பாக்கியலட்சுமி: மாஸ் காட்டிய ராதிகா.. பட்டும் திருந்தாத பாக்யா.. சுயநலமாக கோபி எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 31ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகா வீட்டை விட்டு போனதை நினைத்து பாக்யா அழுது கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கோபி எடுத்த முடிவால் ஈஸ்வரி அதிர்ச்சியில் இருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகா வீட்டில் இருந்து கிளம்பும்போது இனியா ராதிகாவை கட்டிப்பிடித்து அழுகிறார். அப்போது ராதிகா உன்னுடைய அப்பாவை உன்கிட்டையே விட்டுட்டு போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். ராதிகா போகும்போது வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் தடுத்து பார்க்கிறார்கள்.

ஆனால் ராதிகா சிரித்த முகமாக ஆட்டோவில் ஏறி போகிறார். கோபி கதறி அழுதும் ராதிகா கண்டுகொள்ளாமல் போய்விட்டார். அதைத் தொடர்ந்து பாக்கியா தன்னுடைய அறையில் இருக்கும் போது ராதிகா ட்ரிப் போகும்போது செய்த செயல் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கிறார். பிறகு ராதிகா வெளியே போகும்போது பீல் பண்ணுனாலும் வெளியே சிரித்துக்கொண்டு போனதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் வந்த செல்வி நானும் ராதிகா இப்படி பண்ணுவாங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. கோபி சாரை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி ராதிகா எவ்வளவு கம்பீரமா இருந்தாங்க. ஆனா இவரை கல்யாணம் பண்ணிட்டு ராதிகா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு பாக்கியா, ராதிகா இப்ப எடுத்த முடிவு தெளிவாக எடுத்துருக்காங்க. பொம்பளைங்களுக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம் என்று புலம்பி அழுது கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ராதிகா வீட்டை விட்டு போனதை நினைத்து கோபி அழுது கொண்டிருக்கிறார்.
இதை தொடர்ந்து கமலா வீட்டிற்கு போன ராதிகாவிடம் என்ன நடந்தது என்று கமலா விசாரிக்கிறார். அதோடு மாப்பிள்ளை வரலையா என்று கமலா கேட்கிறார். அதற்கு ராதிகா இப்போதைக்கு என்கிட்ட எதையும் கேட்காதே என்று சொல்கிறார். ஆனாலும் கமலா மீண்டும் மீண்டும் கேட்கிறார். அவரை அந்த வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டியா? அந்த பாக்கியா தான் ஏதாவது பண்ணி இருப்பாய் என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
பல நாள் காத்திருப்பு கைகூடியது! சந்தோஷ செய்தி பகிர்ந்த அனிதா சம்பத்.. குவியும் வாழ்த்து
அதற்கு ராதிகா எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக்கலாம் என்று ரூமுக்கு போய் விடுகிறார். மறுபக்கத்தில் கோபி ராதிகாவை நினைத்து அழுது கொண்டு இருக்க, திடீரென்று ரூமை விட்டு வெளியே வந்து ஈஸ்வரியிடம் நான் ராதிகாவை போய் பார்த்துட்டு வரேன் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி இப்போ நீ வெளியே எல்லாம் போக வேண்டாம் என்று தடுக்கிறார்.
ஆனால் கோபி நான் போய் ஆவேன் என்று பிடிவாதமாக இருக்க, சரி போய் பார்த்துட்டு வந்துடு என்று அனுப்பி வைக்கிறார். அப்போது இனியா டாடி நீங்க இந்த வீட்டுக்கு வர மாட்டீங்களா? அவங்க கூடவே இருந்துடுவீங்களா? என்று கோபியை கட்டிப்பிடித்து அழுகிறார். அதற்கு கோபி இல்லை இனியா கண்டிப்பா வருவேன் என்று சொல்லிவிட்டு ராதிகா வீட்டிற்கு வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications