பாக்கியலட்சுமி: ராதிகா கேட்ட கேள்வி.. ஆடிப்போன பாக்கியா.. ஜெனி சொன்ன வார்த்தை.. கோபி மனம் மாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025, ஜனவரி 17ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்யா கோபியிடம் உதவி கேட்க அதற்கு ராதிகா எதிர்பார்க்காத வார்த்தையை சொல்கிறார். இதைப் பார்த்து ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி பிரட்டும் ஜாமூன் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். அங்கு வந்த ஈஸ்வரி இதைப் பார்த்து இது உனக்கு போதுமா என்று கேட்க இன்னும் நிறைய இருக்குமா என்று சொல்கிறார். அதற்கு ராதிகா நான் ஓட்ஸ் கஞ்சி தரேன்னு சொன்னேன் அவர்தான் வேண்டாம்னு சொல்லிட்டாரு என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி ராதிகாவை திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா சோகமாக வர என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

அதற்கு பாக்கியா ராஜசேகரன் சார் அவருக்கு ஆபீஸில் ஆனிவர்சரி வர்றதால 500 பேருக்கு கிராமத்து முறையில் சாப்பாடு கேட்டிருந்தாரு. ஆனா இப்போ என்கிட்ட அத்தனை பேருக்கு சமைக்க ஆள் இல்ல. எனக்கு ஏற்கனவே ரொம்ப கடன் அதிகமா இருக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு ஈஸ்வரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு வர வேண்டியதுதானே என்று சொல்ல, செல்வி பண்ண முடியுமான்னு கேக்க அவரு கூப்பிடல பண்ணி கொடுங்கன்னு சொல்றதுக்கு தான் அவரு கூப்பிட்டு இருந்தாரு என்று சொல்ல, பிசினஸ்ல கஷ்டம் இருக்கத்தான் செய்யும் நீ முடியாதுன்னு சொல்லிட்டு வர வேண்டியதுதானே என்று ஈஸ்வரி கேட்கிறார்.
அதற்கு ராதிகா உங்களுக்கு பணம் தானே பிரச்சனை.. நான் உங்களுக்கு பணம் தரேன் கடனா கூட வாங்கிட்டு உங்களுக்கு எப்போ கொடுக்க முடியுமோ அப்போ கொடுங்க என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா வாங்க மறுக்கிறார். அப்போது கோபி எங்க கிச்சன்ல செஃப் இருக்காங்க. அவங்க கிட்ட சொல்றேன் அவங்க சூப்பரா சமைப்பாங்க என்று சொல்ல பாக்கியம் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

அப்போது கோபி என்னால் தானே உனக்கு இவ்வளவு பிரச்சனை வந்தது நானே சரி பண்ணி தரேன் என்று சொல்கிறார். இப்போதைக்கு எந்த ஹெல்ப்பும் வேணாம் நீங்க ரெண்டு பேரும் கேட்டது எனக்கு சந்தோஷம். ஹெல்ப் தேவைப்பட்டால் சொல்றேன் என்று சொல்லி விடுகிறார். அடுத்ததாக ஜெனியும் பாக்யாவும் பேசிக் கொண்டிருக்க என்ன ஆன்ட்டி பண்ண போறீங்க என்னோட ஜுவல்ஸ் இருக்கு நீங்க அதை வச்சு ஏதாவது பண்ணிக்கோங்க என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி விடுகிறார்.
அடுத்ததாக எழில் அங்கு வர நான் சொன்னது பத்தி என்னடா முடிவு வச்சிருக்க என்று பாக்கியா கேட்கிறார். அதற்கு எழில் நீ அப்பா கிட்ட உதவி கேட்கிறது எல்லாம் எந்த தப்பு இல்லன்னு தான் எனக்கு தோணுது. இது அவரால வந்த பிரச்சனை தானே.. உன்ன கல்யாணம் பண்ணனுன அப்போதான் எந்த உதவியும் பண்ணல... இப்பவாவது பண்ணட்டும் ஏத்துக்கோ என்று சொல்ல பாக்கியா யோசிக்கிறார்.
ஜெனியும் எழில் சொல்றது சரிதான் என்று சொல்ல, பிறகு எல்லோரும் கிச்சனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கோபியிடம் பாக்கியா நீங்க உங்க ரெஸ்டாரண்டில் இருந்து செஃப் அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார்.
அதோடு நீ என்னை இப்படி பண்ண முடியுமான்னு கேக்குற, எனக்கு அனுப்பி வைங்கன்னு உரிமையா சொல்லு என்று சொல்ல, இதை எல்லாம் ராதிகா கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு கோபி நான் உனக்காக அனுப்பி வைக்கிறேன். இது உனக்கு நான் செய்ற கைமாறு என்று செண்டிமெண்டாக பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications