பாக்கியலட்சுமி சீரியலில் இனிவரும் எபிசோடு இதுதான்..கதையை சொன்ன கோபி..அப்போ பாக்யா நிலைமை!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனி வரும் எபிசோடுகளின் கதையை கோபி கூறி இருக்கிறார்.
பாக்கியா கோபியின் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் இனி பல பிரச்சனை ஏற்பட போகிறதாம்.
இதுவரைக்கும் இதே வீட்டில் பாக்கியாவை மிரட்டி வந்த கோபியின் நிலைமை இனி பரிதாபமாக ஆகப்போகிறதாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மனதில் இருக்கின்றது. ஏற்கனவே இன்றைய எபிசோட்டில் ராதிகாவும் கோபியின் வீட்டிற்கு வந்து நானும் இங்கே தான் இருப்பேன் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் பாக்யா ஒரு வாரமாக அதிகமாக டயலாக் பேசாமல் மாமியாரிடம்," நான் என்ன செய்யட்டும் அத்த" என்கிற ஒரே டயலாக்கை ரிப்பீட் மோடில் பேசிக்கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் ராதிகா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கோபி தவித்துக் கொண்டிருக்கிறார்.இனி பாக்யா வீட்டை விட்டு கிளம்புவாரா? அல்லது இதே வீட்டில் இருப்பாரா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இனி தான் நீங்கள் எதிர்பார்த்த பல அதிரடி திருப்பங்களும், என்டர்டைன்மெண்டும் வரப்போகிறது. இதுவரைக்கும் ஆட்டம் போட்டு இருந்த கோபி இனி பாடாய் படப் போகிறார். ஒரு பக்கம் ராதிகா, இன்னொரு பக்கம் அம்மா- அப்பா, இன்னொரு பக்கம் குழந்தைகள் என அனைவரிடமும் மாட்டிக் கொண்டு அடி வாங்கி தவிக்கப் போகிறார் என்று கூறி இருக்கிறார்.
அதோடு இனி சில மாதங்களுக்கு எல்லோரும் ஒரே வீட்டில் தான் இருக்கப் போகிறோம் என்றும் கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் பாக்கியா வீட்டை விட்டு போக போறது இல்லை. நானும் இந்த வீட்டிற்கு பணம் கொடுத்து இருக்கேன் அதனால் நான் இந்த வீட்டில் தான் இருப்பேன் என்று பேசிக்கொண்டு இருக்கப் போகிறார் போல, ஏற்கனவே எழில் ராதிகா வீட்டிற்குள் வந்ததுமே இந்த வீட்டிற்கு எங்க அம்மா பணம் கொடுத்திருக்காங்க என்று கூறினார். ஆனால் பாக்யா எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்.
ஈஸ்வரி கோபி மீது வைத்திருக்கும் மகன் பாசத்தால் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கும் நிலையில் இனி ரசிகர்கள் எதிர்பார்த்த பல என்டர்டைன்மென்ட் காத்திருக்கிறது. கோபி அடி மேல் அடி வாங்கி, வாய் பேச முடியாமல் தவிக்கிறார். இதுவரைக்கும் டம்மி வில்லியாக இருந்த ராதிகா இனி பயங்கரமான வில்லியாக மாறி பாக்யாவை பாடாயப்படுத்த போகிறாரா? அல்லது எப்போதும் போல பாக்யா ராதிகாவுக்கு பதில் அடி கொடுக்கப் போகிறாரா? என்பது இன்னும் அடுத்த வாரத்தில் தெரியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications