பாக்கியலட்சுமி: இனியாவை அசிங்கப்படுத்திய கோபி.. பாக்யா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சி கொடுத்த ராதிகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 23ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா டான்ஸ் ப்ரோக்ராமில் கோபி அதிர்ச்சி கொடுக்கிறார். கோபிக்காக ராதிகா முக்கிய முடிவு எடுக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகாவும், கோபியும் பேசுகின்றனர். அப்போது இன்னும் ரெண்டு நாளில் வீட்டை காலி பண்ணிடலாம் என்று ராதிகா சொன்னதும் தன்னால் வீட்டை விட்டு வர முடியாது, ஆனால் எனக்கு நீயும் வேணும் மயூவும் வேணும் அதனால் இந்த வீட்டிலேயே ஒன்றாக இருப்போம் என்று கோபி உறுதியாக சொல்லிவிட்டு படுத்து விடுகிறார்.

அதைத்தொடர்ந்து பாக்யா மயூக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது, கதையை கேட்காமல் சோகமாக இருக்கிறார். அது பற்றி பாக்கியா விசாரிக்கும் போது நாங்க இந்த வீட்டை விட்டு கண்டிப்பா போகத்தான் வேணுமா என்று மயூ பாவமாக கேட்கிறார். அதற்கு பாக்கியா ஆமா அதுதான் நல்லது. இந்த வீட்டில் உனக்கு பல கசப்பான நினைவுகள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்துடு.
நீ உங்க அப்பா அம்மாவோடு சந்தோஷமாக இருந்த நாட்கள் உனக்கு நினைவில் இருக்கட்டும். அந்த வாழ்க்கையை மீண்டும் நீ வாழனும் என்று சொல்கிறார். அதற்கு நான் உங்களை மிஸ் பண்ணுவேன் என்று மயூ சொல்ல, உனக்கு என்னை பார்க்க வேண்டும் என்றால் நீ எப்ப வேணாலும் இந்த வீட்டுக்கு வரலாம். அதுபோல எனக்கு உன்னை பார்க்க வேண்டும் என்றால் நான் உன்னை வந்து பார்க்கிறேன் என்று மயூவை சமாதானப்படுத்துகிறார்.

பிறகு அடுத்த நாள் காலையில் இனியா டான்ஸ் காம்பெடிஷன்க்கு ரெடியாகி கொண்டிருக்கிறார். தனக்குத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டேனா என்று இனியா செக் பண்ணிக் கொண்டிருக்கும்போது ஜெனி நீ எல்லாம் சரியா எடுத்து வச்சிருக்கிற. நான் பார்த்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் கோபி ராதிகாவையும் இனியாவின் டான்ஸ் பார்ப்பதற்கு கூப்பிடுகிறார். ஆனால் ராதிகா நான் வரவில்லை என்று சொல்ல, இல்லை நீ கண்டிப்பா வரணும் இனியா வெற்றி பெறுவதை பார்க்க உனக்கு ஆசை இல்லையா? என்று கேட்க, அதற்கு ராதிகா ஆசையாகத்தான் இருக்கிறது என்று சொல்கிறார்.

ஆனால் நீ கண்டிப்பா வரணும் என்று கட்டாயப்படுத்தி கோபி ராதிகாவை கூப்பிடுகிறார். அப்போது கூட ஈஸ்வரி அதான் ராதிகா வரலைன்னு சொல்றாளே விடு என்று சொல்கிறார். ஆனால் கோபி கண்டிப்பாக ராதிகா வரணும் என்று சொல்கிறார். அப்போது இனியா இவங்க வந்தா நான் எப்படி என் பிரண்ட்ஸு கிட்ட இவங்கள அறிமுகப்படுத்த முடியும் வர வேண்டாம் என்று சொல்லிப் பார்க்கிறார்.
ஆனால் கோபி விடாப்பிடியாக ராதிகா வந்து ஆக வேண்டும் என்று கூட்டிக்கொண்டு போகிறார். பிறகு டான்ஸ் ப்ரோக்ராம் நடப்பதற்கு முன்பு எல்லாரையும் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அப்போது தன்னுடைய பெற்றோரும் தன்னோடு இருக்க வேண்டும் என்று இனியா ஆசை பட அவர்களை ஸ்டேஜிக்கு அழைக்கிறார்கள்.
அந்த நேரத்தில் கோபி ராதிகாவை வருமாறு கூப்பிடுகிறார். ஆனால் இது சரிவராது என்று ராதிகா சொல்லியும் அதை கேட்காமல் ராதிகாவை அழைத்துப் போகிறார். அப்போது பாக்யாவும் வேலைக்கு வருகிறார். இதைப் பார்த்ததும் இனியாவின் காலேஜ் நண்பர்கள் இனியாவுக்கு இரண்டு அம்மாவா? வித்யாசமான குடும்பமா இருக்கே என்று இனியாவை பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications