனி இனியாவுக்கு சப்போர்ட் பண்ணி பேச ஈஸ்வரி மேலும் கோபப்படுகிறார். அந்த நேரத்தில் செல்வி அக்கா நான் வரதுக்குள்ள நீ வீட்டுக்கே வந்துட்டியா என்று வழக்கம்போல பேசிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டில் எல்லோரும் கோபமாக நிற்பதை பார்த்து செல்விக்கு சந்தேகம் வருகிறது என்ன ஆச்சு என்று விசாரிக்க ஈஸ்வரி இதுக்காகத்தான் ப்ளான் போட்டு இந்த வீட்டுக்குள்ள வந்தியா? உன் பையன் கிட்ட சொல்லிக் கொடுத்து எங்க வீட்டு பொண்ண காதலிக்க சொன்னியா என்று கேட்டதும் செல்வி அதிர்ச்சியில் இருக்கிறார்.
வெளியே துரத்தும் ஈஸ்வரி
இனியா எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டிருக்கிறார். அப்போது கோபி நான் தான் என் கண்ணால பார்த்தேனே உன் பையன் என் பொண்ணு கூட ரெஸ்டாரண்டில் ஒன்றாக பேசிட்டு இருக்குறாங்க என்று சொல்ல, செல்வி அழுது கொண்டிருக்க, ஈஸ்வரி இனி நீ இந்த வீட்டு பக்கமே வரக்கூடாது, வெளியே போ என துரத்துகிறார்.

பாவம் செல்வி
அப்போது பாக்கியா எதுவும் சொல்லாமல் அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்து செல்வி அழுது கொண்டே வர அக்கம்பக்கத்தினர் என்ன ஆச்சு என்று கேட்க எதுவும் பேசாமல் செல்வி தெருவில் அழுது கொண்டே வருகிறார். ஆகாஷுக்கு போன் பண்ணி என் குடியை கெடுத்துட்டியே உன்கிட்ட நான் எத்தன முறை சொல்லிக்கிட்டே இருந்தேன் நீ கேட்காமல் இப்படி பண்ணிட்டியே என்று அழுது போனை வைக்கிறார்.

அடி வாங்கும் ஆகாஷ்
பிறகு ஆகாஷ் வீட்டிற்கு வந்து காத்துக் கொண்டிருக்க அங்கு வரும் செல்வி ஆகாஷை போட்டு அடிக்கிறார். எது நடக்க கூடாதுன்னு நான் நினைச்சுக்கிட்டே இருந்தேனோ அதையே நீ செஞ்சிட்ட, எத்தனை முறை நான் எதுவும் தப்பு பண்ணிடாத என்ற கெஞ்சி கேட்டேன் ஆனாலும் நீ இப்படி பண்ணிட்ட என்று அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications