கம்பெனியை மூடிய கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த பாக்கியா.. ஜெனி வாழ்க்கையில் புது வில்லன்! எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜனவரி 9ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் கோபி கம்பெனியை இழுத்து மூடி இருக்கும் நேரத்தில் பாக்யாவிற்கு புது வாய்ப்புகள் வர தொடங்கி இருக்க அந்த சந்தோஷமான செய்தியை வீட்டில் எல்லோரிடமும் சொன்னதும் கோபி அதிர்ச்சி ஆகிறார்.

கோபியின் இளமை படுமோசமாக மாறி இருக்கும் நிலைமையில் ராதிகாவிடம் உண்மையை சொல்லாமல் கோபி மறைத்து கொண்டு இருக்க அதனால் புது பிரச்சனை வர இருக்கிறது. அதே நேரத்தில் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணி இருந்த கோபி இப்போது மீண்டும் குடிக்க தொடங்கி இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் செழியன் மற்றும் ஜெனி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழக்கூடாது என்பதற்காக ஜெனியின் அப்பா மோசமான செயலை செய்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial january 9th episode Gobi closed the company

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் ஆபீசை இழுத்து முடிய கோபி தன்னுடைய நண்பனோடு பழைய நினைவுகளை நினைத்து பார்த்து ஆபீசிலிருந்து சோகமாக வெளியே வருகிறார்.. மறுபக்கத்தில் பாக்கியா எழில் ராமமூர்த்தி எல்லோரும் ரெஸ்டாரண்ட் வாடகை எடுப்பதற்காக அட்வான்ஸ் கொடுப்பதற்காக காத்திருக்கின்றனர்.

மறுபக்கத்தில் மன வருத்தத்தோடு வீட்டுக்கு வந்த கோபி இடம் ராதிகா என்ன சீக்கிரமா வந்துட்டீங்க. வேலை முடிஞ்சிடுச்சா? ரொம்ப டயர்டா இருக்கீங்களா? என்று பேசிக் கொண்டிருக்க அதற்கு கோபி என்னைக்குமே வேலை பத்தி கேட்க மாட்ட ஆனா இன்னைக்கு வேலையை பத்தி கேட்கிறா? இவளுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சா என்ன ஆகும் என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial january 9th episode Gobi closed the company

அடுத்த கட்டத்தில் பாக்யா அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு வீட்டிற்கு வருகிறார். வந்ததும் வீட்டில் எழில் எல்லார்கிட்டயும் விஷயத்தை சொல்லலாமா வேண்டாமா என்று கேட்க அதற்கு பாக்கியா இப்போ சொல்ல வேண்டாம் என்று சொல்ல, அதற்கு எழில் அதெல்லாம் முடியாது இப்பவே சொல்லணும் என்று மொத்த குடும்பத்தையும் கீழே வரச் சொல்லி ரெஸ்டாரண்டுக்கு அட்வான்ஸ் கொடுத்த விஷயத்தை சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

ஆனால் கோபி மட்டும் பாக்கியா வளர்ச்சியை கண்டு அதிர்ச்சி அடைகிறார். அப்போது செழியன், அமிர்தா, இனியா என எல்லோரும் பாக்யாவுக்கு வாழ்த்து சொல்ல அந்த நேரத்தில் ஈஸ்வரி வீட்டில் எவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு உன்னால சமாளிக்க முடியுமா என்று கேட்க அதற்கு எழில் அம்மா வேணான்னு தான் சொன்னாங்க நானும் தாத்தாவும் தான் கம்பல் பண்ணி கூட்டிட்டு போனோம் என்று சொல்கின்றார்.

அதற்கு ராமமூர்த்தி இதைவிட எவ்வளவோ பெரிய பிரச்சனை எல்லாம் இந்த வீடு பார்த்து இருக்கு. அப்ப எல்லாம் அவ பிசினஸ் கவனிக்கலையா? இதெல்லாம் பாக்கியா நல்லபடியா பாத்துக்குவா.. பிசினஸ்னாலே என்னன்னு தெரியாம தொழில் ஆரம்பிச்சா ஆனா இன்னைக்கு பிசினஸ் எப்படி பண்ணனும்னு கத்துக்கிட்டு இந்த அளவு வளர்ந்து இருக்கா என்று பாராட்டுகிறார்.

Baakiyalakshmi Serial january 9th episode Gobi closed the company

அப்போது இனியா நீ தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று பாக்கியாவை கட்டிப்பிடித்து பேசிக் கொண்டிருக்க கோபி இதே வார்த்தையை இனியா தன்னிடமும் சொன்னதை நினைத்துப் பார்க்கிறார். அடுத்து செழியன் ஜெனிக்கு பொக்கே உடன் சாரி என்ற ஒரு போஸ்ட் கார்டு அனுப்ப அதை பார்த்து ஜெனியின் அப்பா இந்த விஷயம் ஜெனிக்கு தெரியக்கூடாது என்று சொல்லி அதை குப்பை தொட்டியில் வீசுகிறார்.

Baakiyalakshmi Serial january 9th episode Gobi closed the company

அடுத்ததாக கோபி தன்னுடைய நண்பருடன் பாருக்கு வந்து நான் ஒன்னும் இல்லாம போனது கூட எனக்கு கவலை இல்லை.... ஆனால் பாக்கியா ரெஸ்டாரண்ட் தொடங்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கா.. அதை பார்க்கும்போது தான் எனக்கு பொறாமையும், வயித்தெரிச்சலா இருக்கு என்று குடித்துக் கொண்டே புலம்பி கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+