பாக்கியலட்சுமி: கோபி செய்த செயல்.. பாயிண்டை பிடித்த செல்வி! போனில் ராதிகா கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 20ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி பாக்யாவிற்கு உதவி செய்வதற்காக முடிவெடுத்து இருக்கிறார். அப்போது ராதிகா கோபியின் மன மாற்றத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மயூ சோகமாக உட்கார்ந்து இருக்கிறார். அப்போது ஈஸ்வரி திட்டியதை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு பாக்கியா வந்து சமாதானப்படுத்தி அவருக்கு கிப்ட் கொடுக்கிறார். மேலும் இனிமேல் ஈஸ்வரி பாட்டி அப்படி பேச மாட்டாங்க நான் அவருக்கு புரியும்படி எடுத்து சொல்லி இருக்கிறேன்.

baakiyalakshmi serial vijay tv

இனியா போல உனக்கும் எல்லா உரிமையும் இருக்கு. நீ கோபியை அப்பா என்று கூப்பிடலாம் என்று மயூவை பாக்கியா சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த இனியாவும் மயூவிடம் மன்னிப்பு கேட்டு கிப்ட் ஒன்று கொடுக்கிறார்.

அப்போது பாக்கியா உனக்காக நான், அம்மா, இனியா மூன்று பேரும் சப்போர்ட்டா இருக்கிறோம். நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம் என்று மயூக்கு தைரியம் கொடுக்கிறார். அடுத்த நாள் பாக்யா ரெஸ்டாரண்டில் இருக்கும்போது அங்கே எல்லோரும் வருகிறார்கள். அப்போது கல்யாண ஆர்டருக்கு கோபியின் கிச்சன் ஆட்கள் வருவார்களா? என்று பாக்யாவை போன் பண்ணி கேட்க செல்வி சொல்கிறார்.

ஆனாலும் பாக்கியா கேட்காமல் இருக்கிறார். அப்போது செல்வி எழிலிடம் கோபி சார் முன்ன மாதிரி இல்ல பாக்கியா அக்கா மீது மெல்ல ரொம்ப அக்கறை வந்துடுச்சு. இப்போ அவருக்கு அக்கா மேல லவ் வந்திருக்கு என்று கிண்டல் செய்கிறார். அந்த நேரத்தில் கோபி தன்னுடைய வேலை ஆட்களுடன் அங்கு கெத்தாக என்ட்ரி கொடுக்கிறார்.

மேலும் பாக்யாவை தன்னுடைய வேலை ஆட்களிடம் பெருமையாக அறிமுகப்படுத்துகிறார். அதற்கு பிறகு பாக்கியா இந்த சமையல் கிராமத்து முறையில் சமைக்க வேண்டும் என்று சமையல் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கோபி கைதட்டி பாராட்டுகிறார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எழில் செல்வி அக்கா சொல்லும் போது கூட நான் நம்பல. ஆனால் இப்போ அப்பா பாசக்காரராக மாறிட்டாரு என்று அவரும் கிண்டல் செய்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அப்போது ராதிகா கோபிக்கு போன் பண்ணி எப்ப வருவீங்க என்று கேட்க, அதற்கு கோபி பாக்யா ரெஸ்டாரண்டில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு நான் பாக்யாவுக்கு ஹெல்ப் பண்ண வேண்டும் எப்படியும் வருவதற்கு இரவு ஆகிடும் என்று நினைக்கிறேன் என்று சொல்கிறார். மேலும் பாக்கியா பற்றி பெருமையாக பேசிக் கொண்டே இருக்க ராதிகா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

பிறகு கோபியிடம் பாக்கியா உங்க ஆட்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கேட்க அதற்கு கோபி நான் அதை பார்த்துக் கொள்கிறேன், இப்போதைக்கு வேலையை பார்க்கலாம் என்று சொல்ல, பாக்கியா சம்பளத்தை பற்றி இப்பவே பேசி விடுவோம் என்று சொல்கிறார்.

அடுத்த கட்டத்தில் பாக்கியா வீட்டில் காபி குடித்தபடி கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ராதிகாவிடம் கல்யாணம் ஆர்டரை செய்வதற்கு கோபி இடம் உதவி கேட்டிருக்கிறேன். அதை மட்டும் செய்து முடிக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு ராதிகா பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+