நடுத்தெருவில் இனியா சரணோடு செய்த செயல்...பாக்கியாவுக்கு வந்த புது சிக்கல்.. அடுத்த பிரச்சனை இதுதானா?

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேகா வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை நேகா இனியா கேரக்டரில் நடித்து வருகிறார்.

சீரியலில் தன்னோடு நடிக்கும் சரணுடன் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை நடிகை நேகா பகிர்ந்து இருக்கிறார்.

சரணிடம் மொக்கை வாங்கிய இனியாவின் வீடியோவிற்க்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இனியாவின் புது நட்பு

இனியாவின் புது நட்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிற்கு குடும்ப பெண்களின் மத்தியில் அமோகமாக வரவேற்பு இருந்து வருகிறது. அதன் காரணமாகத்தான் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடத்தை இந்த சீரியல் பிடித்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். பாக்யாவை விட்டு கோபி இரண்டாவது திருமணம் செய்து போய்விட்ட நிலையில் கோபியோடு சேர்ந்து இனியாவும் கோபியின் வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் டியூஷனில் சேர்ந்திருக்கும் இனியா அங்கு சரண் என்ற நபரோடு பேசி பழகி வருகிறார்.

வீட்டிற்க்கே வந்த சரண்

வீட்டிற்க்கே வந்த சரண்

இனியா மீது நம்பிக்கையில் இருக்கும் பாக்கியாவும் சரணை தன்னுடைய வீட்டிற்கே வரவைத்து பிரியாணி விருந்து வைத்து அனுப்புகிறார். சரண் வீட்டுக்கு வந்த முதல் நாளே ஈஸ்வரியிடம் பார்ப்பதற்கு பாட்டி மாதிரி இல்லை ஆன்ட்டி மாதிரி இருக்காங்க என்று சொல்லி ஐஸ் வச்சு நன்றாக செட் ஆகிவிட்டார். இந்த நிலையில் அடுத்து இவர்களுடைய டிராக் எப்படி போகப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சரண் இனியாவிடம் காதலிப்பது போன்று தான் பேசி பழகி வருகிறார். இனியாவும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தட்டிக் கழித்து வருகிறார்.

ஏமாந்துட்டீங்களே இனியா

ஏமாந்துட்டீங்களே இனியா

இந்த நிலையில் தற்போது இனியாவாக நடிக்கும் நேகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் சரண் உடன் இனியா ரோட்டில் நிற்கும்போது சரண் இனியாவிடம் நீ நன்றாக நடிப்பாய் தானே அப்போ கண் தெரியாதவர்கள் மாதிரி நடித்துக் காட்டுறியா என்று கேட்க, அதற்கு இனியாவும் சரி என்று சொல்ல, அப்போ கண் தெரியாதவர்கள் சாப்பாடு வேண்டுமென்றால் எப்படி கேட்பார்கள் என்று கேட்க, அதற்கு சைகை மொழியில் இனியாவும் பதில் அளிக்க, அடுத்ததாக எனக்கு அறிவில்லை என்பதை எப்படி சொல்வாய் என்று சரண் கேட்க அதற்கும் சைகை மொழியில் இனியா பதில் சொல்ல, கடைசியில் நான் கண் தானே தெரியாது என்று சொன்னேன் வாய் பேசும் தானே ஏன் இதற்கு பதில் சொல்லவில்லை என்று கேட்க கடைசியில் இனியாவுக்கு பல்பு கிடைக்கிறது.

அடுத்த பிரச்சனை ரெடி

அடுத்த பிரச்சனை ரெடி

இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சீரியலில் பாக்கியா, சல்வார் அணிந்து வரவேண்டும் என்று ராதிகா கூறியிருக்கிறார். அதற்கு வீட்டில் இருக்கும் மருமகள்கள் நீங்கள் தாராளமா போட்டுட்டு போங்க என்று சொல்ல, அதுவெல்லாம் முடியாது அத்தை என்ன சொல்லுவாங்கன்னு தெரியாது என்று பாக்கியா பயந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பாக்யா சல்வார் போட்டால்தான் கேண்டினில் வேலை பார்க்க முடியும் என்று ராதிகா சொல்லி இருப்பதால், அடுத்த பிரச்சனை சல்வார் வைத்து வர இருக்கிறது. இனி பாக்யா சல்வார் போடும்போது ஈஸ்வரி என்ன செல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+