பாக்கியலட்சுமி: வாழ்க்கையில் பாக்யா எடுத்த சூப்பர் முடிவு.. சுதாகருக்கு செம அடி.. ஈஸ்வரிக்கு ஜெனி கொடுத்த பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 8ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியலட்சுமி தன்னுடைய ரெஸ்டாரண்டை புதிய பெயரோடு தொடங்குகிறார். அதே நேரத்தில் இனியா பாக்கியா வீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா தன்னுடைய புதிய ஹோட்டலுக்கு வெள்ளை அடித்து, கிளீன் பண்ணி வைக்கிறார். அந்த நேரத்தில் எழிலும் அமிர்தாவும் வருகின்றனர். கடையை பார்த்ததும் எழிலுக்கு பிடித்து போய்விடுகிறது. வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் ஏதாவது உனக்கு தரணும் என்று சொல்ல பாக்கியா அப்படி என்றால் எனக்கு ஒரு நேம் போர்டு வாங்கித்தா, ஆனால் இது ஈஸ்வரி ரெஸ்டாரண்ட் இல்லை பாக்கியலட்சுமி ரெஸ்டாரண்ட் என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சி ஆகின்றனர்.

பாக்யா எடுத்த நல்ல முடிவு
ஆமா இது எங்க அத்தைக்கு பிடிக்காமல் நான் தொடங்குற பிசினஸ் அதனால் அவங்க பெயர் வச்சா அதுக்கு சண்டைக்கு வருவாங்க. அதனால் நான் பாக்கியலட்சுமி என்ற பெயரையே வைக்கப்போறேன் என்று சொன்னதும் இப்போதான் நல்ல முடிவு எடுத்திருக்கமா நான் பெருசா உனக்கு போர்டு வச்சு தரேன் என்று எழில் சொல்கிறார். அடுத்ததாக ஈஸ்வரியும் கோபியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஜெனி பதிலடி
அப்போது இனியா எப்போ வீட்டுக்கு வர போறா என்று ஈஸ்வரி கேட்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவா என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு இனியாவை பார்க்கணும் போல இருக்கு, கண்ணுக்குள்ளேயே நிற்கிறது அவளை இனி இங்கே கொஞ்ச நாள் இருக்க சொல்லலாமா என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது, ஜெனி நான் எங்க அம்மா வீட்டுக்கு போனா கொஞ்ச நேரம் கூட இருக்க விட மாட்டீங்க, உங்க அம்மா வீட்டிலேயே இருக்கணும்னு கேட்பிங்க இப்போ உங்க பேத்தி மட்டும் இங்க தங்கணுமா? என்ன நியாயம் என்று கேட்க, சொல்லி காமிக்கிறியா என்று ஈஸ்வரி கேட்கிறார்.
ஈஸ்வரி கேட்ட கேள்வி
நான் சொல்லி காமிக்கல உண்மையை தான் சொல்றேன் என்று பதிலடி கொடுக்கிறார். அப்போது பாக்கியா வந்து இனியா பற்றி விசாரித்து விட்டு கிளம்புகிறார். அப்போது ஈஸ்வரி தடுத்து நிறுத்தி நீ எப்பவுமே உன் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்துக்காக யோசிக்க மாட்டியா? உனக்கு வேலை தான் முக்கியமா? என்று கேட்க, நான் எப்போதும் எனக்கு வேலை மட்டும் தான் முக்கியம்னு நினைச்சதே கிடையாது.
பாக்கியா பதிலடி
வேலை பார்த்தாலும் என் குழந்தைகளுக்கு என்ன தேவையோ அதையே நான் செய்து கொடுத்திருக்கிறேன் என்று பதிலடி கொடுத்துவிட்டு கிளம்புகிறார். அடுத்ததாக பாக்கியா சுதாகர் வீட்டுக்கு போகிறார். பாக்யாவை பார்ப்பதும் சுதாகர் முகம் சுளிக்கிறார். ஆனால் பாக்கியா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இனியாவிடம் பேசி கொண்டே இருக்கிறார். பிறகு நான் ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லதான் வந்தேன் என்று தான் புதியதாக ஒரு ரெஸ்டாரண்ட் திறக்க போறேன் என்று சொல்ல, இனியா சந்தோஷப்பட்டு வாழ்த்துக்கள் சொல்கிறார் சுதாகர் அதிர்ச்சி ஆகிறார்.
பாக்கியா சொன்ன செய்தி
ஏற்கனவே ரெண்டு ரெஸ்டாரண்ட் சக்சஸ்ஃபுல்லா போயிட்டு இருக்கு இப்போ மூன்றாவது ரெஸ்டாரண்ட் தொடங்கப் போகிறாயா? இது ரொம்ப சந்தோஷமான விஷயம். உன்ன நெனச்சு எனக்கு ப்ரௌடா இருக்குது என்று இனியா சொல்லிக் கொண்டிருக்கும்போது சுதாகர் கோபமாகி கொண்டே இருக்கிறார். அடுத்ததாக இனியாவும் பாக்கியாவும் தனியாக பேசப் போய் விடுகிறார்கள்.
செழியன் காட்டிய வீடியோ
அப்போது செழியனிடம் சுதாகர் பாக்யா எங்கு ரெஸ்டாரண்ட் தொடங்க போறாங்க என்று விசாரிக்கிறார். அதற்கு செழியன் வேளச்சேரியில் ஒரு சின்ன ரெஸ்டாரண்ட் தான் என்று ரெஸ்டாரண்ட் வீடியோவை காட்டியதும் சுதாகர் நீங்க வேற இடத்தை காட்டுறீங்கனு நினைக்கிறேன் என்று சொல்ல, இதுதான் சார் அம்மாவோட புது ரெஸ்டாரன்ட் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications