செழியனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெனி.. எழிலால் வந்த பிரச்சனை.. ஆனால் பாக்யாவுக்கு கிடைத்த புது வாய்ப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜனவரி 19ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது. அதில் தன்னை பற்றி புரிய வைப்பதற்காக போன செழியனுக்கு ஜெனி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். எழில் செழியன் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டும் என்று எடுத்த முயற்சி கடைசியில் தப்பாக போயிருக்கிறது.
அதே நேரத்தில் பாக்யாவிற்கு அமைச்சர் மூலமாக புதிய வாய்ப்பு இருந்திருக்கிறது. இத்தனை நாட்களாக சீரியலில் அழுது கொண்டு இருந்த நிலையில் இப்போது பாக்யாவுக்கு செம சர்ப்ரைஸ் கிடைத்து இருக்கிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஜெனியை கூட்டிக்கொண்டு செழியன் போய்க்கொண்டிருக்கும் விஷயத்தை பாக்கியாவிடம் சொல்ல பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். அந்த நேரத்தில் எழிலை பிடித்து பாக்கியா திட்டிக் கொண்டிருக்கும் போது அங்கு ஜோசப் வர பாக்கியா பேச்சை நிறுத்தி விடுகிறார். அப்போது ஜோசப் ஜெனியும் அவருடைய காரும் இல்லாததை பார்த்து இந்த பக்கமாக செழியனை தேடுகிறார்.

அவரும் அங்கு இல்லாததால் இதை புரிந்து கொண்டு பாக்கியா மற்றும் எழிலிடம் என்ன செய்தி ஜெனியையும் செழியனையும் காணோம்? நீங்க என்ன பண்ணுறீங்க என்று கேள்வி கேட்க, அதற்கு செழியன் ஜெனிடம் பேசுவதற்காக கூட்டிட்டு போய் இருக்கான். அவன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவான். நீங்க பயப்படாம போங்க என்று பாக்கியா சொல்கிறார்.
அதற்கு ஜோசப் கோர்ட்டில் வைத்து என் பொண்ண கடத்தி இருக்கிறீர்களா? இதை வைத்து நான் போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்து செழியனை உள்ள கூட தள்ள முடியும் என்று மிரட்டி விட்டு போகிறார். அதே நேரத்தில் மறுபக்கத்தில் செழியன், ஜெனியிடம் பேச முயற்சி செய்ய ஜெனி காரை நிறுத்து என்று செழியன் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் திட்டிக் கொண்டிருக்க திடீரென்று காரில் இருந்து இறங்கி விடுகிறார்.

அப்போது செழியன் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு மீண்டும் பேச முயற்சி செய்ய, ஜெனி என்னை வீட்டில கொண்டு விடு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதோடு இனிமே எல்லாமே அவ்வளவுதானா? என்று கேட்டு ஜெனியை கூட்டிக்கொண்டு வீட்டில் கொண்டு விடுகிறார். மறுபக்கத்தில் பாக்யாவுக்கு அமைச்சரிடம் இருந்து போன் வருகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அமைச்சர் உங்களை பாக்கணும்னு சொல்லி வர சொன்னதாக அவர்கள் சொல்ல,
பாக்கியாவும் தொழிலும் கிளம்பி செல்கின்றனர். அந்த நேரத்தில் வீட்டிற்கு செழியன் வந்ததும் உள்ளே போக முயற்சி செய்ய அப்போது செழியன் அவரிடம் தடுத்து நிறுத்தி பேச முயற்சி செய்து நான் என்ன பண்ணட்டும் சொல்லு என்று கேட்க அந்த நேரத்தில் ஆட்டோவில் வந்து இருந்தும் ஜோசப் செத்துப் போ என்று சொல்கிறார். அதோடு இன்னொரு முறை ஜெனிபக்கம் நீ வரக்கூடாது என்று சொல்ல, அதற்கு செழியன் நான் ஜெனி கிட்ட பேச திரும்பத் திரும்ப முயற்சி பண்ணிக்கிட்டே தான் இருப்பேன் என்று சொல்ல, அப்போது ஜோசப் செழியனை அடிக்க கை ஓங்குகிறார்.
அந்த நேரத்தில் செழியன் இடையில் வந்து தடுத்து நிறுத்தி அப்பாவை கூட்டிட்டு வீட்டிற்கு போகிறார். மறுபக்கத்தில் அமைச்சரை பார்க்க வந்த பாக்கியா விடம் அவர் அடுத்த மூன்று நாள் நீங்க திருச்செந்தூரில் இருக்கிற மாதிரி பிளான் பண்ணிடுங்க, உங்க டீம் எல்லாரையும் கூட்டிட்டு போங்க என்னோட கட்சியின் மீட்டிங் அங்கு நடக்கப்போகுது அதுக்கு நீங்கதான் கேட்டரிங் பண்ணனும் என்று சொல்கிறார்.

அதற்கு பாக்கியா அவ்வளவு பேருக்கு என்னால சமைச்சு பரிமாற்ற முடியுமா? என்கிட்ட அந்த அளவுக்கு ஆள் இல்லையே என்று சொல்ல அதற்கு அமைச்சர் உங்களுக்கு எவ்வளவு ஆள் தேவையா அதை நாங்க ஏற்பாடு பண்ணி தாரோம். நீங்க சமைக்கிறதை மட்டும் பாருங்க என்று கேட்டரிங் ஆர்டர் கொடுக்கிறார். இதனால் பாக்கியா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications