பாக்கியலட்சுமி சீரியலில் திடீரென மாறிய முக்கிய நடிகர்.. இனி இவருக்கு பதில் இவர்தான்.. இனி தான் ஆட்டமே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அப்பா கேரக்டரில் நடித்து வந்த நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
ஏற்கனவே ஜெனியின் அப்பா பல மாதங்களாகவே வெளிநாட்டில் இருப்பதாக கதையை கொண்டு போய்க் கொண்டிருந்தனர். இந்த நிலையில் புதியதாக ஒரு நடிகர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அது யார் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம். அதோடு இனி சீரியலில் கதை எப்படி போகப் போகிறது என்பதையும் பார்ப்போம்.

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு சில மாதங்களாகவே சீரியல் பயணித்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதுவும் அமிர்தாவின் முதல் கணவர் கணேசன் மீண்டும் உயிரோடு வந்தது சின்னத்திரை ரசிகர்களையே அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த மாதிரி ஒரு மோசமான முன்னுதாரணம் வேண்டவே வேண்டாம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் கதைப்படி இன்னமும் கணேசன் கேரக்டர் சீரியலில் இருந்து கொண்டு தான் இருக்கிறார். அதே நேரத்தில் செழியனின் வாழ்க்கையிலும் மாலினி என்ற புயல் வந்து செழியன் மற்றும் ஜெனியை பிரித்து வைத்திருக்கின்றனர். இத்தனை பிரச்சனைகளில் பாக்கியா, தனி ஆளாக எப்படி தாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நோக்கி தான் கதை போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பாக்கியா பொருள்காட்சியில் கேட்டரிங் தொடங்கி இருந்த நிலையில் அங்கும் பல பிரச்சனைகள் பாக்யாவுக்கு வந்திருந்தது. பாக்யாவிடம் கேட்டரிங் கேட்ட நபர் பாக்யாவை பிரச்சனையில் மாட்டி விட வேண்டும் என்று கேட்டுப் போன சாப்பாடு பாக்கியா கேட்டரிங் கொடுப்பதாக கம்ப்ளைன்ட் செய்திருந்ததால் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து செக் பண்ணி பார்த்துவிட்டு அங்கு எந்த இடத்திலுமே கெட்டுப் போன சாப்பாட்டுக்கான அறிகுறி இல்லை.
அதுபோல இங்கே எல்லாமே தரமான பொருட்கள் தான் பயன்படுத்துகிறார்கள் என்று சர்டிபிகேட் கொடுத்திருந்தனர். இப்படியாக பாக்கியாவுக்கு வந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அதே நேரத்தில் இனி செழியன் மற்றும் ஜெனி எப்படி சேரப் போகிறார்கள் செழியன் மீது தவறில்லை என்பதை பாக்யா எப்படி நிரூபிக்க போகிறார். அதுபோல எழில் வாழ்க்கையில் அமிர்தாவின் முதல் கணவரால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஜெனியின் அப்பாவாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் பல மாதங்களாகவே சீரியலில் காட்டப்படவில்லை. அவர் வெளிநாட்டில் இருப்பது போன்றே கதை போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகனின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அறிமுகம் ஆகி இருக்கிறார். இதனால் இனி செழியன் வாழ்க்கையில் என்ன பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications