கணேஷ் விஷயத்தில் ராதிகா சொன்ன வார்த்தை.. அனைவரையும் கண்கலங்க வைத்த நிலா.. எழிலின் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜனவரி 3ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் எழில் மற்றும் அமிர்தா விஷயத்தில் என்ன முடிவெடுக்கலாம் என்று ராதிகா அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் ராதிகா சொன்ன வார்த்தையை கேட்டு கோபி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அமிர்தாவும் நிலாவும் ரூமில் தனியாக இருக்கும் போது எழில் அங்கு வந்து நிலாவிடம் தூங்கலையா என்று கேட்க, அதற்கு நிலா பாப்பா எனக்கு தூக்கம் வரலப்பா வாங்க விளையாடலாம் என்று கூப்பிட, அதற்கு எழில் இப்போ வேண்டாம் நேரம் ஆகிட்டு படுத்து தூங்கலாம் காலையில் சீக்கிரம் எழுந்து விளையாடலாம் என்று சொல்லி சமாதானப்படுத்தி குழந்தையை தூங்க வைக்கிறார்.
பிறகு இதைப் பார்த்து கண்கலங்கும் அமிர்தாவிடம் பக்கத்தில் சென்று உட்கார்ந்து எது நடந்தாலும் பார்த்துக்கலாம் என்கூட நீ இருந்தா மட்டும் போதும் நீ இல்லன்னா வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு நீ என்ன விட்டுட்டு போயிடமாட்டல என்று கேட்க அதற்கு அமிர்தா ஏன் எழில் இப்படி எல்லாம் கேக்குறீங்க? நான் என்னைக்கும் உங்க கூட தான் இருப்பேன் என்று அமிர்தா சொல்கிறார்.

மறுபக்கத்தில் கோபி ஈஸ்வரியோடு பெட்டில் படுத்து இருக்கிறார். உள்ளே வரும் ராதிகா வாங்க கோபி மேல இருக்கிற ரூமை நான் ரெடி பண்ணிட்டேன். அங்க படுக்கலாம் என்று கூப்பிட, அதற்கு ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் நீ வேணா போயி அங்க படு.கோபி இங்கே இருக்கட்டும் என்று சொல்ல, அதற்கு கோபி இல்லம்மா நான் தான் அந்த ரூமை ரெடி பண்ண சொன்னேன் என்று ஈஸ்வரியை சமாதானப்படுத்தி விட்டு வெளியே கிளம்பி போகிறார்.
அப்போது ராமமூர்த்தி ஹாலில் படுப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய, அதற்கு ராதிகா நாங்க மேல இருக்குற ரூமில் படுக்க போகிறோம் நீங்க உங்கள் ரூமில் படுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மேலே இருக்கும் ரூமிற்கு போனதும் கோபி என்ன நடந்தாலும் பாத்துக்கலாம், நான் இருக்கேன் என்று சொல்லிட்டேன். ஆனா எழில் வாழ்க்கையில் அடுத்து என்ன பண்றதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல என்று ராதிகாவிடம் வருத்தப்படுகிறார்.
அப்போது ராதிகா இப்ப ராஜேஷ் வந்து எனக்கு மயூவும், ராதிகாவும் வேணும்னு கேட்டா நீங்க என்ன பண்ணுவீங்க? என்று கேட்க, அதற்கு கோபி அது எப்படி முடியும்... நீ என்னுடைய மனைவி. பழையதை எல்லாம் மறந்துட்டு நாம புது வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம் என்று சொல்கிறார். அதற்கு ராதிகா அதுபோலத்தான் அமிர்தாவும் பழசு எல்லாத்தையும் மறந்துட்டு எழில் தான் உலகம் என வாழ்ந்துட்டு இருக்கா.

அவள் எழிலோடுதான் இருக்கணும் அவ மனசு முழுக்க எழில்தான் இருக்கான் என்பது கணேசுக்கு புரிய வச்சா அவனா விலகிப் போயிடுவான், இல்லன்னா அதற்கான வேலையை நாம செய்யணும் என்று சொல்கிறார். அடுத்த நாள் பாக்கியா எல்லோருக்கும் காபி கொடுக்க அங்கு ஓடிவரும் நிலா பாப்பா தாத்தா, பாட்டி என்று எல்லாரிடமும் பாசமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது ராமமூர்த்தி இந்த குழந்தையை எப்படி மா விட முடியும். என் பேத்தி எப்போதும் என் கூட தான் இருப்பா... எவன் வந்து கேட்டாலும் கொடுக்க மாட்டேன் என்று கண்கலங்க, பாக்யா ஈஸ்வரி என எல்லாரும் அதை பார்த்து கண்கலங்கி கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications