பாக்கியலட்சுமி சீரியலில் இதை கவனிச்சீங்களா..? ராதிகா செயல் சூப்பர்.. ஆனால் “அது” மோசமான குணம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா ஸ்கூலில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்.
இந்த நிலையில் தனக்கு வழங்கிய பாராட்டு விழாவில் கலந்து கொள்ள பாக்யா வரவில்லை என்று இனியா கோபத்தில் இருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த சீரியலில் சில நெருடலான காட்சிகளும், சில அபத்தமான காட்சிகளும் இடம் பெற்றதை நீங்கள் கவனித்தீர்களா? அதை விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல் கோபி பாக்கியாவை விட்டு சென்று ராதிகாவை திருமணம் செய்த பிறகு அடுத்தடுத்து பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பாக்யாவிற்கும் கோபி தொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுக்க அதில் எல்லாம் பாக்கியா ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் கூட கோபி பாக்கியா இருக்கும் வீடு தன்னுடைய பெயரில் இருக்கிறது என்று அதற்காக இருபது லட்சம் பணம் வேண்டும் என்றும் பிரச்சனை செய்திருந்தார். அதற்காக பாக்யாவும் போராடி அந்த பணத்தை கொடுத்து இப்போது வீட்டை விட்டு கோபி மற்றும் ராதிகாவை துரத்திவிட்டு தன்னுடைய வீட்டில் சந்தோஷமாக இருக்கும் இந்த நிலையில் அடுத்த பிரச்சனையும் வந்திருக்கிறது.

இனியாவிற்கு 12 ஆம் வகுப்பு ரிசல்ட் வரும் நேரத்தில் பாக்கியா இன்னொரு சமையல் ஆர்டரில் ஏற்பட்ட பிரச்சனையால் மண்டபத்திலயே மாட்டிக்கொள்ள இனியாவின் பாராட்டு விழாவில் பாக்கியாவால் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் இனியா பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்திருக்கிறார் என்று தெரிந்ததும் கோபி சந்தோஷப்பட்டு ஓடிவந்து இனியாவை பாராட்டி இருப்பார்.
அந்த சீனில் நடந்த சில நெருடலான நிகழ்வுகளை தான் இப்போது பார்க்க போகிறோம். என்னதான் ராதிகா கோபியை இரண்டாவதாக திருமணம் செய்திருந்தாலும் கோபியின் சந்தோஷத்திற்காக எப்போதும் இடையூறாக இருந்தது இல்லை. கோபி தனக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ராதிகா இனியா அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்று சொன்னபோது அதிகளவில் சந்தோஷப்பட்டு இருந்தார்.

அதே நேரத்தில் இனியா இந்த அளவிற்கு மார்க்கு வாங்குவதற்கு காரணமும் ஒரு வகையில் ராதிகா தான் இது பலருக்கும் தெரிந்திருக்கும். காரணம் பாக்யா வீட்டில் இருக்கும்போது இனியா அந்த அளவிற்கு படித்ததில்லை ஆனால் ராதிகா வீட்டில் இருக்கும் போது இனியா சரியாக படிக்காமல் போனில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று முதலில் கண்டித்து இனியாவை படிக்க வைத்தது ராதிகா தான். விடியற்காலையில் எழுந்து படிக்க வைத்ததும் ராதிகா தான். அதுபோல ராதிகா கோபி வீட்டில் இருக்கும் போது கூட கோபியின் அறையில் அதிக நேரம் இனியா படித்துக் கொண்டிருந்தார். அதற்கும் ராதிகா சம்மதித்திருந்தார்
இந்த நிலையில் ராதியில் இனியா அதிக மதிப்பெண் பெற்று இருக்கிறார் என்று தெரிந்த போது அவர் ரொம்பவே சந்தோஷப்பட்டு இருந்தார். அதுபோல தன்னுடைய காலனியில் நடக்கும் பாராட்டு விழாவிலும் சந்தோஷமாக கலந்து கொண்டு இனியாவோடு புகைப்படங்களையும் எடுத்து இருந்தார். இதுகுறித்து ரசிகர்களின் மத்தியில் ராதிகா மீது நல்ல எண்ணம் உருவாகி அவரை பலர் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க இதுவரைக்கும் சின்ன குழந்தையாகவே நடந்து கொள்ளும் இனியா இப்போது 12-ம் வகுப்பு பரீட்சை எழுதி முடித்த பிறகும் அதே கேரக்டரில் இருக்கிறார். இது மோசமான கேரக்டர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். காரணம் பாக்கியா எவ்வளவு பிரச்சனைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் எல்லாமே இனியாவிற்கு தெரிந்திருந்தாலும், இத்தனை வயதான பிறகும் அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய ஃபங்ஷனுக்கு வர முடியவில்லை என்று மட்டும் இனியா கோபப்படுவது அதே நேரத்தில் கோபியால் தான் பட்ட கஷ்டங்கள் போதாது என்று தன்னுடைய அம்மாவை அவமானப்படுத்துவதற்கு கோபியை பெருமையாக பேசியது போன்ற கேரக்டர்களை ரசிகர்கள் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications