பாக்கியலட்சுமி: ஈஸ்வரியை லெப்ட் ரைட் வாங்கிய ராதிகா.. பாக்யா கொடுத்த வார்னிங்.. தவிக்கும் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025, ஜனவரி 22ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகாவை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று ராதிகாவிடம் வம்பு இழுத்த ஈஸ்வரிக்கு ராதிகா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் பாக்யா கோபியிடம் இன்னும் ரெண்டு நாள் தான் டைம் இருக்கு என்று வார்னிங் கொடுத்து இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா தனக்கு கிடைத்த ஆர்டரை நன்றாக செய்து முடித்து அனுப்பி வைக்கிறார். அப்போது பாக்கியாவிடம் உன்னுடைய ஸ்கில், ஆளுமை எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு என்று புகழ்ந்து தள்ளுகிறார். அதற்கு பாக்யா நன்றி மட்டும் சொல்லிவிட்டு நான் உங்களுக்கும் சேர்த்து தான் சமைச்சு இருக்கிறேன் இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

அதை தொடர்ந்து வீட்டிற்கு வந்து கிச்சனில் ராதிகா வந்ததை பார்த்ததும் போன் வராமல் போனில் பேசுவது போல ஆக்ஷன் செய்கிறார். பாக்கியாவும் கோபியும் சேர்ந்து செய்த சமையல் ஆர்டர் பற்றியும், அவர்கள் இருவருக்கும் இருக்கும் பொருத்தம் பற்றியும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
மேலும் கோபிக்கு இப்போ பாக்யாவை தான் பிடிச்சிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதை எல்லாம் கண்டுகொள்ளாத மாதிரி ராதிகா தண்ணீரைப் பிடித்துக் கொண்டு போக ராதிகாவை வழிமறித்து ஈஸ்வரி நான் பேசுவதை எல்லாம் ஒட்டு கேட்டியா என்று வம்பு இழுக்கிறார்.
அதற்கு ராதிகா நான் கேட்க வேண்டும் என்பதற்கு தானே வராத போனில் நீங்க பேசிட்டு இருந்தீங்க என்று பதிலடி கொடுக்கிறார். அப்போது ஈஸ்வரி நீ இந்த வீட்டை விட்டு போய்விடு, கோபியை விவாகரத்து செஞ்சிடு என்று சொல்ல, அதற்கு ராதிகா நீங்க பெரிய சுயநலவாதி. நான் இவ்வளவு நாளா உங்க மகனுக்காக யோசிக்கிறீங்கனு நெனச்சேன்.
ஆனா இப்போ நீங்க உங்களுக்காக தான் யோசிக்கிறீங்க. பாக்கியா நீங்க என்ன சொன்னாலும் சொல்லி முடிப்பதிற்குள் செஞ்சிடுவாங்க. ஆனா நான் உங்களை எதிர்த்து கேள்வி கேட்கிறேன் என்பதற்காகத்தானே உங்க மகன் என்னை விட்டு பிரிஞ்சு வரணும்னு நினைக்கிறீங்க. முதலில் உங்க வயசுக்கு ஏத்த மாதிரி பேசுங்க.
உங்களை போல தெருவுக்கு இரண்டு மாமியார் இருந்தா போதும் என்று திட்டி விட்டு போகிறார். பிறகு இந்த ஆர்டரில் நல்ல லாபம் கிடைச்சிருக்கு என்று பாக்யா செழியனிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். அப்போது ராதிகா இதை கேட்டு பாக்யாவுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். அதோடு என்கிட்ட உதவி வேண்டாம்னு சொல்லிட்டீங்க என்று வருத்தப்படுகிறார்.

அதற்கு பாக்கியா நான் தான் உன்கிட்ட என்னுடைய சூழ்நிலையை சொன்னேனே என்று சொல்ல, ராதிகா சரி என்று சொல்கிறார். பிறகு கோபியிடம் சென்று அவருடைய கிச்சனிலிருந்து வந்த ஆட்களுக்கு சம்பளத்தை கொடுக்கிறார். முதலில் கோபி வேண்டாம் என்று சொல்லவும் ஈஸ்வரி கோபிக்கு சம்பளம் கொடுப்பியா என்று சத்தம் போடுகிறார்.
ஆனால் பாக்கியா கோபியிடம் காசை கொடுத்துவிட்டு போகிறார் பிறகு திரும்பி வந்து நீங்கள் பத்து நாள் இருப்பதற்காக வாடகை தந்திருக்கிங்க. இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. அப்போ வீட்டை காலி பண்ணனும் என்று சொன்னதும். நான் இன்னும் பத்து நாளைக்கு பணம் தரேன் என்று கோபி சொல்கிறார். அதற்கு ராதிகா அது தேவைப்படாது ரெண்டு நாளில் நாங்க கிளம்பிடுவோம் என்று சொல்கிறார்.

இதனால் அங்கிருந்த ஈஸ்வரியும், இனியாவும் பாக்யாவை திட்டுகிறார்கள். இறுதியாக ஈஸ்வரியும் இனியாகவும் கோபியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த கோபி தான் ராதிகாவிடம் பேசுவதாக சொல்கிறார்.
பிறகு கோபி நான் எந்த வீட்டில் தான் நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்கிறார். அதைக் கேட்டு ராதிகா கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications